என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகையில் கொள்முதல் பணியில் உள்ள குளறுபடிகளை கைவிடக்கோரி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
    நாகப்பட்டினம்:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நாகப்பட்டினம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலைமேலாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்றது ஆர்ப்பா ட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மண்டல தலைவர் தமிழரசன் தலைமை வகி த்தார் சுமைப்பணி மாவட்ட செயலாளர் ஜெயராமன் நாகை மண்டல நிர்வாகி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    நாகை மாலி எம்.எல்.ஏ, சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் தங்கமணி ஆகியோர் கண்டன உரையா ற்றினர். நாகை நுகர்பொருள் மண்டல மண்டல செயலாளர் கார்த்திகேயன், சி.ஐ.டி.யு மாவட்ட குழு குருசாமி, சி.ஐ.டி.யு சுமைப்பணி மாவட்ட தலைவர் தமிழரசன், டாஸ்மாக் சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் சிவக்குமார் ஆகியோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

    இதில் கொள்முதல் பணியில் உள்ள குளறு படிகளை கைவிட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது, 

    தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி, சரண்டர் ஊதியம் வழங்க வேண்டும் டி.என்.டி*என் எஸ்.எஸ்.சி உள்ள அமுதம் ரேசன் கடைகளை கூட்டுறவு துறைக்கு மாற்ற கூடாது, சுமை தூக்கும் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை சம்பளத்தைஉயர்த்தி வழங்கிட வேண்டும்உள்ளி ட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.  இறுதியாக உள்ளாட்சித் துறை மாவட்ட செயலாளர் அன்பழகன் நன்றி கூறினார்.
    இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட நாகை மீனவர்களின் விசைப்படகுகளை மீட்டுத் தர வேண்டி முதல்-அமைச்சரிடம் மீனவ மக்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர்.
    நாகப்பட்டினம்:

    டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 

    இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த கருவேலங்கடை கல்லாறு வாய்க்கால் தூர்வாரப்பட்ட பணியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு கூடி இருந்த மீனவ பெண்கள் முதலமைச்சரை சந்தித்துமனு அளிக்க முயற்சித்தனர்.ஆனால் பாதுகாவலர்கள் அவர்களை விட மறுத்ததால் அந்தப் பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். 

    இதனை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவப் பெண்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட நாகை மீனவர்களின் படகுகளை மீட்டுத்தர வேண்டும் என மீனவ பெண்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கண்ணீர் மல்க காலில் விழுந்து கோரிக்கை விடுத்தனர். 

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மீனவ பெண்களிடம் உறுதி அளித்தார்.
    நாகையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வருபவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி சர்வதேச கடத்தல் கும்பலோடு தொடர்பு வைத்து அதிக அளவிலான கஞ்சா பொட்டலங்களை இலங்கைக்கு கடத்திய கும்பல் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

    நாகப்பட்டினத்தில் இருந்து படகு மூலம் கடந்த பிப்ரவரி 18ம் தேதி இலங்கைக்கு 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 400 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்த முயன்ற கடத்தல் கும்பலை தனிப்படை போலீசார் கையும் களவுமாக பிடித்தது. அதோடு கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிலம்புச்செல்வம், மோகன், சரவணன், நிவாஸ் கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ஜெகதீசன் ஆகிய 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் சிறையில் இருந்து வரும் நிலையில் இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார்.

    இதையடுத்து இவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். கஞ்சா புழக்கத்தை நாகை மாவட்டத்தில் முற்றிலும் தடுக்க இதுபோன்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாகை மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    வேளாங்கண்ணியில் குடிபோதை தகராறில் வாலிரை தாக்கிய தந்தை-மகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை அருகே தெற்கு பொய்கை நல்லூர், வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மோகன் (வயது 40). இவரும் வேளாங்கண்ணி பண்டகசாலை தெருவைச் சேர்ந்த ஆனந்த மாரிமுத்து (36) என்பவரும், வேளாங்கண்ணி பஸ் நிலையம் அருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது மோகன் கூடுதலாக தனக்கு மது பாட்டில் வாங்கிக்கொடு க்குமாறு கூறி ஆனந்த மாரிமுத்துவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அந்த நேரத்தில் அங்கு வந்த ஆனந்தமாரிமுத்துவின் தந்தை மதியழகன் இது குறித்து மோகனை தட்டி கேட்டார். இதில் மோகன் ஆத்திரம் அடைந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இருவரையும் குத்த முயன்றார்.  அப்போது ஆனந்தமாரி முத்து அவரது தந்தை மதியழகன்இணைந்து சவுக்கு கட்டையால் மோகனை தாக்கினர்.

    இதில் பலத்த காயமடைந்த அவர் நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது பற்றிய புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் குமரேசன் வழக்குப்பதிவு செய்து ஆனந்த மாரிமுத்து, மதியழகன் ஆகியோரை கைது செய்தார். 

    தலைஞாயிறில் சார்பதிவாளர் அலுவலகத்தை மீண்டும் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறில் 1982 ஆம் ஆண்டு சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த அலுவலகம் 17 கிராமத்துடன் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு தலைஞாயிறு சார்பதிவாளர் அலுவலகம் மூடப்பட்டது. 

    10 கிராமங்கள் திருப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்க ப்பட்டது. இதனால் தலைஞாயிறு கிராமத்தில் உள்ளவர்கள் வில்லங்கச் சான்று, பத்திர நகல் எடுக்க, பிறப்பு இறப்பு பதிவு செய்ய அலைய வேண்டியுள்ளது.

    எனவே தலைஞாயிறு பகுதி பொதுமக்கள் நலன்கருதி பத்திரப்பதி வுகாக அலைக்கழிக்கபடுவதை தவிர்க்கும் பொருட்டு தலைஞாயிறில் 19 ஆண்டு களாக மூடப்பட்ட சார்பதி வாளர் அலுவல கத்தை மீண்டும் திறக்க வேண்டும். இது தொடர்பாகஒன்றியக் குழு கூட்டத்தில் நிறைவே ற்றப்பட்ட தீர்மானத்தை அரசு அமல்படுத்த வேண்டுமென தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி கோரிக்கை விடுத்துள்ளார்.
    வேதாரண்யம் அருகே சிலம்ப கலை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா வண்டுவாஞ்சேரி கிராமத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கிளைத் தலைவர் குழந்தைவேலு தலைமை வகித்தார். 

    சிலம்பாட்டக் கழக மாவட்டச் செயலாளர் கருணாகரன், கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டச் செயலாளர் அம்பிகாபதி, கவிஞர் கருணாநிதி, ஊராட்சி மன்றத் தலைவர் வனிதா ரவிச்சந்திரன், துணைத் தலைவர் தியகராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கோமதி தனபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மூத்த ஆசான் ராமையா, கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவர் கவிஞர் புயல் குமார், துணைத் தலைவர் பார்த்தசாரதி, சிறு உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் செந்தில், முனைவர் ராமஜெயம், தலைமையாசிரியர் பாஸ்கரன், நாடக ஆசிரியர் ராசேந்திரன், கவிஞர் ராசேந்திரன், விவசாய சங்க தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் சங்கரன், சுப்ரமணியன், கவிஞர் அசோக், ஆசிரியர் சத்தியசிவம் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

    நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பங்கேற்ற சிலம்பாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி பகுதிகளில் சிட்டுக்குருவியை காக்க பொதுமக்களுக்கு இலவசமாக கூண்டு வழங்கப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    நாகை மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் சிட்டு குருவிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் அதன் இனப்பெருக்கத்திற்காக 1000 கூடுகளைஅமைக்கும் பணியை நாகை ஸ்ரீஅறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை ஸ்ரீஅறுபடை பசுமை சிறகுகள் அமைப்பின் மூலம் தொடங்கி உள்ளது. இதில் ஏராளமான இயற்கை ஆர்வலர்கள் பங்கெடுத்து வருகின்றனர்.

    இந்த கூடுகளை அமைக்க விரும்பும், ஆர்வலர்கள் இல்லங்களில் ஸ்ரீ அறுபடை அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், கூடுகளையும் சரியான இடத்தில் பொருத்தி வருகின்றனர். கூடுகள் தேவைப்படுவோர் 8344448944 என்கிற எண்ணில் அழைக்கலாம்.

    மாணவர்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கில் நாகூர் மார்டன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சிட்டுக்குருவிக்கு கூண்டினை ஏன் அமைக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு பிரசாரம் ஸ்ரீ அறுபடை பசுமை சிறகுகள் நிறுவனர் ராஜசரவணன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் பசுமைப்படை மாவட்ட தலைவர் முத்தமிழ்ஆனந்தன், ஸ்ரீ அறுபடை பசுமை சிறகுகள் அமைப்பின் நிர்வாகிகள் கார்த்திக், ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    திருமருகல் ஒன்றியத்தில் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியத்தில் பனங்குடி, ஏர்வாடி, அம்பல், போலகம், கீழப்பூதனூர் உள்ளிட்ட 5 ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி ஏர்வாடி ஊராட்சியில் திருமருகல் வட்டார ஆத்மா திட்ட குழு தலைவர் செல்வசெங்குட்டவன் தலைமை தாங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) கலைச்செல்வன் வேளாண் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விரிவாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஒரு ஊராட்சிக்கு 100 விவசாயிகள் விகிதம் 3 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. அதேபோல் விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் வரப்பு உளுந்து பயறுகள் வழங்கப்பட்டது. 5 விவசாயிகளுக்கு கைத்தறிப்பான்கள் மானியத்திலும், 5 விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான் 50 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டது. தோட்டக்கலைத்துறை சார்பில் 10 விவசாயிகளுக்கு 8 வகையான காய்கறி விதைகள் மற்றும் உயிரி உரம் இலவசமாக வழங்கப்பட்டது.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் குமார், ஊராட்சி செயலாளர் சரவணன், ஆத்மா திட்ட குழு உறுப்பினர் மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல் கீழப்பூதனூர் ஊராட்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சரவணன், இளஞ்செழியன் ஆகியோர் தலைமை தாங்கி திட்டத்தை துவக்கி வைத்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    பனங்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா செந்தில்குமார் தலைமையிலும், அம்பல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சீதளா பாலாஜி தலைமையிலும், போலகம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பவுஜியாபேகம் அபுசாலி தலைமையிலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இதில் ஊராட்சி செயலாளர்கள், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம் பகுதி ஆறுகளில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தாணிக்கோட்டகம், வாய்மேடு, மருதூர்,  ஆயக்காரன்புலம், பன்னாள், கருப்பம்புலம், கோவில்தாவு வரை சுமார் 25 கிலோமீட்டர் தூரம் வரை இப்பகுதியில் மிகப்பெரிய பாசன மற்றும் வடிகால் ஆறாக உள்ளது.

    இதில் தாணிக்கோட்டகத்தில் இருந்து வாய்மேடு வரை முள்ளியாற்று பாசனமாகவும் , தகட்டூரி–லிருந்து  ஆதனூர் வரை மிகப் பெரிய ஆறாக மானங்கொண்டானாறு ஓடுகிறது. இந்த ஆறுகளில் வாய்மேடு, மருதூர்,
    ஆயக்காரன்புலம் நீங்க பெற்றவர்களில் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் ஆகாய தாமரை மண்டிக்கிடக்கிறது. 

    மருதூர் கடைத்தெருவில் இருந்து  தகட்டூர் ஆதியங்காடு  வரை உள்ள செல்லக்கோன் வாய்க்காலில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் ஆற்றில்  ஆகாயத்தாமரை மிகுந்து காணப்படுகிறது .ஆகாயத்தாமரை ஆற்றுக்குள் மிகநெருக்கமாக மண்டிக்கிடப்பதால் ஆடு மாடுகள் கூட இறங்கி தண்ணீர் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

    இந்த ஆகாயத்–தாமரையால் தண்ணீர் வற்றிய தோடு துர்நாற்றமும் வீசுகிறது.  எனவே ஆறுகளில் மண்டிக்கிடக்கும் இந்த ஆகாய தாமரை–களை அகற்ற வேண்டும்.

    மேலும் மேட்டூரில் தண்ணீர் திறந்த நிலையில் கடைமடை பகுதியான வேதாரண்யம் பகுதிக்கு தண்ணீர் வர குறைந்த–பட்சம் 10 நாட்கள் ஆகும் அதற்குள் இந்த ஆறுகளில் மண்டிக்கிடக்கும் ஆகாயத் தாமரைகளைஅகற்ற வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நாகை அருகே புனித அந்தோணியார் ஆலய ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த கருங்கண்ணியில் பழைமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது.

     இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியே–ற்றத்துடன் தொடங்கியது. 

    முன்னதாக கொடி ஊர்வலம் ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக, மீண்டும் ஆலயத்தினை வந்தடைந்தது.

    தமிழக ஆயர் பேரவை செயலாளர் சகாயராஜ் தலைமையில் சிறப்புத் திருப்பலி செய்து வைத்தார். தொடர்ந்து கொடி புனிதம் செய்யப்பட்டு, ஆலயத்தின் முன் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. 

    திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து வண்ணமிகு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து முடி சூடுவிழா நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்கார பெரிய தேர்பவனி வரும் 4-ம் தேதி நடைபெறுகிறது.
     
    இந்நிகழ்ச்சியில் கருங்கண்ணி பங்குத்தந்தை சபரிமுத்து, வேளாங்கண்ணி பேராலய உதவிப் பங்குத்தந்தை டேவிட் தனராஜ், மற்றும் நிகழ்ச்சிகளை கருங்கண்ணி கிறிஸ்தவ சமுதாய பெருந்தலைவர் பிரான்சிஸ், துணைதலைவர், விக்டர் பவுல்ராஜ் மற்றும் ஊர் பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்தனர்.

    நாகை அருகே லாரி கவிழ்ந்து பெண் பலியானார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர் கல்பனா (வயது 40). இவர் கீச்சாங்குப்பம், சாமந்தான் பேட்டை, நம்பியார் நகர் உள்ளிட்ட மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவப் பெண்களுடன் இணைந்து தினமும் லாரியில் மீன்களை ஏற்றி கொண்டு வியாபாரம் செய்து வருவது வழக்கம்.

    அதன்படி இன்று அதிகாலை கல்பனா அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வேம்பு (52), பொன்னாச்சி (63), மீனாட்சி (45), பட்டம்மாள் (60), சத்யா (44) உள்ளிட்ட 7 மீனவ பெண்களுடன் சேர்ந்து டெம்போ லாரியில் மீன் லோடு ஏற்றிக் கொண்டு வியாபாரம் செய்வதற்கு திருவாரூர் நோக்கி புறப்பட்டார். 

    லாரியை கரிகாலன் என்பவர் ஓட்டினார்.அப்போது கீழ்வேளூர் அருகே சென்ற போது லாரியின் பின் பக்க டயர் திடீரென வெடித்தது.

     இதனால் நிலை தடுமாறிய லாரி தலைகுப்புற கவிழ்ந்தது. லாரியில் இருந்த பெண்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டனர்.

    இந்த விபத்தில் கல்பனா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.  வேம்பு, மீனாட்சி, பட்டம்மாள் உள்ளிட்ட 7 பெண்கள் மற்றும் டிரைவர் கரிகாலன் ஆகிய 8 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.

    அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வேதாரண்யத்தில் 1000 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியத்தில் 5 இடங்களில் உழவர் வேளாண்மைத் துறை சார்பாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    வேதாரண்யம் தாலுகா தகட்டூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தி.மு.க ஒன்றிய செயலாளார் உதயம் முருகையன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு, வேளாண்மை உதவி இயக்குனர் கண்ணன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    இதேபோல தேத்தாகுடி–தெற்கு , பஞ்சநதிக்குளம் கிழக்கு, வாய்மேடு பிராந்தி–யங்கரை ஊராட்சிகளில் நிகழ்ச்சியில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தி.மு.க அவைத்தலைவர் சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ரவிச்சந்திரன் முன்னாள் கவுன்சிலர் கோவிந்தசாமி, வேளாண் அலுவலர்கள் வைரவமூர்த்தி, இந்திரா, ஊராட்சி மன் உறுப்பினர்கள் , ஞானசுந்தரி , ஒன்றியக்குழு உறுப்பினர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    இந்த நிகழ்ச்சியில் 1000 குடும்பங்களுக்கு தலா 3 தென்னங்கன்றுகள் வீதம் 3000 தென்னங்கன்றுகளும் 50 சதவீத மானியத்தில் தார்பாய், பிரேயர் உள்ளிட்டவைகளும், 75 சதவீத மானியத்தில் உளுந்தும், 90 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள் மண்வெட்டி, கடப் பாறை உள்ளிட்ட பொருட்களும் இந்த நிகழ்ச்சியில் பயனாளி–களுக்கு வழங்கப்பட்டது.
    ×