search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car impoundment"

    • கணபதிபாளையம் பகுதியில் குமாரபாளையம் வட்டார மோட்டர் வாகன ஆய்வாளர் சிவக்குமார் வாகன தணிக்கை செய்தார்.
    • ஒரு காரை தணிக்கை செய்யும் போது, அந்த கார் சொந்த பயன்பாட்டிற் கானது என்பதும், வெப்படையில் இருந்து பாரியூருக்கு வாடகைக்கு செல்வதும் கண்டு பிடிக்கப் பட்டது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆவத்திபாளையம் அடுத்த கணபதிபாளையம் பகுதியில் குமாரபாளையம் வட்டார மோட்டர் வாகன ஆய்வாளர் சிவக்குமார் வாகன தணிக்கை செய்தார்.

    அப்போது அந்த வழியாக சென்ற ஒரு காரை தணிக்கை செய்யும் போது, அந்த கார் சொந்த பயன்பாட்டிற் கானது என்பதும், வெப்படையில் இருந்து பாரியூருக்கு வாடகைக்கு செல்வதும் கண்டு பிடிக்கப் பட்டது.

    உரிய அனுமதி, ஆவணங்கள் இல்லாமல் சொந்த காரை வாடகைக்கு பயன்படுத்தியதால், உடனடியாக அந்த காரை பறிமுதல் செய்யப்பட்டு பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து மோட்டர் வாகன ஆய்வாளர் சிவக்குமார் கூறியதாவது:-

    கடந்த சில நாட்களாக, குமாரபாளையம் பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளில் வாகன தணிக்கை செய்யப்பட்டது. இதில் 105 வாகனங்கள் சோதனை செய்து 21 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. அதிக பாரம் ஏற்றிய மணல் லாரிகள் 2 சிறைபிடிக்கப்பட்டது.

    இந்த குற்றங்களுக்கு வரியாக ரூ.55 ஆயிரத்து 965, அபராதமாக கட்டணம் ரூ.60 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. இதேபோல் நேற்று நடந்த தணிக்கையில் வாடகைக்கு பயன்படுத்திய சொந்த கார் ஒன்று பறி முதல் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரையில் வேலை வாங்கி தருவதாக கூறி காரை பறித்த கும்பல் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
    • குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ரேஸ்கோர்ஸ் காலனியை சேர்ந்தவர் வீரமணி (வயது 29). இவர் தல்லாகுளம் குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். அதில், ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் மாரியப்பன் (56), அவரது மனைவி பஞ்சவர்ணம் மற்றும் மகன் தங்கராஜ் (26) ஆகிய 3 பேரும் என்னிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினார்கள். அதனை நம்பி, நான் அவர்களுக்கு பாண்டியராஜ் என்பவரை அறிமுகம் செய்து வைத்தேன். அப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பாண்டியராஜ் கொடுத்த பணத்தை திரும்பி வாங்கிக் கொண்டார்.

    இந்த நிலையில் தங்கராஜ் குடும்பத்தினர் எனக்கு சொந்தமான காரை வாடகைக்கு எடுத்தனர். அதனை அவர்கள் இதுவரை திருப்பி தரவில்லை. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் தல்லாகுளம் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×