என் மலர்
உள்ளூர் செய்திகள்

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட 5 மீனவர்கள்.
குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது
நாகையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வருபவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி சர்வதேச கடத்தல் கும்பலோடு தொடர்பு வைத்து அதிக அளவிலான கஞ்சா பொட்டலங்களை இலங்கைக்கு கடத்திய கும்பல் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
நாகப்பட்டினத்தில் இருந்து படகு மூலம் கடந்த பிப்ரவரி 18ம் தேதி இலங்கைக்கு 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 400 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்த முயன்ற கடத்தல் கும்பலை தனிப்படை போலீசார் கையும் களவுமாக பிடித்தது. அதோடு கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிலம்புச்செல்வம், மோகன், சரவணன், நிவாஸ் கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ஜெகதீசன் ஆகிய 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் சிறையில் இருந்து வரும் நிலையில் இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார்.
இதையடுத்து இவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். கஞ்சா புழக்கத்தை நாகை மாவட்டத்தில் முற்றிலும் தடுக்க இதுபோன்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாகை மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story






