search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூர், பந்தலூரில் பச்சை தேயிலை விளைச்சல் பாதிப்பு
    X

    கூடலூர், பந்தலூரில் பச்சை தேயிலை விளைச்சல் பாதிப்பு

    • கோடை வறட்சியின் தாக்கம் அதிகரித்து உள்ளது.
    • தேயிலை விளைச்சல் பாதிப்பால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கூடலூர்,

    கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் தினமும் மூங்கில் காடுகள் உள்பட பல இடங்களில் காட்டுத்தீ பரவி வருகிறது. தொடர்ந்து நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. வறட்சியான காலநிலையால் விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. வனப்பகுதியில் போதிய பசுந்தீவனம் கிடைக்காததால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன.

    வழக்கமாக கோடை வறட்சியை தணிக்கும் வகையில் அடிக்கடி கோடை மழை பெய்வது வழக்கம். ஆனால், இதுவரை மழை பெய்யாததால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் தடுப்பணைகளும் வறண்டு வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை காணப்படுகிறது. விளைச்சல் பாதிப்பு இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தின் முக்கிய விவசாயமாக பச்சை தேயிலை சாகுபடி உள்ளது.

    இதில் கூடலூர் பகுதியில் வறட்சியின் தாக்கம் அதிகமாக உள்ளதால், நாளுக்கு நாள் பச்சை தேயிலை விளைச்சல் அடியோடு குறைந்து வருகிறது. ஏற்கனவே உரிய விலை கிடைக்காததால் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், தற்போது விளைச்சலும் குறைந்து வருவதால் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட செலவினங்களுக்கு கூட வருவாய் கிடைப்பதில்லை என விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் அடிக்கடி மழை பெய்யும். ஆனால், நடப்பு ஆண்டில் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. பச்சை தேயிலை விளைச்சல் பாதித்துள்ளதால் தொழிற்சாலைகளுக்கு தேயிலை வரத்தும் குறைந்துள்ளது என்றனர்.

    Next Story
    ×