என் மலர்
நீங்கள் தேடியது "திருமண உதவித் தொகை"
வேளாங்கண்ணி அருகே பெண்ணை தாக்கிய கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் வேதவள்ளி (வயது 50). இவர் தனது மகளின் திருமண உதவித் தொகைக்காக சான்றிதழ் வாங்க கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டுள்ளார்.ஆனால் உடனடியாக சான்றிதழ் கிடைக்காமல் அலைகழித்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் மீண்டும் சான்றிதழ் கேட்டார். அப்போது ஆத்திரமடைந்த அவர் ஜாதி பெயரை கூறி தகாத வார்த்தையால் வேதவள்ளியை திட்டி தாக்கியதாக தெரிகிறது.
இதில் காயமடைந்த வேதவள்ளி நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட வேதவள்ளி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.






