என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் மதுவிற்ற முதியவர் கைது
- மதுவிலக்கு அமலாக்கபிரிவு சிறப்பு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- முதியவரிடமிருந்து 9 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் சோலூர் மட்டம் மதுவிலக்கு அமலாக்கபிரிவு சிறப்பு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சோலூர்மட்ட காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக முதியவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர் சோலூர்மட்டத்தை சேர்ந்த சுடலைமணி(65) என்பதும், மது விற்பதற்காக அங்கு நின்றிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 9 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






