search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் பந்தயத்தில் பங்கேற்கும் குதிரைகளுக்கு தீவிர பயிற்சி
    X

    ஊட்டியில் பந்தயத்தில் பங்கேற்கும் குதிரைகளுக்கு தீவிர பயிற்சி

    • மைதானத்தை சீர் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • ஏப்ரல் 1-ந் தேதி குதிைர பந்தயம் தொடங்குகிறது

    ஊட்டி,

    கோடை சீசனின் போது நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாபயணிகளை கவர பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு நாளில் தொடங்கி ஜூன் மாதம் வரை ஊட்டியில் குதிரை பந்தயங்கள் நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு முன்கூட்டியே ஏப்ரல் 1-ந் தேதி பந்தயங்கள் தொ டங்குகின்றன. இதற்காக பெங்களூரு, சென்னை, புனே உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பந்தய குதிரைகள் வரவழைக்கப்படும். அதன்படி பல்வேறு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஊட்டிக்கு குதிரைகள் அழைத்து வரப்பட்டுள்ளன. அந்த குதிரைகளுக்கு தினந்தோ றும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து மை தானத்தை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. குதிரைகள் ஓடும் பாதையில் உள்ள புற்கள், உரமிட்டு சமன்படுத்தப்பட்டு வருகிறது.

    ஓடுதளத்தில் உள்ள புற்கள் ஒரே சீராக வளர தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருவதாக மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×