என் மலர்
நீங்கள் தேடியது "கிணற்றில் விழுந்த தந்தை-மகன்"
- சபாபதி (வயது 48). விவசாயி. இவர் நேற்று இரவு குடும்பப் பிரச்சினை காரணமாக, வீட்டின் அருகில் உள்ள 80 அடி ஆழ கிணற்றில் திடீரென குதித்து விட்டார்.
- இதைக் கண்ட அவரது மகன் கண்ணன் (20), கிணற்றில் குதித்து, தந்தை சபாபதியை காப்பாற்றினார்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஓனாக் கரடு பகுதியைச் சேர்ந்தவர் சபாபதி (வயது 48). விவசாயி.
இவர் நேற்று இரவு குடும்பப் பிரச்சினை காரணமாக, வீட்டின் அருகில் உள்ள 80 அடி ஆழ கிணற்றில் திடீரென குதித்து விட்டார். இதைக் கண்ட அவரது மகன் கண்ணன் (20), கிணற்றில் குதித்து, தந்தை சபாபதியை காப்பாற்றினார்.
ஆனால் அவர்கள் இருவராலும் கிணற்றில் இருந்து மேலே வர முடியவில்லை. இது பற்றி ராசிபுரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி பலகார ராமசாமி தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று விவசாயி சபாபதி மற்றும் அவரது மகன் கண்ணன் ஆகிய இருவரையும் உயிருடன் மீட்டனர்.
கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






