மோட்டார் சைக்கிள்கள் திருடியவர் சேலம் சிறையில் அடைப்பு

போலீசார் ராசிபுரம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் திருடியவர் சேலம் சிறையில் அடைப்பு
Published on

ராசிபுரம்:

ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் இரண்டு சக்கர வாகனம் திருட்டு போனது குறித்து குற்றவாளிகளை பிடிக்க ராசிபுரம் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். நேற்று தனிப்படை போலீசார் ராசிபுரம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து விசா ரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரி டம் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறினார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் சேலம் அருகே உள்ள தாதகாப்பட்டி சண்முக நகரை சேர்ந்த துரைசாமி என்பவரின் மகன் கந்தசாமி (வயது 40) என்பதும், ராசிபுரம் வாரச்சந்தையில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது. இதை யொட்டி போலீசார் கந்தசா மியை கைது செய்து அவரி டம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கந்தசா மியை போலீசார் ராசிபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com