என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாராயம் கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள்.
சாராயம் கடத்திய 4 பேர் கைது
நாகை அருகே சாராயம் கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து கடத்தி வரப்படும் சாராய பாக்கெட்டுகள் விற்பனையாகி வருவதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் காரை க்கால் மாவட்டத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாராய மூட்டைகள் கடத்தி வரப்படுவதாக நாகை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து நாகூர் முட்டம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மறைந்திருந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமை யிலான தனிப்படை போலீசார் மோட்டார் சைக்கிளில் சாராய மூட்டைகளை கடத்தி வந்த கும்பலை விரட்டி பிடித்தனர்.
அப்போது சாராய மூட்டைகளை தமிழக பகுதியான நாகை மாவட்டத்திற்கு கடத்தி வந்த கீழ்வேளூரை சேர்ந்த சூர்யா, காரைக்கால் மாவட்டம் போலகத்தை சேர்ந்த மனோஜ், தமிழ்வேந்தன், ராஜ்குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 6 சாராய மூட்டைகள், 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
Next Story






