என் மலர்
நாமக்கல்
- கோடை காலம் தொடங்கி விட்டநிலையில், வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- கோடை வெப்பத்தை தணிக்கும் தர்பூ சணி பழங்களின் வரத்து இப்பகுதியில் அதிகரித்து உள்ளது.
பரமத்திவேலூர்:
கோடை காலம் தொடங்கி விட்டநிலையில், வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் இரு சக்கர வாகனத்திலும், நடந்தும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வெயிலை தாக்குப்பிடிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வெயிலில் இருந்து தப்பிக்க வெள்ளரி மற்றும் தர்பூசணி பழங்களை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சுற்று வட்டார பகுதி களில்நிலவும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவ திக்குள்ளாகி வருகின்றனர். இதனால், கோடை வெப்பத்தை தணிக்கும் தர்பூ சணி பழங்களின் வரத்து இப்பகுதியில் அதிகரித்து உள்ளது. தமிழ்நாட்டின் கடலூர், திண்டிவனம், விழுப்பு ரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தர்பூசணி பழங்கள், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படு கிறது. அதனால் பரமத்தி வேலூர், பர மத்தி பொத்த னூர், பாண்ட மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் அமோ கமாக விற்பனை நடை பெறு கிறது. தர்பூசணி பழங்க ளை பொது மக்கள் அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ 25 ரூபாய் வரை விற்பனை செய்ய ப்ப டு கிறது. ஒரு துண்டு தர்பூசணி பழம் ரூ.10 வரை விற்பனை ஆகிறது
- விதவைகள் சான்று பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கின்ற னர்.
- திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., கவுசல்யா ஆதரவற்ற வித வைகள் விண்ணப்பத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வுக்கு உட்பட்ட பகுதிகளில் கணவனை இழந்த இளம்பெண்கள் அரசு நலத்திட்ட உதவிகளை பெறவும், வேலை வாய்ப்பில் முன்னுரிமை பெறவும் ஆதரவற்ற விதவைகள் சான்று பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கின்ற னர்.
இந்த நிலையில் இருப்பி டச் சான்று, வாரிசு சான்று, வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட வற்றிக்கு விண்ணப்பித்தால் ஒரு சில நாட்களில் கிடைத்து விடுகிறது. ஆனால் ஆதர வற்ற விதவைகள் சான்றுக்கு விண்ணப்பித்தால் வருட கணக்கில் காலதாமதமாகி வருவதால் பயனாளிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதேபோல், ஆதரவற்ற விதவைச் சான்றுக்கு சப்-கலெக்டர் ரேங்கில் உள்ள வர்கள் மட்டுமே நேரடி யாக சம்பந்தப்பட்டவர்கள் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்து வழங்குவார்கள்.
ப.வேலூர் தாலுகா உட்பட்ட ஆதரவற்ற விதவைகள் விண்ணப்பம் அனைத்தும் ப.வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் ஆய்வு செய்து, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.
ஆனால் அங்கு செல்லும் ஆதரவற்ற விதவைகள் விண்ணப்பம் கிடப்பில் போடப்படுகிறது.
இதனால் சான்றுபெற விண்ணப்பித்த வர்கள் கடும் அதிருப்தியில் உள்ள னர். தற்போது புதிய தாக பதவியேற்ற திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., கவுசல்யா ஆதரவற்ற வித வைகள் விண்ணப்பத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) இருந்து புதிய எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
- மொத்தம் 320 புதிய கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 580 புதிய வாக்காளர்கள் சரி பார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகள் (வி.வி.பேடு), ஆகிய கருவிகள் இன்று லாரி மூலம் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தன.
நாமக்கல்:
நாடு முழுவதும் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்திற்கு, பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) இருந்து புதிய எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 320 புதிய கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 580 புதிய வாக்காளர்கள் சரி பார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகள் (வி.வி.பேடு), ஆகிய கருவிகள் இன்று லாரி மூலம் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தன.
கலெக்டர் ஸ்ரேயாசிங் மேற்பார்வையில், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரியில் இருந்து இறக்கப்பட்டு, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.
இந்த பாதுகாப்பு அறையில், ஏற்கனவே 4,214 வாக்குப்பதிவு எந்திரங்களும், 2,622 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 970 வாக்களர்கள் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகள் ஆகிய எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் இருப்பில் உள்ளன.
அவற்றையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக் கோழி சந்தை கூடுகிறது.
- கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக் கோழி, 350 ரூபாய்க்கு விற்பனையானது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், சுல்தான் பேட்டை, மோகனூர் பிரிவு சாலையில், வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக் கோழி சந்தை கூடுகிறது.
இங்கு விற்பனைக்கு வரும் நாட்டுக்கோழிகளை வியாபாரிகள் பலரும் போட்டி போட்டி வாங்கிச் செல்வர். கடந்த வாரத்தைவிட இந்த வாரம், கோழிகள் வரத்து அதிகரித்ததால், அதன் விலை சரிந்தது. கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக் கோழி, 350 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், நேற்று 280 ரூபாய்க்கு விற்பனையானது.
பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருவதால் பொதுமக்கள் அசைவம் சாப்பிட மாட்டார்கள். மேலும் வெயில் காலத்தில் நாட்டுக்கோழியை சமைத்து சாப்பிட்டால், உடல் சூட்டை அதிகரித்துவிடும் என்பதால், கோடைகாலத்தில் அவற்றை தவிர்க்கின்றனர்.
ஒரு சில வியாபாரிகள், பண்ணைக் கோழிகளை நாட்டுக்கோழி என ஏமாற்றி விற்பனை செய்து வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால் வாடிக்கையாளர்கள் குறைந்துள்ளனர் என விவசாயிகள் தெரிவித்தனர்.
- நேற்று வழக்கம்போல், சுல்தான்பேட்டை பகுதியிலேயே வாரச்சந்தை கூடியது.
- வியாபாரிகளுக்கு கடை போட இடம் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான் பேட்டையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சந்தை கூடுவது வழக்கம். தற்போது காங்கிரீட் தளம் மற்றும் மேற்கூரை அமைக்க ரூ. 1 கோடியே 47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.
அதனால் வார சந்தை தற்காலிகமாக பழைய பஸ் நிலையம் அருகே மாற்றப்படும் என டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் அறிவித்தது. ஆனால் நேற்று வழக்கம்போல், சுல்தான்பேட்டை பகுதியிலேயே வாரச்சந்தை கூடியது.
வாரசந்தையில் பணிகள் நடைபெற்று வருவதால், பாதிக்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு கடை போட இடம் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும் பில்லர் அமைக்க 10-க்கும் மேற்பட்ட பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது.
இதனால் சந்தைக்கு வரும் பொதுமக்கள் அறியாமல் பள்ளத்தில் விழும் வாய்ப்புள்ளது. வாரச்சந்தை மாற்றும் முடிவில் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் மெத்தனமாக இருப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, வாரச்சந்தை பழைய பஸ் நிலையம் அருகே இடமாற்றம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு, வியாபாரிகளுக்கும் கழிப்பிட வசதி முதற்கொண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில வியாபாரிகள் இடமாற்றத்தை எதிர்த்து இதே பகுதியில் கடை போட்டு வருகின்றனர். வரும் நாட்களில் வார சந்தை பழைய பஸ் நிலையம் அருகே கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படும் என கூறினார்.
- தென்னக ரெயில்வே மூலம் கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் இருந்து, தமிழ கத்தில் தஞ்சாவூர் வரை வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
- கோடை காலத்தில் பயணிக ளின் வசதிக்காக இந்த ரெயில் மே மாதம் முழு வதும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்:
தென்னக ரெயில்வே சேலம் கோட்டம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்னக ரெயில்வே மூலம் கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் இருந்து, தமிழ கத்தில் தஞ்சாவூர் வரை வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது. கோடை காலத்தில் பயணிக ளின் வசதிக்காக இந்த ரெயில் மே மாதம் முழு வதும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வண்டி எண் 07325 கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து வாரம்தோறும் திங்கட்கி ழமை கிளம்பி தஞ்சாவூர் செல்கிறது. இந்த வண்டி வருகிற மே 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில் வண்டி எண் 07326 தஞ்சாவூரில் இருந்து வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை கிளம்பி ஹூப்ளி வரை செல்கிறது. இந்த வண்டி வருகிற
30-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
மே மாதம் முழுவதும் வாரம் தோறும் திங்கட்கி ழமை இரவு 8.25 மணிக்கு ஹூப்ளியில் இருந்து கிளம்பும் இந்த ரெயில், 9.45 மணிக்கு ஹவேரி ரெயில் நிலையத்தை வந்தடையும். அங்கிருந்து 9.47-க்கு புறப்பட்டு 10.08 மணிக்கு ராணிபென்னூர், 10.34 மணிக்கு ஹரிஹார், 10.51 மணிக்கு தாவன்கெரே, நள்ளிரவு 12.25 மணிக்கு பிரூர், செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.05 மணிக்கு அரிசிகெரோ, 2.35-க்கு டும்கூர், 3.25 மணிக்கு சிக்பன்வார், 4.50 மணிக்கு பெங்களூர் எஸ்.எம்.வி.டி. ரெயில் நிலையம், 5.08 மணிக்கு பெங்களூர் கிருஷ்ணராஜபுரம், 5.53 மணிக்கு பங்காரப்பேட்டை வந்து 9.25-க்கு சேலத்துக்கு வருகிறது.
சேலத்தில் இருந்து 9.30-க்கு கிளம்பி 10.43 மணிக்கு கரூர், 12.30 மணிக்கு திருச்சி கோட்டை, 12.40 மணிக்கு திருச்சி ஜங்ஷன், 1.30-க்கு பூதலூர் வந்தடையும். மதியம் 2.15 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 7.40 மணிக்கு தஞ்சாவூரில் இருந்து, மாலை 7.40 மணிக்கு இந்த சிறப்பு ரெயில் ஹூப்ளிக்கு கிளம்பும். இரவு 7.57 மணிக்கு பூதலூர், 8.40-க்கு திருச்சி ஜங்சன், 9.19 மணிக்கு திருச்சி கோட்டை ரெயில் நிலையம், 10.25 மணிக்கு கரூர், 11.45-க்கு சேலம் வந்தடையும்.
இரவு 11.50 மணிக்கு சேலத்தில் இருந்து பெங்க ளூர் வழியாக அடுத்த நாள் புதன்கிழமை பகல் 12.30 மணிக்கு கர்நாடகா மாநிலம் ஹூப்ளி சென்றடையும்.
- வி.கரைப்பாளையத்தில் திருமணமான பட்டதாரி இளம்பெண் நித்யா பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
- சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும் நித்யாவின் உறவினர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் போராடி வருகின்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.கரைப்பாளையத்தில் திருமணமான பட்டதாரி இளம்பெண் நித்யா பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தியும், வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும் நித்யாவின் உறவினர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் நித்யா கொலை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்திய, அவரது உறவினரான கரைப்பாளையத்தை சேர்ந்த குழந்தைவேல் என்பவரது தோட்டத்தில் இருந்த பவர் டில்லர், பிளாஸ்டிகள் குழாய்களை கடந்த 2 நாட்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் எதிரிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த வரும், தமயந்தி வழக்கு மற்றும் வீரப்பனை பிடிக்க பழங்குடி மக்களுக்கு போலீசார் தொந்தரவு கொடுத்த வழக்கில் வாதாடி யவருமான பவானியைச் சேர்ந்த மோகன் தலைமையி லான வக்கீல்கள் குழுவினர் கரைப்பாளையம் பகுதிக்கு வந்து, குழந்தைவேலுவின் தோட்டத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது வக்கீல்கள் குழுவினர் கூறியதாவது:-
உண்மையான குற்ற வாளிகளை கைது செய்ய கோரி போராடி வருப வர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறை யில் அடைத்துள்ளனர். நித்யாவை திட்டமிட்டே கொலை செய்துள்ளதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட வர்களையும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுப வர்களையும் போலீசார் அச்சுறுத்தி வருகின்றனர்.
இந்த வழக்கை பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும். இந்த கொலையில் உரிய நடவ டிக்கை எடுக்க கோரியும், போலீசார் போடும்பொய் வழக்கில் சரியான தீர்வு கிடைக்க உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டியுள்ளது.
இதேபோல் கடந்த மாதத்தில் சரளைமேடு பகுதியில் 3 வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை மற்றும் அருகி லிருந்த குடிசைகள், 3 டிராக்டர்களுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் கரைப்பாளையத்தை சேர்ந்த பூங்கோதை என்பவ ரது வீட்டிலும், குழந்தை வேல் வீட்டிலும் பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டது.
தற்போது குழந்தை வேலுவின் தோட்டத்தில் இருந்த பவர் டில்லர் எரிக்கப்பட்டு உள்ளது. கொலை செய்யப்பட்ட நித்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களின் குரல்வளையை நசுக்கி வருகின்றனர்.
இப்பகுதியில் நடை பெறும் தீ வைப்பு சம்பவங்க ளுக்கு நித்யாவுக்கு ஆதர வாக செயல்பட்ட இளை ஞர்கள் மீது வழக்கு போடப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள் போலீசாரின் அராஜகத்தை காட்டுகிறது. எனவே நித்யாவின் படுகொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற வேண்டி இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வக்கீல்கள் குழுவினரிடம் கூறுகையில், இந்த பகுதி இளைஞர்கள் நித்யாவின் கொலைக்கு உண்மையான குற்றவாளி களை கண்டுபிடிக்க கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால், அவர்களை குறி வைத்து போலீசார் தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாக வழக்கு தொடுத்து சிறையில் அடைக்கின்றனர். இவ்வாறு செய்வதால் யாரும் முன் நின்று போராட்டத்தை நடத்த மாட்டார்கள் என்று போலீசார் எண்ணு கின்றனர்.
இப்பகுதியில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் கலப்படம் செய்து வெல்லம் தயாரிக்கின்றனர். அதை தட்டி கேட்ட காரணத்தி லேயே எங்களை பழிவாங்கும் நோக்கத்தோடு வெல்ல ஆலை அதிபர், இதுபோன்ற தேவை யில்லாத பிரச்சினைகளை உருவாக்கி வருகிறார்.
மேலும் பவர் டில்லர் எரிக்கப்பட்ட தோட்டத்தின் நுழைவாயிலில், பூட்டி இருந்த இரும்பு கேட்டை இரும்பு கம்பிகளால் கட்டி வைத்து, அந்த வழியாக செல்லும் மின்சார கம்பியிலிருந்து கொக்கி போட்டு இரும்பு கேட்டில் பொருத்தி இருந்தனர்.
அதிர்ஷ்டவசமாக அந்த தோட்டத்தின் உரிமையா ளர்கள் தப்பிவிட்டனர். கேட்டில் மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர் என்றனர்.
இதைதொடர்ந்து குழுவி னர், பரமத்தி வேலூர் போலீஸ் துணை சூப்பி ரண்டு கலைச்செல்வனை நேரில் சென்று சந்தித்து நித்யா கொலை வழக்கு சம்பந்தமான விசாரணை யில் உள்ள குறைபாடுகள் குறித்து தெரிவித்தனர். அதேபோல் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை விடுத்த னர். அப்போது அவர்களிடம் டி.எஸ்.பி. கலையரசன், இந்த விவகாரத்தில் விசா ரணை தீவிரமாக நடை பெற்று வருகிறது. நிரந்தர தீர்வு அதற்கு காணப்படும் என்றார்.
- சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
- கடந்த 24-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ.4.55 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளி நாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) வாரத்தில் 2 முறை முட்டை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. நெஸ்பேக் அமைப்பு முட்டை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டிய மைனஸ் விலையை நெக் விலையில் இருந்து குறைத்து அறிவித்தது.
கடந்த 24-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ.4.55 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் முட்டை விலை 30 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஏற்றுமதிக்கான முட்டை விலை ரூ.3.95 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோழிப்பண்ணையாளர்கள், முட்டை வியாபாரிகளுக்கு முட்டை விற்பனை செய்யும்போது, ஏற்கனவே என்.இ.சி.சி விலையில் இருந்து முட்டை விலையை குறைத்து விற்பனை செய்தனர். இனி அவ்வாறு செய்யத் தேவையில்லை.
முட்டை வியாபாரிகளுக்கும் என்.இ.சி.சி.க்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் முட்டையை மைனஸ் விலைக்கு விற்கத் தேவையில்லை என்று என்.இ.சி.சி. அறிவித்துள்ளது.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு:-சென்னை 470, பர்வாலா 407, பெங்களூர் 445, டெல்லி 428, ஹைதராபாத் 400, மும்பை 475, மைசூர் 455, விஜயவாடா 445, ஹொஸ்பேட் 415, கொல்கத்தா 485.
பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.109 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 82 ஆக நெஸ்பேக் நிர்ணயித்துள்ளது.
- போலீசார் ராசிபுரம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
- 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
ராசிபுரம்:
ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் இரண்டு சக்கர வாகனம் திருட்டு போனது குறித்து குற்றவாளிகளை பிடிக்க ராசிபுரம் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். நேற்று தனிப்படை போலீசார் ராசிபுரம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து விசா ரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரி டம் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறினார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் சேலம் அருகே உள்ள தாதகாப்பட்டி சண்முக நகரை சேர்ந்த துரைசாமி என்பவரின் மகன் கந்தசாமி (வயது 40) என்பதும், ராசிபுரம் வாரச்சந்தையில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது. இதை யொட்டி போலீசார் கந்தசா மியை கைது செய்து அவரி டம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கந்தசா மியை போலீசார் ராசிபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- மஞ்சள் ஏலம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது.
- ரூ 2.கோடியே 30 லட்சத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. இதில் விரலி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.6113 முதல் ரூ.7533 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.5584 முதல் ரூ.6443 வரையிலும் பனங்காளி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.10312 முதல் ரூ.11699 வரையிலும் மொத்தம் 6000 மூட்டைகள் தொகை ரூ 2.கோடியே 30 லட்சத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் என்.புதுப்பட்டி கணபதி நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகன் தினேஷ் குமார் (வயது 24), மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் என்.புதுப்பட்டியிலிருந்து லத்துவாடி செல்லும் சாலையில் அவரது அண்ணன் சதீஷ் உடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது குரும்பர் தெரு வேகத்தடை அருகே வந்தபோது எதிரே வந்தவர்கள் இவர்களைப் பார்த்து தரக்குறைவாகவும், தகாத வார்த்தைகளாலும் பேசியதாக கூறப்படுகிறது. இதை தட்டிக் கேட்ட தினேஷ்குமாரை, சதீஷ் ஆகியோரை எதிர் தரப்பினர் அடித்து, உதைத்து, காயப்படுத்தினர்.
வலி தாங்க முடியாமல் அவர்கள் இருவரும் சத்தம் போட்டனர். இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்து, இருவரையும் தாக்கியவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். பின்னர் காயமடைந்த தினேஷ்குமார், சதீஷை அங்கு இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து தினேஷ்குமார் மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் தினேஷ்குமார், சதீஷை தாக்கிய வளையப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த உதயசூரியன் மகன் சரவணன் (29), குமார் மகன் விஜய் (20), லோகநாதன் மகன் சதீஷ்குமார் (29), கருப்பையா மகன் சத்தியசீலன் (28), ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பரமத்தி கிளைச் சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
- பொத்தனூர் பேரூராட்சி கடந்த ஆண்டு தேசிய அளவில் சிறந்த பேரூராட்சிக்கான விருதைப் பெற்றுள்ளது.
- ஒப்பந்த துப்புரவு மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணியாளர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கவில்லை.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பொத்தனூர் பேரூராட்சி, கடந்த ஆண்டு தேசிய அளவில் சிறந்த பேரூராட்சிக்கான விருதைப் பெற்றுள்ளது. இந்த பேரூராட்சியில் துப்புரவு மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணியில் 50-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இப்பேரூராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த துப்புரவு மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணியாளர்க ளுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கவில்லை. ஏற்கனவே வழங்கிய சம்பள தொகை ரூ.14,000-ஐ, தற்போது ரூ.10,000 ஆக குறைத்துள்ளனர். ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் பணி செய்வதற்கான ஊதியம் வழங்கப்படுவதில்லை.
நாள்தோறும் 10 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்குவதாவும் கூறி இன்று காலை பணிக்குச் செல்லாமல் ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தங்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்க வேண்டும், குறைக்கப்பட்ட சம்பள தொகையை உடனடியாக அதிகரித்து வழங்க வேண்டும், பணி நேரத்தை குறைக்க வேண்டும், ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் பணி செய்வதற்கான ஊதியம் முறையாக வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டவர்க ளுடன் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், பேரூராட்சித் தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று கலைந்து சென்றனர்.






