என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலகொலா ஊராட்சியில் 100 நாள் வேலை குறித்து ஆய்வு
    X

    பாலகொலா ஊராட்சியில் 100 நாள் வேலை குறித்து ஆய்வு

    • 7 பேர் கொண்ட குழுவினர் வேலைக்காக தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்
    • கிராமசபை கூட்டமும் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி,

    கோவை மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் அல்போன்ஸா தலைமையில் இத்தலார் ஊராட்சி மற்றும் நஞ்சநாடு ஊராட்சியை சேர்ந்ந தணிக்கையாளர்கள் 7 பேர் கொண்ட குழுவினர் நூறு நாள் வேலைக்காக தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்பகுதியில் குறிப்பிட்ட நாட்களில் முடிக்கப்பட்ட வேலையின் அளவு, நூறு நாள் வேலைக்காண ஊதியம் முறையாக, குறிப்பிட்ட நாட்களுக்குள் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளதா? போன்றவைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    கூட்டத்தில் பாலகொலா ஊராட்சி தலைவர் கலையரசி முத்து, துணைத்தலைவர் மஞ்சை.வி.மோகன், ஊட்டி ஊராட்சி கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சிந்துஜா, பாலகொலா ஊராட்சி செயலாளர் கார்த்திக், நூறுநாள் வேலைக்கான பாலகொலா ஊராட்சி பொறுப்பாளர் சரிதா ஆகியோருக்கு ஆய்வு குறித்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் நடைப்பெறும் வேலை, நடைபெற்று முடிந்துள்ள பகுதிகளுக்கும் தணிக்கையாளர் நேரடியாக சென்றும் தணிக்கை செய்ய உள்ளனர். இதனைத் தொடர்ந்து வருகிற 25-ந் தேதி நூறுநாள் வேலைக்காக சிறப்பு கிராமசபை கூட்டமும் பாலகொலா ஊராட்சியில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×