என் மலர்
நீலகிரி
- இந்திய தேயிலை வாரியத்தின் 70-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
- தேயிலை கண்காட்சி வைக்க ஏற்பாடு செய்யப்படும்.
ஊட்டி,
குன்னூர் இந்திய தேயிலை வாரியத்தின் 70-வது ஆண்டு விழா குன்னூர் தென்னிந்திய தேயிலை வாரிய தலைமை அலுவலகத்தில் நடந்தது. . விழாவில் தென்னிந்திய தேயிலை வாரியத்தின் செயல் இயக்குனர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தேயிலை வாரியத்தின் முன்னாள் துணைச் செயலாளர் ரங்கையா கலந்து கொண்டார்.
முன்னதாக குத்து விளக்கு ஏற்றி தென்னிந்திய தேயிலை வாரியத்தின் செயல் இயக்குனர் முத்துக்குமார் பேசும்போது கூறியதாவது:-
அனைத்து சிறு, குறு விவசாயிகளும். தோட்ட அதிபர்களும். தேயிலை தொழிற்சாலை உரிமையா ளர்களும்.
வியாபாரிகளும். ஏலம் எடுப்பவர்களும் அனைவரும் ஒன்றிணைந்து தேயிலை வாரியத்துடன் இணைந்து செயல்பட்டால் தேயிலையை நல்ல நிலைக்கு எடுத்து செல்ல முடியும். நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஒரு மாதங்களில் குன்னூர், ஊட்டி, கோத்தகிரி போன்ற இடங்களில் மலர் கண்காட்சி. காய்கறி கண்காட்சி. பழக்கண்காட்சி போன்றவை நடக்கிறது.
அது போல தேயிலை கண்காட்சியும் நடத்த முடிவு செய்துள்ளோம். அதைப்பற்றி மாவட்ட கலெக்டரிடம் பேசி நல்ல முடிவு எடுத்து குன்னூரில் உள்ள காட்டேரி பூங்கா கோத்தகிரி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் எங்கு வைப்பது என்று முடிவு செய்து விரைவில் தேயிலை கண்காட்சி வைக்க ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் தேயிலை வாரிய உறுப்பினர்கள் தனஜெயம். ராஜேஷ் மற்றும் ஏராளமான சிறு, குறு தேயிலை விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் தேயிலை தயாரிப்பவ ர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
- உணவு பாதுகாப்பு துறையினர் கடைகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
- 2 பாக்கெட்டுகள், சாக்லேட் பார்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் பேக்க ரிகளில் தயாரிக்க ப்படும் கேக்குகள், காரம் மற்றும் இனிப்பு வகைகளில் அதிகப்ப டியான வண்ண ங்கள் கலக்கப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறையின மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் மற்றும் குன்னூர் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகுமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருள் தயாரித்த ஒரு பேக்கரியில் இருந்த 2 பாக்கெட்டுகள், சாக்லேட் பார்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் பேக்கரி கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேக்க ரியில் தயாரிக்கப்படும் இனிப்பு, கார வகைகள் மற்றும் கேக்குகளில் பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே வண்ணங்கள் சேர்க்கப்பட வேண்டும். மாறாக அதிகப்படியான அளவு வண்ணங்கள் சேர்க்க ப்படும் பேக்கரி களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் அனைத்து உணவு வணிகர்களும் தங்களின் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் உணவுப்பொருட்களை சுகாதாரமாக தயாரிக்க வேண்டும். பூச்சிகளை பிடித்து அழிக்கும் எந்திரங்களை தங்கள் வளாகங்களில் பொருத்தியிருக்க வேண்டும். பேப்பர்களில் எண்ணை பலகாரங்களை அடுக்கி வைக்கவோ, பஜ்ஜி போண்டா போன்ற உணவுப்பொருட்களை பேப்பரில் வைத்து பரிமாறவோ கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன.
- கடந்த ஒரு மாதமாக குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் 3 காட்டு யானைகள் சுற்றி திரிந்தன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன. இந்த யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து வருகின்றன. அப்படி வரும் யானைகள் பயிர்களையும், பொருட்களையும் சேதப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் 3 காட்டு யானைகள் சுற்றி திரிந்தன. இந்த யானைகள் அவ்வப்போது சாலைகளிலும் சுற்றி திரிந்து வாகனங்களை மறித்து வந்தன. இந்த பகுதியில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன.
இதனால் யானைகள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றன. அப்படி திரியும் யானைகள் பலாப்பழத்தை ருசித்து சாப்பிட்டு விட்டு அங்கேயே சுற்றி திரிந்து வருகின்றன. சில நேரங்களில் வனத்தையொட்டி குடியிருப்புக்குள்ளும் நுழைந்து வந்தது.
இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர். எனவே யானைை இங்கு இருந்து விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று வனத்துறையினர் யானைகளை அங்கிருந்து விரட்டு பணியில் ஈடுபட்டனர். நேற்று அந்த காட்டு யானைகளை அங்கிருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.
அப்போது யானைகள் அங்குள்ள சாலையை கடந்து மரப்பாலத்தை அடுத்த கே.என்.ஆர். பகுதிக்குள் நுழைந்தது. அப்போது அங்கு இருந்த பலா மரத்தை பார்த்ததும் யானைகள் துள்ளி குதித்து மரத்தை நோக்கி ஓடின.
அங்கு சென்றதும் 3 யானைகளில் ஒரு யானை தனது காலை தூக்கி மரத்தின் மீது வைத்து, துதிக்கையால் மரத்தில் இருந்த பலாப்பழத்தை பறித்து சுவைத்தது. இதனை அந்த வழியாக சென்றவர்களும், வனத்துறையினரும் வீடியோ எடுத்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- சந்தோசுக்கு திடீரென குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
- இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரவேனு மூன்ரோடு சக்கத்தாகம்பை வசித்து வரும் செந்தாமரை என்பவர் மகன் சந்தோஷ் (வயது 32).
இவர் தனியார் தேயிலை தொழிற்சாலையில் லாரி ஓட்டுநரக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. இந்தநிலையில் சந்தோஷ் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் கொட்டக்கம்பையில் இருந்து அரவேனு பகுதிக்கு லாரியை ஓட்டி சென்றார்.
அப்போது அவருக்கு திடீரென குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு லாரியை ஓட்டிய போதே மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் படுகாயம் அடைந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற
- சமீபத்தில் 2 பேரை கொன்ற காட்டு யானை ஊருக்குள் புகுந்தது.
- ஊருக்குள் வராதவாறு வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
நீலகிரி கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 2 பேரை ஊருக்குள் புகுந்து காட்டு யானை தாக்கி கொன்றது. இதனால் காட்டு யானையை பிடிக்க கோரி கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் முதுமலையில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, ஊருக்குள் புகுந்த காட்டு யானையை விரட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஊருக்குள் வராதவாறு வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
இந்தநிலையில் சமீபத்தில் 2 பேரை கொன்ற காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. இதனால் ஆரோட்டுப்பாறை மக்கள் அச்சமடைந்தனர் இதைத்தொடர்ந்து கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில், உதவி வன பாதுகாவலர் கருப்பையா மேற்பார்வையில் வனச்சரகர் யுவராஜ்குமார் தலைமையில் வனவர்கள் சுதீர் குமார், வீரமணி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நியூ ஹோப் போலீஸ் நிலையம் பகுதியில் ந காட்டு யானை முகாமிட்டது. பின்னர் இரவு, பகலாக வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு ஊருக்குள் வராத வகையில் கண்காணிப்பு மேற்கொண்டனர்.
நேற்று பல்வேறு கட்ட நடவடிக்கைக்கு பிறகு பச்சக்காடு வழியாக டெலோவுஸ் வனப்பகுதிக்குள் காட்டு யானையை விரட்டினர். இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி வனத்துறையினரும் நிம்மதி அடைந்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, சந்தன மலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா உள்பட பல்வேறு கோவில்களில் விழாக்கள் நடைபெற்று வருகிறது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க இரவு, பகலாக வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றனர்.
- பந்தயங்களில் பங்கேற்ற குதிரைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின
- குதிரை பந்தயத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
ஊட்டி,
கோடை சீசன் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. கோடை விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது
அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் மாதம் 14-ந் தேதி (தமிழ் புத்தாண்டு) முதல் ஜூன் மாதம் வரை மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஊட்டியில் புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு தொடர் மழை காரணமாக அனைத்து போட்டிகளையும் நடத்த முடியாமல் போனது.
இதனால் நடப்பாண்டில் முன்கூட்டியே 1-ந் தேதி முதல் (அதாவது நேற்று) குதிரை பந்தயத்தை நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக மைதானத்தை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தத
இந்தநிலையில் நேற்று 136-வது குதிரை பந்தயம் ஊட்டியில் தொடங்கியது. முதல் நாளான நேற்று 8 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது. பந்தயங்களில் பங்கேற்ற குதிரைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. முதல் போட்டியில் சாண்டாமரினா ஸ்டார் குதிரை வெற்றி பெற்றது. நீலகிரி முனிசிபாலிட் கோப்பைக்கான போட்டியில் 10 குதிரைகள் பங்கேற்றன. இதில் ராயல் ஐகான் குதிரை வெற்றி பெற்றது.
குதிரையின் உரிமையாளர் எம்.ஏ.எம்.ராமசாமி அறக்கட்டளைக்கு ரூ.3 லட்சத்து 71 ஆயிரத்து 250, பயிற்சியாளர் பி.சுரேசுக்கு ரூ.45 ஆயிரம், ஜாக்கி சி.உமேசுக்கு ரூ.33,750 பரிசுத்தொகை மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் வெற்றி பெற்ற குதிரையின் பயிற்சியாளர், ஜாக்கிக்கு கோப்பையை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து மதியம் 12 மணியளவில் திடீரென கோடை மழை பெய்ய தொடங்கியது. மழை காரணமாக வெல்கம் கோப்பைக்கான 7 மற்றும் 8-ம் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன
. குதிரை பந்தயத்தில் 37 ஜாக்கிகள், 24 பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் மொத்தம் ரூ.6 கோடியே 70 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. ஊட்டியில் குதிரை பந்தயம் மே மாதம் 28-ந் தேதி வரை நடக்கிறது.
- தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
- கோவையில் 1000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது. மாரத்தான் போட்டியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கோவையில் 1000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
- மதுவிலக்கு அமலாக்கபிரிவு சிறப்பு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- முதியவரிடமிருந்து 9 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் சோலூர் மட்டம் மதுவிலக்கு அமலாக்கபிரிவு சிறப்பு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சோலூர்மட்ட காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக முதியவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர் சோலூர்மட்டத்தை சேர்ந்த சுடலைமணி(65) என்பதும், மது விற்பதற்காக அங்கு நின்றிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 9 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- எட்வி ன்ஜார்ஜ் கூடலூர் போலீசில் புகார் அளித்தார்.
- திருடியது கூடலூர் யானைசெத்தகொல்லியை சேர்ந்த மனோகரன்(37) என்பது தெரியவந்தது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் எட்வின் ஜார்ஜ்(வயது58).
இவர் கூடலூர்-தேவர்சோலை ரோடு பகுதியில் சொந்தமாக கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் காலை வழக்கம் போல கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியான அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, கடையில் இருந்த ரூ.14 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடு போய் இருந்தது.
இவர் கடையை பூட்டி சென்றதை நோட்டமிட்ட நபர்கள் அதன்பின்னர் கடையை உடைத்து உள்ளே நுழைந்து பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து எட்வி ன்ஜார்ஜ் கூடலூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடையை உடைத்து பொருட்களை திருடியது கூடலூர் யானைசெத்தகொல்லியை சேர்ந்த மனோகரன்(37) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
- பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர்.
குன்னூர்,
தமிழக அரசு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடை செய்துள்ளது.
அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்து வத்ைத கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் பைகள், கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர் உள்ளிட்ட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மக்கள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, நகராட்சி துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படு த்தப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அந்த கடைகளுக்கு அதிகாரிகள் ரூ.1000 அபராதம் விதித்தனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
குன்னூர் பகுதியில் குன்னூர் நகராட்சி ஆணையாளர் தலைமையில் சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிக் பறிமுதல் செய்து ரூ.1000 அபராதம் விதித்தனர்.
கூடலூர் நகராட்சி ஆணையாளர் தலைமையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டது.
ஊட்டி, குன்னூர், கூடலூர், குந்தா, பந்தலூர், கோத்தகிரி வட்டத்தில் வருவாய்த்துறையினர் சோதனை மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அதனை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.17,500 அபராதம் விதித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதாக கடைகளிடம் இருந்து ரூ.21,200 அபராதம் வசூலிக்கப்பட்டது.
- நரிக்குழி ஆடா பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
- நரிக்குழி ஆடா மக்கள் பலருக்கு கடந்த 3 நாட்களாக வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் நரிக்குழி ஆடா பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கிராமம் அருகே மலைப்பகுதியில் இருந்து ஊற்று தண்ணீர் குடிநீராக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நரிக்குழி ஆடா மக்கள் பலருக்கு கடந்த 3 நாட்களாக வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் குடிநீரில் மனித கழிவுகள் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஊட்டி உரக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், துப்புரவு தொழிலாளர்களான ரஞ்சித் (வயது 29), சக்திவேல் (24) ஆகியோர் கடந்த 29-ந் தேதி குந்தா பிக்கட்டியில் உள்ள ஒரு வீட்டில் செப்டிக் டேங்கில் இருந்து மனித கழிவுகளை அகற்றி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்று, நரிக்குழி ஆடா பகுதியில் கொட்டியதும், பின்னர் மழை பெய்ததால் மனித கழிவுகள் ஊற்று தண்ணீரில் கலந்து விட்டதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக பொது நீர்தேக்கத்தை மாசுபடுத்துதல், நோய் தொற்றை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ரஞ்சித், சக்திவேலை போலீசார் கைது செய்தனர்.
- நீலகிரியில் இந்த மாதம் மற்றும் அடுத்த மாதம் கோடை சீசன் நடைபெறுகிறது.
- 8 தோட்டக்கலை பூங்காக்களிலும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி:
நீலகிரியில் இந்த மாதம் (ஏப்ரல்) மற்றும் அடுத்த மாதம் (மே) கோடை சீசன் நடைபெறுகிறது.
இதையொட்டி லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் திரளுவார்கள். அவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க இன்று (சனிக்கிழமை) முதல் ஊட்டி தாவரவியல் பூங்கா உள்பட மாவட்டத்தில் உள்ள 8 தோட்டக்கலை பூங்காக்களிலும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.






