என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Widows"

    • அனைத்து மரபுகளையும் தடை செய்யும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை இங்கு கிராம சபை நிறைவேற்றியது.
    • இந்த முயற்சி ஒரு பெரிய சமூகப் புரட்சிக்கு அடித்தளமிட்டுள்ளது என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.

    மகாராஷ்டிராவில் கணவனை 7000க்கும் மேற்பட்ட கிராமங்கள் விதவைகளுக்கு எதிரான பாகுபாடு, ஒடுக்குமுறைகள் மற்றும் மனிதாபிமானமற்ற நடைமுறைகளை கைவிடுவதாக அறிவித்துள்ளன.

    மூடநம்பிக்கைகள் மிகுந்த இந்திய சமூகத்தில் பல நூற்றாண்டுகளாகப் பரவியிருந்த இந்தப் பழக்கவழக்கங்கள் பெண்களுக்கு மன ரீதியாகவும் சமூக ரீதியாகவும் துன்பத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், அவர்களை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தவும் செய்தன.

    இந்நிலையில் 27,000 கிராம பஞ்சாயத்துகள் கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில், 7,683 கிராமங்கள் கிராம சபைகளைக் கூட்டி அங்குள்ள கைம்பெண்களுக்கு எதிரான பழக்கவழக்கங்களை அகற்றுவதாக அறிவித்துள்ளன.

    இந்த மாற்றம் 2022 ஆம் ஆண்டு கோலாப்பூர் மாவட்டத்தின் ஹெர்வாட் கிராமத்தில் இருந்து தொடங்கியது. வளையல்களை உடைத்தல், தாலியை அகற்றுதல், வண்ண ஆடைகளை அணிய தடை போன்ற பழக்கவழக்கங்களைப் பின்பற்றும்படி விதவைகளை கட்டாயப்படுத்தும் அனைத்து மரபுகளையும் தடை செய்யும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை இங்கு கிராம சபை நிறைவேற்றியது.

    அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர்களை கணபதி பூஜையில் ஈடுபடுத்தி, விழாக்களில் கொடியேற்றுதல், ஹல்தி - குங்குமம் சூட்டுதல் போன்ற திருமண நிகழ்வுகளில் பங்கேற்க வைத்தல் போன்றவையும் கிராமத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.

    இந்த ஊக்கமளிக்கும் முடிவு ஒரு பிரச்சார வடிவத்தை எடுத்து படிப்படியாக ஆயிரக்கணக்கான கிராமங்கள் இந்த இயக்கத்தில் இணைந்தன. கோயில் பூஜைகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் கைம்பெண்கள் கலந்துகொள்வதை தடுக்கக் கூடாது எனவும், இதற்காக கிராமங்களில் கண்காணிப்பு குழு அமைக்கவும் முடிவுசெய்யப்பட்டது.

     

    இந்த பிரச்சாரம் மகாராஷ்டிராவின் சாங்லி, சதாரா, கோலாப்பூர், நாசிக், பீட், உஸ்மானாபாத் போன்ற மாவட்டங்களில் வேகமாகப் பரவியது.

    இப்போது விதவைகள் பண்டிகைகளில் பங்கேற்கவும், வண்ணமயமான ஆடைகளை அணியவும், சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் திருமண விழாக்களுக்கு அழைக்கப்படுகிறார்கள், மேலும் பல கிராமங்களில் விதவைகள் மறுமணம் செய்து கொண்டுள்ளனர்.

    இந்த பிரச்சாரத்தின் முக்கிய முகமாக சமூக ஆர்வலர் பிரமோத் ஜின்ஜாடே திகழ்கிறார். "ஒவ்வொரு பெண்ணுக்கும் கண்ணியமான வாழ்க்கை வாழ உரிமை உண்டு. கணவரின் மரணத்திற்குப் பிறகு அவளுடைய வாழ்க்கை முடிவடைவதில்லை, ஆனால் அது ஒரு புதிய தொடக்கமாகும்" என்று அவர் கூறுகிறார்.

    பல கிராமங்களில் இன்னும் மாற்றம் தேவை என்றும், ஆனால் இந்த முயற்சி ஒரு பெரிய சமூகப் புரட்சிக்கு அடித்தளமிட்டுள்ளது என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.

    • இந்த ஆண்டு ஹோலி பண்டிகை, ரம்ஜான் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று வருகிறது.
    • வட இந்தியாவில் இன்றே ஹோலி கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன.

    வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஹோலி பண்டிகை, ரம்ஜான் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று வருகிறது.

    நாளை ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், வட இந்தியாவில் இன்றே ஹோலி கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன.

    இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் விருந்தவனத்தில் வாழும் கைம்பெண்கள் வண்ண பொடிகளை தூவி ஹோலி கொண்டாடியுள்ளனர். கைம்பெண்கள் ஹோலி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • விதவைகள் சான்று பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கின்ற னர்.
    • திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., கவுசல்யா ஆதரவற்ற வித வைகள் விண்ணப்பத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வுக்கு உட்பட்ட பகுதிகளில் கணவனை இழந்த இளம்பெண்கள் அரசு நலத்திட்ட உதவிகளை பெறவும், வேலை வாய்ப்பில் முன்னுரிமை பெறவும் ஆதரவற்ற விதவைகள் சான்று பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கின்ற னர்.

    இந்த நிலையில் இருப்பி டச் சான்று, வாரிசு சான்று, வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட வற்றிக்கு விண்ணப்பித்தால் ஒரு சில நாட்களில் கிடைத்து விடுகிறது. ஆனால் ஆதர வற்ற விதவைகள் சான்றுக்கு விண்ணப்பித்தால் வருட கணக்கில் காலதாமதமாகி வருவதால் பயனாளிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

    இதேபோல், ஆதரவற்ற விதவைச் சான்றுக்கு சப்-கலெக்டர் ரேங்கில் உள்ள வர்கள் மட்டுமே நேரடி யாக சம்பந்தப்பட்டவர்கள் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்து வழங்குவார்கள்.

    ப.வேலூர் தாலுகா உட்பட்ட ஆதரவற்ற விதவைகள் விண்ணப்பம் அனைத்தும் ப.வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் ஆய்வு செய்து, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.

    ஆனால் அங்கு செல்லும் ஆதரவற்ற விதவைகள் விண்ணப்பம் கிடப்பில் போடப்படுகிறது.

    இதனால் சான்றுபெற விண்ணப்பித்த வர்கள் கடும் அதிருப்தியில் உள்ள னர். தற்போது புதிய தாக பதவியேற்ற திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., கவுசல்யா ஆதரவற்ற வித வைகள் விண்ணப்பத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விதவைப்பெண்ணை திருமணம் செய்த வாலிபரை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கடையம்:

    கடையம் அருகேயுள்ள முத்தம்மாள்புரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் பாரதிராஜா (வயது 19). பொக்லைன் டிரைவர். இவருக்கும் ராஜாங்கபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்து விட்டார். 5 வயதில் ஒரு மகன் உள்ளான். பாரதிராஜாவுக்கும், அந்த பெண்ணுக்கும் 6 வயது வித்தியாசம் இருந்தது. அந்த பெண் பாரதி ராஜாவை விட மூத்தவர். 

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதிராஜா அந்த பெண்ணை ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அந்த பெண்ணுடன் தனியாக குடும்பம் நடத்தி வந்தார். இது பாரதிராஜாவின் வீட்டுக்கு தெரியவந்தது. அவர்கள் பாரதிராஜாவை கண்டித்தனர். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த பாரதிராஜா சம்பவத்தன்று விஷத்தை குடித்து விட்டார். 

    உடனே அவரை அக்கம் பக்கத்தினர் அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே பாரதிராஜா பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×