என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5000 Acre"

    வேதாரண்யத்தில் சணல் சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம், மருதூர், வாய்மேடு, கருப்பம்புலம், கரியாப்பட்டினம்,  உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கரில் சம்பா அறுவடை முடிந்த உடன் வயலில் இருக்கும் ஈரப்பதத்தை கொண்டு சணல் பயிர் விதைக்கப்பட்டு 3 மாதத்தில் அறுவடைக்கு வரும். 

    சணல் பயிர் இயற்கை பசுந்தாள் உரமாக வயல்களில் பயன்படுத்தப்படுகிறது .மேலும் களைகளை கட்டுபடுத்தும் தன்மை கொண்ட சணல் பயிர் தற்போது காய்த்து முற்நன் கூடிய நிலையில் உள்ளது .இது பசுந்தாள் உரமாக பயன்படுத்தப்படுகிறது.

    சணல் பயிருக்கு அதிக செலவு இல்லாமலும், இயற்கை பசுந்தாள் உரமாகவும் பயன்படுகிறது .சணல் விதையை ஒரு கிலோ ரூ.60 விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் ஆர்வமுடன்  பயிர் செய்து வருகின்றனர். 

    ஒரு ஏக்கர் சாகுபடி செய்தால் சுமார் 250 கிலோ விலை கிடைப்பதாகவும் இதனை மறு ஆண்டு வயலில் விதைப்பதற்க்காக  விதைகளை சில விவசாயிகள் எடுத்து வைத்துள்ளனர். 

    நீர்,உரம்இன்றி நன்றாக சணல் பயிர் இந்த மண்ணில் விளைந்து விவசாயிகளுக்கு  அதிக லாபமாகவும் , மண்ணுக்கு பசுந்தாள் உரமாகவும் பயன்படுத்துவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×