என் மலர்
நாகப்பட்டினம்
வேளாங்கண்ணி அருகே பெண்ணை தாக்கிய கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் வேதவள்ளி (வயது 50). இவர் தனது மகளின் திருமண உதவித் தொகைக்காக சான்றிதழ் வாங்க கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டுள்ளார்.ஆனால் உடனடியாக சான்றிதழ் கிடைக்காமல் அலைகழித்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் மீண்டும் சான்றிதழ் கேட்டார். அப்போது ஆத்திரமடைந்த அவர் ஜாதி பெயரை கூறி தகாத வார்த்தையால் வேதவள்ளியை திட்டி தாக்கியதாக தெரிகிறது.
இதில் காயமடைந்த வேதவள்ளி நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட வேதவள்ளி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தலைஞாயிறு ஒன்றியத்தில் வேளாள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியத்தில் நான்கு இடங்களில் உழவர் வேளாண்மைத் துறை சார்பாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக பன்னத்தெரு ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநில விவசாயிகள் ஆலோசனைக் குழு உறுப்பினரும் தி.மு.க ஒன்றிய செயலாளாருமான மகாகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ரெத்தினகுமார் , உதவி விதை அலுவலர்கள் ரவி, ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதேபோல வாட்டாகுடி, நாலுவேதபதி, கோவில்பத்து ஊராட்சிகளில் நிகழ்ச்சியில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் தமிழரசி, வேளாண் அலுவலர் நவீன்,ஊராட்சி மன்ற தலைவர்கள் கற்பகம் நீலமேகம், ஞானசுந்தரி , ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மாசிலாமணி, கஸ்தூரி, ரம்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் 800 குடும்பங்களுக்கு தலா 3 தென்னங்கன்றுகள் வீதம் 2400 தென்னங்கன்று களும் 50 சதவீத மானியத்தில் தார்பாய், பிரேயர் உள்ளிட்ட–வைகளும், 75 சதவீத மானியத்தில் உளுந்தும், 90 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள் மண்வெட்டி, கடப் பாறை உள்ளிட்ட பொருட்களும் இந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
திருமருகல் அருகே குழாய் உடைப்பால் குடிநீர் சாலையில் வீணாகி செல்கிறது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் அருகே நாகூர்-கங்களாஞ்சேரி சாலை வழியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் கடம்பங்குடியிலிருந்து பெருஞ்சாத்தன்குடி, வாழஒக்கூர், ஒக்கூர், வெங்கிடாங்கால், உத்தமசோழபுரம், பூதங்குடி, நரிமணம், சுள்ளாங்கால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஒக்கூர் பெரியார் சிலை அருகில் இரண்டு இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் அதிக அளவில் வெளியேறி வாய்க்காலில் ஓடி வீணாகிறது. இந்த குடிநீர் குழாய் உடைப்புகள் இன்னும் சரி செய்யப்படாமல் அப்படியே உள்ளது. கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்தும் உத்தமசோழபுரம், பூதங்குடி, நரிமணம், சுள்ளாங்கால் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்ப ட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவி த்தும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நாகூர் -கங்களாஞ்சேரி மெயின் சாலையில் உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய்களை சீரமைக்க கவனம் செலுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யத்தில் சணல் சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம், மருதூர், வாய்மேடு, கருப்பம்புலம், கரியாப்பட்டினம், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கரில் சம்பா அறுவடை முடிந்த உடன் வயலில் இருக்கும் ஈரப்பதத்தை கொண்டு சணல் பயிர் விதைக்கப்பட்டு 3 மாதத்தில் அறுவடைக்கு வரும்.
சணல் பயிர் இயற்கை பசுந்தாள் உரமாக வயல்களில் பயன்படுத்தப்படுகிறது .மேலும் களைகளை கட்டுபடுத்தும் தன்மை கொண்ட சணல் பயிர் தற்போது காய்த்து முற்நன் கூடிய நிலையில் உள்ளது .இது பசுந்தாள் உரமாக பயன்படுத்தப்படுகிறது.
சணல் பயிருக்கு அதிக செலவு இல்லாமலும், இயற்கை பசுந்தாள் உரமாகவும் பயன்படுகிறது .சணல் விதையை ஒரு கிலோ ரூ.60 விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் ஆர்வமுடன் பயிர் செய்து வருகின்றனர்.
ஒரு ஏக்கர் சாகுபடி செய்தால் சுமார் 250 கிலோ விலை கிடைப்பதாகவும் இதனை மறு ஆண்டு வயலில் விதைப்பதற்க்காக விதைகளை சில விவசாயிகள் எடுத்து வைத்துள்ளனர்.
நீர்,உரம்இன்றி நன்றாக சணல் பயிர் இந்த மண்ணில் விளைந்து விவசாயிகளுக்கு அதிக லாபமாகவும் , மண்ணுக்கு பசுந்தாள் உரமாகவும் பயன்படுத்துவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாகை அருகே சாராயம் கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து கடத்தி வரப்படும் சாராய பாக்கெட்டுகள் விற்பனையாகி வருவதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் காரை க்கால் மாவட்டத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாராய மூட்டைகள் கடத்தி வரப்படுவதாக நாகை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து நாகூர் முட்டம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மறைந்திருந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமை யிலான தனிப்படை போலீசார் மோட்டார் சைக்கிளில் சாராய மூட்டைகளை கடத்தி வந்த கும்பலை விரட்டி பிடித்தனர்.
அப்போது சாராய மூட்டைகளை தமிழக பகுதியான நாகை மாவட்டத்திற்கு கடத்தி வந்த கீழ்வேளூரை சேர்ந்த சூர்யா, காரைக்கால் மாவட்டம் போலகத்தை சேர்ந்த மனோஜ், தமிழ்வேந்தன், ராஜ்குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 6 சாராய மூட்டைகள், 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
வேதாரண்யம் அருகே மனைவியை கொல்ல வாயில் விஷம் ஊற்றிய கணவரை போலீசார் கைது செய்தனர்
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா சிறுதலைக்காடு, மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் குமார்(45). இவரது மனைவி தனபாக்கியம் (35). இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு இரண்டு மகளும் , ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் குமார் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு குடித்து விட்டு வந்து மனைவி மீது சந்தேகப்பட்டு மனைவியின் கையை பின் பக்கத்தில் வைத்து கட்டி வாயில் பூச்சி மருந்து எடுத்து தண்ணீருடன் கலந்து வாயில் ஊற்றி உள்ளார்.
இதனையடுத்து தனபாக்கியம் கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தன பாக்கியத்தை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்
இதுகுறித்து புகாரின் பேரில் வாய்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாகீஸ்வரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கூட்டுறவு அங்காடியில் வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் திட்டச்சேரி வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட கிராம கூட்டுறவு அங்காடியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி மற்றும் இதர பொருட்களின் தரம் குறித்தும், பொருட்கள் இருப்பு குறித்த விவரத்தினையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
நாகை மாவட்டத்திர் குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் பல்வேறு சாராய வழக்குகளில் தொடர்புடைய வேளாங்கண்ணியை சேர்ந்த சேவல் என்கிற பக்கிரிசாமியை (வயது 40) மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி பக்கிரிசாமியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
வேதாரண்யத்தில் தொழிலாளியை வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் 3ம் சேத்தி திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் மகன் சந்திரசேகரன் (22). அதே பகுதியைச் சேர்ந்த முருகையன் மகன் பிரகாஷ் (17). இவர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் கூலி வேலை பார்த்து வந்துள்ளனர்.
பின்னர் ஊருக்கு வந்துள்ளனர். இந்நிலையில் ஆந்திராவில் கூலி வேலை பார்த்ததற்கு சந்திரசேகருக்கு பணம் வந்துள்ளது. அந்த பணத்தை சந்திரசேகரன் பிரகாஷுக்கு கொடுக்காமல் மற்ற நண்பர்களுக்கு பிரித்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நண்பரு டன் சந்திரசேகரன் பேசி க்கொண்டு இருந்தபோது அந்த பகுதிக்கு வந்த பிரகாஷ் என் பணத்தை கொடு் என்று கேட்டுள்ளார். அதற்கு சந்திரசேகரன் பணத்தை ஆந்திராவில் வேலை பார்த்த இடத்தில் போய் வாங்கிக்கொள் என்று கூறியுள்ளார்.
இதனை அடுத்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சந்திரசேகரனை வெட்டியுள்ளார்.
அக்கம் பக்கத்தினர் சந்திரசேகரனை வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், பின்பு மேல் சிகிச்சைக்காக நாகப்ப ட்டினம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் இதுகுறித்து வாய்மேடு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர்.
தலைஞாயிறில் தீயணைப்பு நிலையம் கட்டும் இடம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் தலைஞாயிறு காவல் சரக பகுதிகளில் காவல் துறை இயக்குனரும்,தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவருமான ஏ.கே. விஸ்வநாதன் ஆய்வு.
வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகம் மற்றும் அலுவலர்கள் தங்கும் விடுதி ஆகியவை புதிதாக கட்டப்பட்டு வருகிறது இந்த பணிகளை காவல்துறை இயக்குனரும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவருமாண ஏ.கே. விஸ்வநாதன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், போலீஸ் துணை சூப்பிரண்டு முருகவேல், தலைஞாயிறு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைஞாயிறு தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகர், தீ தடுப்பு அலுவலர் பாலு மற்றும் தீயணைப்பு துறைபணியாளர்கள் உடனிருந்தனர்.
திருக்குவளை கல்லூரியில் மாணவர்கள் அமைப்பு தொடக்க விழா நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் உறுப்பு கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரி வளாகத்தில் உள்ள கருத்தரங்கில் “எல்லைகள் இல்லா பொறியாளர்கள் மாணவ ர்கள் அமைப்பு” தொடக்க விழா நடைப்பெற்றது.
முன்னதாக குத்துவிளக்கு ஏற்றி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்விற்கு கல்லூரி புல முதல்வர் இளங்கோவன் தலைமை வகித்தார். மின்னனியல் மற்றும் மின்னனு துறை தலைவர் முனைவர் சரவணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சித்ரா செல்வி வரவேற்புறையாற்றினார்.
நிகழ்ச்சியில் “எல்லைகள் இல்லா பொறியாளர்கள்” தலைவர் முனைவர் பாரத் சந்திர மகாராஜா காணொலி வாயிலாக கலந்து கொண்டு பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக “ பெங்களூர் இந்திய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின் விஞ்ஞானி முனைவர் வி.தில்லிபாபு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மாணவர்கள் மிகச்சிறந்த கண்டுப்பிடிப்புகளை அறிவியல் தொழில் நுட்பத்தின் வாயிலாக கண்டறிந்து நாட்டுக்கும் சமூகத்துக்கும் பக்க பலமாக இருக்க வேண்டும்,
அறிவியல் கண்டுபிடி ப்புகளை காலத்திற்கேற்ப அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என செயல்முறை விளக்கங்களோடு பேசி னார்.
பின்னர் அறிவியல் தொழில்நுட்பம் குறித்து தான் எழுதிய மூன்று புத்தகங்களை கல்லூரி நூலகத்திற்கு பரிசாக வழங்கினார். முடிவில் உதவி பேராசிரியர் முனைவர் எம்.துரைராசன் நன்றி கூறினார்.
திருப்பூண்டி அருகே வைகாசி திருவிழாவில் செடிலில் குழந்தைகளை வைத்து தூக்க நேர்ச்சை வழிபாடு செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருப்–பூண்டியை அடுத்த சோழ வித்தியாபுரத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீநல்லமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 17-ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் நடைபெற்றது. 30 அடி உயரமுள்ள செடில் மரத்தில், வேண்டுதல் நிறைவேற நூற்றுக்–கணக்கான பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை செடிலில் வைத்து, தூக்க நேர்ச்சை வழிபாடு செய்தனர்.
இதனை தொடர்ந்து காவடி மற்றும் பால்காவடி, பாடைகாவடி எடுத்து வந்தும், மாவிளக்கு, அர்ச்சனை செய்தும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம், மே.21-
நாகை மாவட்டம் திருப்–பூண்டியை அடுத்த சோழ வித்தியாபுரத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீநல்லமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 17-ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் நடைபெற்றது. 30 அடி உயரமுள்ள செடில் மரத்தில், வேண்டுதல் நிறைவேற நூற்றுக்–கணக்கான பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை செடிலில் வைத்து, தூக்க நேர்ச்சை வழிபாடு செய்தனர்.
இதனை தொடர்ந்து காவடி மற்றும் பால்காவடி, பாடைகாவடி எடுத்து வந்தும், மாவிளக்கு, அர்ச்சனை செய்தும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






