என் மலர்tooltip icon

    நீலகிரி

    சுற்றுலா தலங்கள் அமைப்பதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம் கக்குளா பகுதியில் சுற்றுலா தலங்கள் அமைப்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சந்திப் நந்தூரி, மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆய்வு மேற்கொண்டனர்.

    அருகில் அரசு துறை அலுவலர்கள் குன்னூர் கோட்டாட்சியர் பூசனகுமார், கோத்தகிரி வட்டாட்சியர் காயத்ரி, நடுஹட்டி ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சி தலைவர் போஜன், காவிலேரைபீமன் உடன் இருந்தனர். பின்னர் கோத்தகிரி நெடுகுளா ஊராட்சிக்குட்பட்ட கஸ்தூரிபாய் நகர் பகுதியில் சுற்றுலா தலங்கள் அமைப்பதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    • கோடை சீசன் தொடங்கிய நிலையில், கடந்த ஒரு மாதமாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.
    • தாவரவியல் பூங்காவில் பூத்தும் குலுங்கும் மலர்களை கண்டு ரசித்து, அதன் முன்பு செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, வார விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    தற்போது சமவெளி பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக வெயிலில் இருந்து தப்பிக்கவும், இதமான கால நிலையை அனுபவிக்கவும் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

    கோடை சீசன் தொடங்கிய நிலையில், கடந்த ஒரு மாதமாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.

    சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட பகுதிகளில் குடும்பத்துடன் சுற்றி பார்த்தனர்.

    தாவரவியல் பூங்காவில் பூத்தும் குலுங்கும் மலர்களை கண்டு ரசித்து, அதன் முன்பு செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக நகரின் முக்கிய சாலையான கமர்சியல் சாலை, பூங்கா செல்லும் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    • வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தண்ணீரை சேமிக்க திட்டம் நடைபெறுகிறது.
    • ரூ.10 லட்சம் மதீப்பிட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பான்மையாக முதன்மைத் தொழிலாக தேயிலை தொழில் நடைபெற்று வருகிறது. அதற்கு அடுத்த அடிப்படையாக மலை காய்கறிகள் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், அவரை, போன்ற எண்ணற்ற மலைக்காய்கறிகள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய ஆங்கில காய்கறிகளும் அதிகமாக பயிரிடப்பட்டு வருகின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வருவதால் தண்ணீரை சேமிக்க ஆங்காங்கே தோட்டக்கலைத் துறை மூலமாக விவசாய நிலங்களுக்கு அருகாமையில் தடுப்புச் சுவர்களும், விவசாயத்திற்கு ஏற்ப நீரோட்ட வசதிகளை செய்யும் வகையில் ரூ.10 லட்சம் மதீப்பிட்டில் தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணி காவிலேரை பகுதியில் நடைபெற்று வருகிறது.

    • கடந்த 50 ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர்.
    • இதனால் கிராம மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கட்டப்பெட்டு அருகில் உள்ள பில்லிக்கம்பை சக்தி நகர் கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்து வருகிறது.

    கோத்தகிரி கட்டப்பெட்டு அருகில் உள்ளது பில்லிக்கம்பை சக்தி நகர் கிராமம். இங்கு 200 -க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் கடந்த 50 ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர். இவர்களது அடிப்படை தேவையான சாலை வசதி மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. அந்த கிராமத்துக்கு செல்லும் சாலை பயன்படுத்த முடியாத வகையில் கரடுமுரடாக காட்சி அளிக்கிறது.

    இவர்கள் பல முறை பல அதிகாரிகளிடமும், அரசியல் பிரமுகர்களிடமும் மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவர்களது கிராமம் பிரதான சாலையில் இருந்து வனப்பகுதியில் 4 கிலோமீட்டர் செல்வதால் காலை வேளையில் குழந்தைகளை பள்ளி வாகனங்களுக்கு கூட இந்த தொலைவை கடந்து வந்து அவர்களே ஏற்றி விட வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

    மேலும் அவசர தேவைகளான மருத்துவம் உதவிக்காக அவசரஊர்தி வந்து செல்வதற்கு ஏற்றவாறு சாலை இல்லை என்பதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி அவர்களை தொட்டில் கட்டி தூக்கி வரும் சூழ்நிலை நிலவுகிறது. இதனால் கிராம மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

    மேலும் இவர்களுக்கான சிறந்த குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் சரியான முறையில் கிடைப்பதில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.

    • கண்ணாடி மாளிகையில் செல்பி எடுத்து ரசித்தனர்.
    • இத்தாலியன் பூங்கா ஆகிய இடங்களை கண்டு ரசித்து புல் மைதானங்களில் விளையாடி மகிழ்ந்தனர்.

    ஊட்டி,

    இயற்கை எழில் மிகுந்த நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். இங்கு அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    தற்போது சமவெளி பகுதியில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் ரம்மியமான சூழ்நிலை நிலவும் ஊட்டிக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்துள்ளது. பிற மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

    இவர்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் குவிந்து இங்கு நிலவும் அமைதியான மற்றும் குளிர்ச்சியான காலநிலையை அனுபவித்து வருகின்றனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் பெரணி இல்லம், கண்ணாடி மாளிகை, இத்தாலியன் பூங்கா ஆகிய இடங்களை கண்டு ரசித்து புல் மைதானங்களில் விளையாடி மகிழ்ந்தனர்.

    கண்ணாடி மாளிகையில் பராமரிக்கப்படும் வண்ண மலர்களை பார்வையிட சுற்றுலாபயணிகள் அதிக ஆர்வம் காட்டுவதுடன் செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்கிறார்கள். விரைவில் ஊட்டியில் கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி நடைபெற உள்ள நிலையில் தற்போதே சுற்றுலாபயணிகள் வருகை அதிகரிக்கத் தொடங்கி யுள்ளது வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கலைநிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் நடந்தது.
    • ரூ.15 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை ஆகி இருந்தது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் முதலாவது புத்தக திருவிழா கண்காட்சி கடந்த 5-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடந்தது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவ- மாணவிகள், பழங்குடியினர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் நடந்தது.

    புத்தக திருவிழாவில் பல்வேறு புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் மிகவும் பழமை வாய்ந்த புத்தகங்கள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது. இது உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாபயணிகளிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.

    புத்தக திருவிழா கடந்த 14-ந் தேதி நிறைவு பெறுவதாக இருந்தது. புத்தக ஆர்வலர்கள், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று 19-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. கடந்த 5-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 33,257 பார்வையாளர்கள் புத்தக கண்காட்சியை பார்வையிட்டு இருந்தனர். இதில் ரூ.15 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை ஆகி இருந்தது.

    பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் இனி ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்படும் என அதிகாரிகள் தெரி வித்தனர்.

    • 30 நாட்கள் 30 உபயதாரர்கள் மூலம் நாள்தோறும் தேர் திருவிழா வானது நடைபெற உள்ளது.
    • பாரம்பரிய நடனங்களை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்

    ஊட்டி,

    ஊட்டியின் காக்கும் கடவுளாய் திகழும் மாரியம்மன், காளியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஆண்டு தோறும் ஊட்டி மாரியம்மன், காளியம்மன் சித்திரை தேர் திருவிழா மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறுவது வழக்கம்.

    இந்த விழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியது. 30 நாட்கள் 30 உபயதாரர்கள் மூலம் நாள்தோறும் தேர் திருவிழா வானது நடைபெற உள்ளது.

    முதல் நாள் தொடக்கமாக நீலகிரி மாவட்ட ஒக்கலிகர் சங்கம் சார்பில் முதல் தேர்த் திருவிழா நடந்தது. இதில் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றது. இதை திரளான பொது மக்கள் கண்டு ரசித்தனர்.

    தேர்த்திருவிழாவில் மாரியம்மன் புலி வாகனத்தில் பூ பல்லக்கில் ஆதிபராசக்தியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மாலையில் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

    ஒக்கலிகர் சங்க நிர்வாகிகள் சதிஷ்குமார்,சதிஷ்,ரவி,மோகன்,கிருஷ்ணன்,வினோத்,அசோக்,பிரகாஷ்,சுமந்த்,சந்தோஷ்,சைலிஷ்,சுரேஷ்,மோகன்,தீப்பு,குமார்,சத்தியநாராய ணன்,மோகன்ராஜ் ஆகியோர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்சியை சுந்தர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்

    கலைநிகழ்சிக்கான ஏற்பாடுகளை லோகநாதன்,சம்பத்,சிவராஜ்,மோகன்,நாராயணன்,சங்கர்,சீனீ,மோகன்,செந்தில்குமார்,மஞ்சுநாத்,ரவி,சுமந்த்,சந்திப் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

    இதில் நீலகிரி மாவட் டத்தில் உள்ள அனைத்து ஒக்கலிகர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளும் உறுப்பினர்களும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

    • உருளைக்கிழங்கிற்கு எப்போதுமே விலை அதிகமாக கிடைக்கும்.
    • உருளைகிழங்கு விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மழை காய்கறி விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி, பீன்ஸ் உட்பட பல்வேறு வகையான மழை காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது.

    குறிப்பாக உருளைக்கிழங்கு மற்றும் கேரட் அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது. பொதுவாகவே நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மலை காய்கறிகளுக்கு விலை கூடுதலாக கிடைக்கும். அதுவும் உருளைக்கிழங்கிற்கு எப்போதுமே விலை அதிகமாக கிடைக்கும்.

    சாதாரணமாக கடைகளில் கிலோ ஒன்று ரூ.50 வரை விற்பனை செய்யப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இதனால், பெரும்பாலான விவசாயிகள் உருளைக்கிழங்கு பயிரிட்டு வருகின்னர்.

    இந்நிலையில், கடந்த வாரம் வரை நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு கிலோ ஒன்றிற்கு ரூ.50 வரை கிடைத்து வந்தது. இந்தநிலையில் கோலார் மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளில் இருந்து தற்போது உருளைக்கிழங்கு அதிக அளவு வரத் தொடங்கி உள்ளன. இந்த கிழங்கு ரூ.15 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

    இவைகள் தற்போது நீலகிரி மாவட்டத்திற்கும் அதிகளவு வர தொடங்கியுள்ளதால் நீலகிரி உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு விலை சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களாக ஊட்டி உருளைக்கிழங்கு கிலோ ஒன்று ரூ.20 முதல் 25 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதேசமயம் உருளைக்கிழங்கு கிலோ ஒன்று ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது கிலோ ஒன்று ரூ.15 முதல் கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பள்ளி ஆண்டு அறிக்கையையும் வாசிக்கப்பட்டது.
    • விழாவில் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் சோலாடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 25-ம் ஆண்டு வெள்ளி விழா நடைபெற்றது.

    இதில் ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவை ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவில் ஆசிரியர் ரமேஷ் தொகுத்து வழங்கினார். தலைமை ஆசிரியர் பியூலா வரவேற்றார். பள்ளி ஆண்டு அறிக்கையை ஆசிரியை ஏஞ்சலா பொன்மணி வாசித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஊட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சந்தோஷ், நீலகிரி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலகிருஷ்ணன், வார்டு உறுப்பினர் சத்யராஜ் , சமூக ஆர்வலர் சம்பத் மற்றும் அரசு அலுவலர்கள், சோலாடா, ஆல்காட் நகர், பன்னி மரம், காம்பளை, கல்லட்டி, மாசிக்கல், ஆசான துரை, சுற்று வட்டார கிராம தலைவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் பலர் விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் குழந்தைகளுக்கு பரிசுகளை ஆசிரியை கல்பனா வழங்கினார். முடிவில் ஆசிரியை மல்லிகா நன்றி கூறினார்.

    • புத்தகத் திருவிழா மாணவ, மாணவிகள், சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தது
    • பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பழமை வாய்ந்த புத்தகங்களும் இங்கு அமைக்கப்பட்டு இருந்தன.

    ஊட்டி,

    ஊட்டியில் முதல் முறையாக நடைபெற்ற புத்தகத் திருவிழா பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாக கவர்ந்தது. கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த புத்தகத் திருவிழாவை ஆ.ராசா எம்.பி. தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு புத்தக அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பழமை வாய்ந்த புத்தகங்களும் இங்கு அமைக்கப்பட்டு இருந்தன. இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்ற நிகழ்சியில், சுற்றுலாதுறை அமைச்சர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புத்தக திருவிழாவிற்க்கு சிறப்பான பங்களிப்பு வழங்கியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதில் அதிக நன்கொடை வழங்கிய ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயனுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

    • ஏப்ரல் 2-வது வாரத்தில் பூங்காவில் பூக்கள் பூத்து குலுங்கும்.
    • கோத்தகிரி மிலார் செடிகள் அகற்றும் பணி தொடங்கி உள்ளது.

    ஊட்டி

    ஊட்டியில் பனி குறைந்துள்ள நிலையில், தாவரவியல் பூங்காவில் மலர் செடிகளை பனியில் இருந்து பாதுகாக்க வைக்கப்பட்டிருந்த கோத்தகிரி மிலார் செடிகள் அகற்றும் பணி தொடங்கி உள்ளது.

    ஆண்டு தோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டிக்கு பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு தோட்டக்கலைத்துறை சார்பில் ஆண்டு தோறும் மே மாதம் பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சி உலக புகழ் பெற்றதாகும். இந்த கண்காட்சி நடத்துவதற்காக தற்போது பூங்காவை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

    மலர் கண்காட்சிக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல, 35 ஆயிரம் தொட்டிகளிலும் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை ஊட்டியில் பனி பொழிவு அதிகமாக காணப்பட்டது. இதனால், மலர் நாற்றுக்கள் கருகும் அபாயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இந்த மலர் நாற்றுகள் கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு அரண் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது.

    தற்போது ஊட்டியில் பனியின் தாக்கம் முற்றிலும் குறைந்துள்ளதால் தாவரவியல் பூங்காவில் 35 ஆயிரம் தொட்டிகளில் வைக்கப்பட்டிருந்த கோத்தகிரி மிலார் செடிகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாள்தோறும் இந்த தொட்டிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் இந்த தொட்டிகளில் மக்களின் மனங்களை கவரும் வகையில் பல வண்ண மலர்கள் பூத்து குலுங்கும் என அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்தனர். 

    • கூடலூர் நகர தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
    • முதியோர்களுக்கு மதியம் உணவு வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் முன்னிட்டு நீலகிரி மாவட்டம் கூடலூர் நகர தி.மு.க. சார்பில் பிறந்தநாளை விழா கொண்டாடப்பட்டது. இதில் நகர செயலாளர் இளஞ்செழியன் தலைமையில் கூடலூர் முதியோர் இல்லம் அஷா பவனில் முதியோர்களுக்கு மதியம் உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர அவை தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் ஜபருல்லா, மாவட்ட பிரதிநிதி நெடுஞ்செழியன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ரெனால்ட் வின்சென்ட், தேவர்சோலா பேரூர் செயலாளர் சுப்பிரமணி, ஒன்றிய துணை செயலாளர் வெங்கடசலம், இளைஞர் அணி விஜயகுமார், தொண்டர் அணி அமைப்பாளர் ஜானி, வார்டு செயலாளர்கள் அசைணார், ராஜகோபால், கிருஷ்ணமூர்த்தி, மல்லிகராஜ், சடையபிள்ளை, இஸ்மாயில், கனகராஜ், சாதிக் பரசுராமன், நகர் மன்ற உறுப்பினர்கள் சத்யசீலன், நிர்மல் மும்தாஜ், தாஹீர், அபுதாஹீர், மூசா, கணேசன், செல்வபாரதி, சாமிநாதன், மணல் மணி, முருகையா, ராமசந்திரன், ஜோசப் நடராஜ், பிரசாந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×