என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • முதல்-அமைச்சர் கோப்பைக்கான, மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள், நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
    • ஆண், பெண் இரு பாலருக்கும், மாவட்ட அளவில் 42 போட்டிகள், மண்டல அளவில் 8 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

    நாமக்கல்:

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான, மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள், நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

    அதில், கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, ஹாக்கி, நீச்சல், கையுந்து பந்து, மேசைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய, 5 பிரிவுகளில் ஆண், பெண் இரு பாலருக்கும், மாவட்ட அளவில் 42 போட்டிகள், மண்டல அளவில் 8 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

    பள்ளி மாணவி யருக்கான போட்டியில், மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல் நிலைப்பள்ளி மாணவியர் பங்கேற்றனர். அதில், பிளஸ்-2 மாணவி கீர்த்தனா, உயரம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பெற்றார். பிளஸ்-1 மாணவி ஸ்ரீசிவநிதி 800 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதலில் முதலிடம், 400 மீ. ஓட்டத்தில் 3-ம் இடம் பிடித்தார்.

    9-ஆம் வகுப்பு மாணவி சந்தியா குண்டு எறியும் போட்டியில் 2-ம் இடம் பெற்றார். மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டியில், பிளஸ் 2 மாணவி ஷோபனா பிரியா 100 மீ. ஓட்டத்தில் 2-ம் இடம் பிடித்தார்.

    வெற்றி பெற்ற மாணவியருக்கு, தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி. ராஜேஸ்குமார், கலெக்டர் உமா ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர். அரசு ஊழியர்களுக்கான போட்டியில், இப்பள்ளி தமிழ் ஆசிரியர் வீரராகவன், நீளம் தாண்டுதலில் 2-ம் இடம், உடற்கல்வி ஆசிரியர் ஜீவா, கையுந்து பந்து குழு போட்டியில் முதலிடம் பெற்றனர்.

    இப்போட்டிகளில் வெற்றிபெற்ற, மோகனூர் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவியர், ஆசிரியருக்கு, ரூ. 19 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் முதலிடம் பெற்ற மாணவியர், சென்னையில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெற்றி பெற்றவர்களை, பள்ளி தலைமையாசிரியர் சுடரொளி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 8 அரசு ஆஸ்பத்திரிகள், 26 தனியார் ஆஸ்பத்திரிகள் ஆகிய வற்றில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • மருத்துவ சிகிச்சைகள் ஏழை, எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளுடன் கூடிய சிகிச்சைகள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 8 அரசு ஆஸ்பத்திரிகள், 26 தனியார் ஆஸ்பத்திரிகள் ஆகிய வற்றில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் மூலம் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை மற்றும் டயாலிஸிஸ் நோயாளி களுக்கான உரிய சிகிச்சை கள், பொது அறுவை சிகிச்சை, பொது மருத்துவ சிகிச்சை, புற்றுநோய் சம்மந்தப்பட்ட சிகிச்சை மற்றும் இருதய சிகிச்சைகள் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் ஏழை, எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளுடன் கூடிய சிகிச்சைகள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 2021 ஆண்டு மே மாதம் 7-ந் தேதி முதல், தற்போது வரை 1,268 பேருக்கு இருதய நோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை (டயாலிஸிஸ்) 3,893 பேர், கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை 1,633 பேர், புற்றுநோய் சிகிச்சை 381 பேர், கல்லீரல் நோய் சிகிச்சை 82 பேர், மூட்டு மாற்று மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை 2,894 பேர், தண்டுவடம் சிகிச்சை 106 பேர், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை 479 பேர், கண்நோய் அறுவை சிகிச்சை 1,946 பேர், என மொத்தம் 12 ஆயிரத்து 682 பேருக்கு, ரூ. 17 கோடியே 21 லட்சத்து 51 ஆயிரத்து 314 மதிப்பில், உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் அளிக்கப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • சபாபதி (வயது 48). விவசாயி. இவர் நேற்று இரவு குடும்பப் பிரச்சினை காரணமாக, வீட்டின் அருகில் உள்ள 80 அடி ஆழ கிணற்றில் திடீரென குதித்து விட்டார்.
    • இதைக் கண்ட அவரது மகன் கண்ணன் (20), கிணற்றில் குதித்து, தந்தை சபாபதியை காப்பாற்றினார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஓனாக் கரடு பகுதியைச் சேர்ந்தவர் சபாபதி (வயது 48). விவசாயி.

    இவர் நேற்று இரவு குடும்பப் பிரச்சினை காரணமாக, வீட்டின் அருகில் உள்ள 80 அடி ஆழ கிணற்றில் திடீரென குதித்து விட்டார். இதைக் கண்ட அவரது மகன் கண்ணன் (20), கிணற்றில் குதித்து, தந்தை சபாபதியை காப்பாற்றினார்.

    ஆனால் அவர்கள் இருவராலும் கிணற்றில் இருந்து மேலே வர முடியவில்லை. இது பற்றி ராசிபுரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அதன் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி பலகார ராமசாமி தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று விவசாயி சபாபதி மற்றும் அவரது மகன் கண்ணன் ஆகிய இருவரையும் உயிருடன் மீட்டனர்.

    கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கந்தசாமி (வயது 60). இவர் சத்தியமங்கலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.ஆவார். இவரது மனைவி நவமணி (57). இவர் ஈரோடு மாவட்ட ஊராட்சி குழுத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
    • பரமத்திவேலூர் அனிச்சம்பாளையம் பிரிவு சாலை அருகே வந்தபோது, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.

    பரமத்திவேலூர்:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தாலுகா, தூக்கநாயக்கன் பாளையம் அருகே உள்ள கள்ளிக்காடு, வழங்கையான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60). இவர் சத்தியமங்கலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.ஆவார். இவரது மனைவி நவமணி (57). இவர் ஈரோடு மாவட்ட ஊராட்சி குழுத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

    இவர்கள் இருவரும் அரசு காரில் நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். பரமத்திவேலூர் அனிச்சம்பாளையம் பிரிவு சாலை அருகே வந்தபோது, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த அனிச்சம்பாளையத்தை சேர்ந்த செங்கோட்டையன் மகன் கல்லூரி மாணவர் பிரஜித் (19), நன்செய்இடையாறை சேர்ந்த ராஜேந்திரன் மகனான மெக்கானிக் கண்ணன் (19) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.

    இதைப் பார்த்த அவ்வழியாக வந்தவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், காரை அதிக வேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தாலுகா, தூக்க நாயக்கன் பாளையத்தை சேர்ந்த டிரைவர் முகேஷ் (25) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் காரை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியினையும், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் வார்டு எண் 18-ல் சாலை அமைக்கும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆய்வின்போது எருமப்பட்டி பேரூராட்சி தலைவர் பழனியாண்டி, செயல் அலுவலர் சக்திவேல், என்ஜினீயர் சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பேரூராட்சி வார்டு எண் 13-ல், நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக வாரச்சந்தை அமைக்கும் பணியினையும், மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியினையும், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் வார்டு எண் 18-ல் சாலை அமைக்கும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளை கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து எருமப்பட்டி பேரூராட்சி வாரச்சந்தை, பொது கழிப்பிடம் ஆகிய இடங் களை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு சுத்த மாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    பின்னர், அலங்காநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் அ.பாலப்பட்டி அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளை பார்வையிட்டு, அங்கிருந்து மாணவ -மாணவிகளுடன் கலந்துரையாடி அவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின்போது எருமப்பட்டி பேரூராட்சி தலைவர் பழனியாண்டி, செயல் அலுவலர் சக்திவேல், என்ஜினீயர் சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • கணபதிபாளையம் பகுதியில் குமாரபாளையம் வட்டார மோட்டர் வாகன ஆய்வாளர் சிவக்குமார் வாகன தணிக்கை செய்தார்.
    • ஒரு காரை தணிக்கை செய்யும் போது, அந்த கார் சொந்த பயன்பாட்டிற் கானது என்பதும், வெப்படையில் இருந்து பாரியூருக்கு வாடகைக்கு செல்வதும் கண்டு பிடிக்கப் பட்டது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆவத்திபாளையம் அடுத்த கணபதிபாளையம் பகுதியில் குமாரபாளையம் வட்டார மோட்டர் வாகன ஆய்வாளர் சிவக்குமார் வாகன தணிக்கை செய்தார்.

    அப்போது அந்த வழியாக சென்ற ஒரு காரை தணிக்கை செய்யும் போது, அந்த கார் சொந்த பயன்பாட்டிற் கானது என்பதும், வெப்படையில் இருந்து பாரியூருக்கு வாடகைக்கு செல்வதும் கண்டு பிடிக்கப் பட்டது.

    உரிய அனுமதி, ஆவணங்கள் இல்லாமல் சொந்த காரை வாடகைக்கு பயன்படுத்தியதால், உடனடியாக அந்த காரை பறிமுதல் செய்யப்பட்டு பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து மோட்டர் வாகன ஆய்வாளர் சிவக்குமார் கூறியதாவது:-

    கடந்த சில நாட்களாக, குமாரபாளையம் பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளில் வாகன தணிக்கை செய்யப்பட்டது. இதில் 105 வாகனங்கள் சோதனை செய்து 21 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. அதிக பாரம் ஏற்றிய மணல் லாரிகள் 2 சிறைபிடிக்கப்பட்டது.

    இந்த குற்றங்களுக்கு வரியாக ரூ.55 ஆயிரத்து 965, அபராதமாக கட்டணம் ரூ.60 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. இதேபோல் நேற்று நடந்த தணிக்கையில் வாடகைக்கு பயன்படுத்திய சொந்த கார் ஒன்று பறி முதல் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2024-ம் ஆண்டிற்கான சர்வதேச திறன் போட்டிகள் (வேல்ட் ஸ்கில்ஸ் காம்ப்ப டிஷன்ஸ் 2024) பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் நகரில் நடைபெற உள்ளது.
    • டிஎன் ஸ்கில்ஸ்-2023 என்ற தேசிய அளவிலான திறன் போட்டிகள் 55 திறன் பிரிவுகளுக்கு நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2024-ம் ஆண்டிற்கான சர்வதேச திறன் போட்டிகள் (வேல்ட் ஸ்கில்ஸ் காம்ப்ப டிஷன்ஸ் 2024) பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் நகரில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னோடியாக டிஎன் ஸ்கில்ஸ்-2023 என்ற தேசிய அளவிலான திறன் போட்டிகள் 55 திறன் பிரிவுகளுக்கு நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் கலந்து கொள்ளுவதற்கான தகுதி வயது வரம்பு மட்டுமே ஆகும். 1.1.2002க்கு பின் பிறந்த வர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம். இன்பர் மேஷன் நெட்வொர்க் கேபிளிங், மெக்கட்ரானிக்ஸ் போன்ற திறன் போட்டிகளில் பங்கேற்கும் போட்டியாளர் களின் வயது வரம்பு 25 வயதிற்கு மேல் இருக்க கூடாது.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், மருத்துவம், மருத்துவம் சார்ந்த, என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல், பாலி டெக்னிக், ஐடிஐ பள்ளிகளில் படித்த மற்றும் படிக்கும் மாணவ மாணவிகளும், தொழில் நிறுவனங்களில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த தொழிற்பழகுநர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தகுதியான தனி நபர்களும் இப்போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்.

    திறன் போட்டியில் கலந்துகொள்ள விருப்ப முள்ள போட்டியாளர்கள் தங்களது விவரங்களை https://naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற வெப்சைட் மூலம் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப் பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள திறன் பயிற்சி அவலக உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு விபரங்கள் அறியலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 406 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள்.

    மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட கலெக்டர், மனுக்களை பரிசீலினை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, சமூகப் பாதுகாப்புத் திட்ட சப்-கலெக்டர் பிரபாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் மனுக்களை அளித்தனர்.

    • சாலைப்புதூரில் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    பரமத்திவேலூர்:

    சாலைப்புதூரில் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    தேங்காய்

    இந்த வாரம் நடந்த ஏலத்தில் 86.60 குவிண்டால் எடை கொண்ட 22 ஆயிரத்து 6 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.20-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.16.79-க்கும், சராசரி விலையாக ரூ.19.19-க்கும் என மொத்தம் ரூ.ஒரு லட்சத்து 60ஆயிரத்து 358-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு,

    அதேபோல் 276.39 குவிண்டால் எடை கொண்ட 557-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.74.86-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.70.55-க்கும், சராசரி விலையாக ரூ.74.16-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.73.66-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.59.06-க்கும், சராசரி விலையாக ரூ.71.36-க்கும் என மொத்தம் ரூ.18 லட்சத்து 91 ஆயிரத்து 539-க்கு விற்பனையானது.

    எள்

    அதேபோல் 92.31 குவிண்டால் எடை கொண்ட 124-மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.145.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.126.99-க்கும், சராசரி விலையாக ரூ.126.11-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.147.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.120.19-க்கும், சராசரி விலையாக ரூ.143.99-க்கும் என மொத்தம் ரூ.12 லட்சத்து 24 ஆயிரத்து 22-க்கு விற்பனையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 32 லட்சத்து 75 ஆயிரத்து 919-க்கு விற்பனையானது.

    • ருஷ்ணன் (வயது 45). இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகள் பூர்ணிமா (16).
    • பூர்ணிமா நல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் நடந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா குன்னமலை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 45). இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகள் பூர்ணிமா (16).

    இந்த நிலையில் ஜெயலட்சுமியின் தாய் பாப்பா தனது பேத்தி பூர்ணிமா மற்றும் பேரன் தர்ஷன் ஆகிய இருவரையும் தனது பாதுகாப்பில் வளர்த்து வருகிறார். பூர்ணிமா நல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் நடந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

    அதன் காரணமாக நாமக்கல் நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பயிற்சி வகுப்பில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 17-ந் தேதி காலை பயிற்சி வகுப்பு செல்வதாக கூறிவிட்டு சமத்துவபுரம் 4 ரோட்டில் தனியார் பஸ்சில் ஏறி பயிற்சி வகுப்பு சென்றுள்ளார்.

    ஆனால் இரவு வெகு நேரமாகியும் பூர்ணிமா வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது பாட்டி பாப்பா தனது உறவினர்கள் வீட்டிலும், நண்பர்கள் வீடுகளிலும் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேடி பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து பாப்பா நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்கு பதிவு செய்து பூர்ணிமா தானாக எங்காவது சென்று விட்டாரா? அல்லது எவரேனும் பூர்ணிமாவை கடத்திச் சென்று விட்டனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கு காய்கறி பயிர்கள் சாகுபடியை ஊக்குவித்தலுக்காக 75 சதவிகித மானியத்தில் விதைகள் அல்லது நாற்றுகள் மற்றும் இயற்கை உரங்கள் வழங்கப்பட உள்ளது.
    • விவசாயிகள் மற்றும் விவசாயி அல்லாத பயனாளிகள் 75 சதவிகித மானியத்தில் ரூ.50 செலுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கோப்பணம்பாளையம், திடுமல், திடுமல் கவுண்டம்பாளையம் மற்றும் பெருங்குறிச்சி ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கு காய்கறி பயிர்கள் சாகுபடியை ஊக்குவித்தலுக்காக 75 சதவிகித மானியத்தில் விதைகள் அல்லது நாற்றுகள் மற்றும் இயற்கை உரங்கள் வழங்கப்பட உள்ளது.

    மேலும் மா,பலா, கொய்யா,எலுமிச்சை, நெல்லி,சீத்தா போன்ற 5 வகையான செடிகள் அடங்கிய பழச்செடி தொகுப்பு விவசாயிகள் மற்றும் விவசாயி அல்லாத பயனாளிகள் 75 சதவிகித மானியத்தில் ரூ.50 செலுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் பல்லாண்டு பழப்பயிர் சாகுபடி செய்ய பழச்செடிகள் மற்றும் இயற்கை உரங்கள் வழங்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், ரேசன் கார்டு நகல் மற்றும் பாஸ்ப்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கபிலர்மலை வட்டார தோட்டக்கலை துறையினை அணுகி பயன்பெறலாம் என்று கபிலர்மலை தோட்டக்கலை உதவி இயக்குநர் சின்னதுரை தெரிவித்துள்ளார்.

    • கார்த்திகேயன் (வயது 28). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கூரியர் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
    • அண்ணா பூங்கா படுகை தடுப்பு அணை பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர் ராஜ வாய்க்காலில் அனைவரும் குளித்துக் கொண்டு இருந்த போது கார்த்திகேயன் மட்டும் ராஜவாய்க்காலின் மறுகரைக்கு செல்ல முற்பட்டதாக கூறப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள கைலாசம் பாளையம் பக்தவச்சலம் நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 28). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கூரியர் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    நேற்று கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர்கள் 9 பேர் நேற்று பரமத்தி வேலூர் தாலுகா, ஜேடர் பாளையத்தில் உள்ள அண்ணா பூங்கா படுகை தடுப்பு அணை பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர் ராஜ வாய்க்காலில் அனைவரும் குளித்துக் கொண்டு இருந்த போது கார்த்திகேயன் மட்டும் ராஜவாய்க்காலின் மறுகரைக்கு செல்ல முற்பட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது அவர் நீச்சல் தெரியாததால் வெளியே வரமுடியாமல் உயிருக்கு போராடினார். பின்னர் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதை பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக ஜேடர்பாளையம் போலீசாருக்கும், நாமக்கல் தீயணைப்பு துறையி னருக்கும் தகவல் கொடுத் துள்ளனர்.

    தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுழலில் சிக்கி ராஜவாய்க் காலில் இறந்து போன கார்த்திகேயனின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்ப டைத்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக் கப்பட்டு கார்த்திகேயனின் உடலை பிரேத பரிசோத னைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×