search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
    X

    பள்ளத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி

    • சந்தோசுக்கு திடீரென குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
    • இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரவேனு மூன்ரோடு சக்கத்தாகம்பை வசித்து வரும் செந்தாமரை என்பவர் மகன் சந்தோஷ் (வயது 32).

    இவர் தனியார் தேயிலை தொழிற்சாலையில் லாரி ஓட்டுநரக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. இந்தநிலையில் சந்தோஷ் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் கொட்டக்கம்பையில் இருந்து அரவேனு பகுதிக்கு லாரியை ஓட்டி சென்றார்.

    அப்போது அவருக்கு திடீரென குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு லாரியை ஓட்டிய போதே மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் படுகாயம் அடைந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற

    Next Story
    ×