search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தரக்குறைவாக பேசியதை தட்டிக்கேட்டஅண்ணன், தம்பிக்கு அடி-உதை; 4 பேர் கைது
    X

    தரக்குறைவாக பேசியதை தட்டிக்கேட்டஅண்ணன், தம்பிக்கு அடி-உதை; 4 பேர் கைது

      பரமத்தி வேலூர்:

      நாமக்கல் மாவட்டம் என்.புதுப்பட்டி கணபதி நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகன் தினேஷ் குமார் (வயது 24), மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் என்.புதுப்பட்டியிலிருந்து லத்துவாடி செல்லும் சாலையில் அவரது அண்ணன் சதீஷ் உடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

      அப்போது குரும்பர் தெரு வேகத்தடை அருகே வந்தபோது எதிரே வந்தவர்கள் இவர்களைப் பார்த்து தரக்குறைவாகவும், தகாத வார்த்தைகளாலும் பேசியதாக கூறப்படுகிறது. இதை தட்டிக் கேட்ட தினேஷ்குமாரை, சதீஷ் ஆகியோரை எதிர் தரப்பினர் அடித்து, உதைத்து, காயப்படுத்தினர்.

      வலி தாங்க முடியாமல் அவர்கள் இருவரும் சத்தம் போட்டனர். இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்து, இருவரையும் தாக்கியவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். பின்னர் காயமடைந்த தினேஷ்குமார், சதீஷை அங்கு இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

      மேலும் இதுகுறித்து தினேஷ்குமார் மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

      இதில் தினேஷ்குமார், சதீஷை தாக்கிய வளையப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த உதயசூரியன் மகன் சரவணன் (29), குமார் மகன் விஜய் (20), லோகநாதன் மகன் சதீஷ்குமார் (29), கருப்பையா மகன் சத்தியசீலன் (28), ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பரமத்தி கிளைச் சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

      Next Story
      ×