என் மலர்
நாகப்பட்டினம்
கீழையூர் கிராமத்திற்கு தனி அங்கன்வாடி கேட்டு குத்தாலம் தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
குத்தாலம்:
குத்தாலம் அருகே தேரழுந்தூர் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் முழுநேர அங்காடி தேரழுந்தூரில் செயல்பட்டு வருகிறது. கீழையூர் கிராம மக்கள் தேரழுந்தூர் முழுநேர அங்கன்வாடிக்கு 4 கிலோ மீட்டர் சென்று ரேசன் பொருட்கள் வாங்கி வரும் அவல நிலை உள்ளது. மேலும் அங்கன்வாடியில் அரிசி, ஆயில், கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வரவில்லை என்றும், மாதம் ஒரு முறைதான் அங்கன்வாடி திறக்கப்படுகிறது என்றும் கீழையூர் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும் அங்கன்வாடிக்கு பொருட்கள் வாங்க சென்றவர்களிடம் போதிய அளவு பொருட்கள் இல்லை என கூறி திருப்பி அனுப்பினர். ஏன் பொருட்கள் இல்லை என்கிறீர்கள் என எதிர்த்து கேட்டனர். இதனால் பொதுமக்களுக்கும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அங்கன்வாடியை முற்றுகையிட்டனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்று குத்தாலம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கீழையூர் கிராமத்திற்கு தனி அங்கன்வாடி வேண்டும் என்று முறையிட்டனர். இதனால் குத்தாலம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை அருகே மின்சாரம் தாக்கி 3 பெண்கள் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிக்கல்:
நாகை அருகே உள்ள சிக்கல் கிராமத்துக்கு சங்கமங்கலம் செல்லும் சாலையில் உள்ள பிரதான டிரான்ஸ்பார்மர் முலம் மின் வினியோகம் செய்யப்படுகிறது. நேற்று காலை கீழவீதியில் உள்ள பழைய ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள சுவரில் வளர்ந்துள்ள அரசமரக்கிளைகள் வழியாக சென்ற மின் கம்பி திடீரென அறுந்து விழுந்தது. மின்கம்பி அறுந்து கீழே விழுந்து கிடப்பது தெரியாமல் தனது வீட்டில் இருந்து சாந்தி(வயது40) என்பவர் வெளியே வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் சாந்தியின் கை பட்டது.
இதனால் அவரை மின்சாரம் தாக்கியது. இதைக்கண்ட அருகில் வசித்து வந்த விஜயலெட்சுமி மற்றும் வசந்தா ஆகியோர் சாந்தியை காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்களையும் மின்சாரம் தாக்கியது. இதனால் அவர்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த நாகை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (தெற்கு) பாலாஜி நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். மின்சாரம் தாக்கி 3 பெண்கள் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அதிகாலையில் கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சீர்காழியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி தென்பாதி திருவள்ளுவர் நகர் 2-வது தெருவில் வசிப்பவர் ஓதவந்தான்குடி ஊராட்சி ஒன்றிய அரசுபள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தஜோதி(வயது 52) இவரது மனைவி சித்ரா (49) என்பவர் அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போட்டுள்ளார். அப்போது பின்னால் வந்த மர்ம நபர் சித்ராவை தலையில் அடித்துள்ளார். இதில் தலை சிதறி சித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அருகில் வசித்த பெண் வெளியே வந்து பார்த்தபோது சித்ரா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பது கண்டு சத்தம்போட்டுள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஆனந்தஜோதியின் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தபோது சித்ரா கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கண்ணீர்விட்டு கதறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி டி.எஸ்.பி யுவப்பிரியா தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் சித்ராவின் உடலை கைப்பற்றி நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமா? என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அதிகாலையில் கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சீர்காழியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி அருகே பல்வேறு சாராய வழக்குகளில் தொடர்புடைய பெண் வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை:
சீர்காழி அருகே உள்ள வள்ளுவக்குடி பாதரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் துரை மனைவி செல்வி(வயது 45). சாராய வியாபாரியான இவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது பல சாராய வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம், மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் ஆகியோர் செல்வியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயருக்கு பரிந்துரை செய்தனர்.
இதைத்தொடர்ந்து செல்வியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதன்பேரில் மயிலாடுதுறை மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீசார் செல்வி மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அதன் நகலை திருச்சி மத்திய சிறையில் ஒப்படைத்தனர்.
பொறையாறு அருகே உள்ள அனந்தமங்கலம் கோவிலில் இருந்த 3 சாமி சிலைகள் லண்டனில் மீட்கப்பட்டது. இந்த சிலைகள் விரைவில் இந்தியா கொண்டு வரப்படுகிறது.
பொறையாறு:
நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ளது அனந்தமங்கலம். இந்த கிராமத்தில் அமைந்துள்ளது ராஜகோபாலசாமி கோவில். மூன்று கண்கள் மற்றும் 10 கைகளுடன் அனுமன் காட்சி தரும் சிறப்புடைய கோவில். இத்தகைய அமைப்பு தமிழகத்திலேயே இந்த கோவிலில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனிச்சிறப்பு என்னவென்றால் அனந்தமங்கலம் கோவில், ராமாயணத்துடன் நேரடி தொடர்பு கொண்டது.
ராமபிரானின் கட்டளையை ஏற்று கடலில் பதுங்கி இருந்த இரு அரக்கர்களை அழித்து, அனுமன் ராமபிரானை சந்திக்க திரும்பிக் கொண்டிருந்தபோது அனந்தமங்கலத்தில் இளைப்பாற இறங்கியுள்ளார். இயற்கை அழகுடன் இருந்த இந்த பகுதியில் மன நிறைவோடு ஆனந்தம் அடைந்தார். எனவே இந்த திருத்தலம் அனந்தமங்கலம் என அழைக்கபடுகிறது.
கடந்த 1978-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி இந்த கோவிலில் இருந்த வெண்கலத்தால் ஆன ராமர், சீதை, லட்சுமணர் மற்றும் அனுமன் ஆகிய 4 சிலைகள் கொள்ளை போனது. ஒட்டு மொத்தமாக நான்கு சிலைகள் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொள்ளை போன சிலைகள் பல்வேறு கைகள் மாறி லண்டனுக்கு சென்று விட்டது. ராமர், லட்சுமணர் சிலைகள் தலா 30 கிலோ எடையும், சீதை சிலை 25 கிலோ எடையும், அனுமன் சிலை 15 கிலோ எடை கொண்டதாகவும் இருந்தது. சிங்கப்பூரில் ‘இந்தியா பிரைடு’ (பெருமை மிக்க இந்தியா) என்ற தன்னார்வ நிறுவனம் இயங்கி வருகிறது.
இதன் அமைப்பாளர்கள் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உலவும் தகவல்களின் உதவியுடன் இந்திய கோவில்களில் இருந்த கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளை மீட்க உதவி வருகின்றனர். கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் லண்டனில் ஒரு ராமர் சிலை விற்பனைக்கு உள்ளது என்பதை அறிந்தார்.
அந்த சிலை விஜயநகர பேரரசு காலத்தை (கி.பி 15-ம் நூற்றாண்டு) சேர்ந்தது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக்கொண்டு, இந்தியாவில் உள்ள எந்த கோவிலில் இது போன்ற சிலைகள் காணாமல் போயிருந்தன என்பது குறித்த ஆராய்ச்சியில் விஜயகுமார் இறங்கினார். அப்போது 1978-ம் ஆண்டு அனந்தமங்கலத்தில் உள்ள ராஜகோபாலசாமி கோவிலில் சிலைகள் காணாமல் போனது தெரிய வந்தது.
மேலும் புதுச்சேரியில் உள்ள ஆவணக்காப்பகம் ஒன்றில் இருந்த அனந்தமங்கலம் கோவில் சிலைகள் குறித்த புகைப்படங்கள் மூலம் லண்டனில் விற்பனைக்கு உள்ள சிலை, அனந்தமங்கலம் கோவில் சிலைதான் என உறுதியானது. இதனையடுத்து விஜயகுமார், தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், லண்டன் சிறப்பு படையினர் உதவியுடன் இங்கிலாந்தில் விசாரணை நடத்தி வந்தனர்.
இதை அறிந்த பழங்கால பொருட்கள் சேகரிக்கும் ஒருவர், அந்த சிலைகள் தன்னிடம் இருப்பதாகவும், திருட்டு சிலை என அறியாமல் தான் வாங்கியதாகவும் தன்னிடம் உள்ள ராமர், லட்சுமணர், சீதை ஆகிய சிலைகளை திருப்பித்தந்து விடுவதாகவும் கூறினார். இதனையடுத்து அந்த சிலைகளை போலீசார் கைப்பற்றி லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைத்தனர். இதற்காக நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் லண்டன் முருகன் கோவில் பூசாரிகள் அந்த சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் இந்த சிலைகள் இந்திய தூதர் காயத்ரி குமாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த சிலைகள் விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட உள்ளது.
42 ஆண்டுகளுக்கு பின்பு கொள்ளை போன 4 சாமி சிலைகளுள் 3 சிலைகள் மீண்டும் கிடைத்துள்ளதால் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர்.

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் ஊராட்சியில் வட்டார சுகாதார துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
கொள்ளிடம்:
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் ஊராட்சியில் வட்டார சுகாதார துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் பபிதா தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் வாசுதேவன் வரவேற்றார். கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சன் முகாமை தொடங்கி வைத்து பேசுகையில், அனைவரும் எந்த நேரமும் தவறாமல் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். சளி, இருமல் ஆகியவை இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார். ஊராட்சி மன்ற துணை தலைவர் சந்திரசேகர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜாராமன், சுகாதார ஆய்வாளர்கள் சதீஷ்குமார், அன்புராஜி, கிராம செவிலியர் மாலதி மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்து கொண்டனர். முடிவில், ஊராட்சி செயலர் குணசெல்வன் நன்றி கூறினார்.
காரைக்கால் அருகே மனைவி பிரிந்து சென்றதால் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்கால் அருகே நெடுங்காடு குரும்பகரம் குளத்து மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 41). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக, இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் மனவேதனையில் இருந்து வந்த மாரிமுத்து நேற்று முன்தினம் வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெடுங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேளாங்கண்ணி அருகே கார் மோதி பள்ளி மாணவன் பலியானான். இதுதொடர்பாக போலீசார், கார் டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
வேளாங்கண்ணி:
திருவாரூர் மகாராஜா தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் சந்தோஷ் (வயது 13). இவன் திருவாரூரில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் கிழக்கு கடற்கரை சாலை அருகில் உள்ள தனது பெரியப்பா வீட்டிற்கு வந்து தங்கி இருந்தான்.
சம்பவத்தன்று வீட்டின் எதிரே உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தான். அப்போது நாகையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக சந்தோஷ் மீது மோதியது. இந்த விபத்தில் அவன் தூக்கி வீசப்பட்டான். இதனால் அவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்தவர்கள் அவனை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே சந்தோஷ் இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து புகாரின்பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற கார் டிரைவரை, போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நாகூர் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகூர்:
நாகூர் கடைத் தெருவில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற நாகூர் போலீசார் அங்கு லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகூர் மியாத் தெருவை சேர்ந்த இப்ராகிம்(வயது54) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மூடப்பட்ட சர்க்கரை ஆலையை திறக்கக்கோரி மயிலாடுதுறையில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் தலைஞாயிறில் என்.பி.கே.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. மூடப்பட்ட இந்த ஆலையை மீண்டும் திறக்க கோரி மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார்.
வட்ட தலைவர் காமராஜ், நிர்வாகி ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னோடி விவசாயிகள் தங்க.காசிநாதன், முருகன், ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மூடப்பட்ட சர்க்கரை ஆலையை திறக்க கோரி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மயிலாடுதுறை அருகே மூடப்பட்ட என்.பி.கே.ஆர், ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வேண்டும். ஆலை தொழிலாளர்களுக்கு சரிவர வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். சர்க்கரை ஆலையை நஷ்டத்தில் இயங்க வைத்து மூடுவதற்கு காரணமானவர்கள் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு டன் கரும்புக்கு ரூ 5 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கணேசன், இளங்கோ, சுந்தர்ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காரைக்கால் பழைய ரெயிலடி அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால்:
மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காரைக்கால் பழைய ரெயிலடி அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை, விலைவாசி உயர்வு, பொருளாதார வீழ்ச்சி, வறுமை அதிகரிப்பு போன்றவற்றை மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் சீர்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 200 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
நாகப்பட்டினம்:
நாகை அவுரி திடலில் அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தமிழ்செழியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ்கண்ணா முன்னிலை வகித்தார். இதில் மாநில துணைத்தலைவர் பிரகாஷ், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவக்குமார் ஆகியோர் பேசினர்.
கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் பணியாற்றும் ரேஷன் கடை பணியாளர்களை மருத்துவக்குழு காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் 100 சதவீதம் வழங்க வேண்டும்.
மலை வாழ் பிரதேசங்களில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு சமவெளி பிரதேசங்களில் உள்ளது போல் முதல் 2 வெள்ளிக்கிழமைகள் விடுமுறை நாளாகவும், முதல் 2 ஞாயிற்றுக்கிழமைகள் வேலை நாட்களாகவும் அறிவிக்க வேண்டும். கொரோனா வைரஸ் காலத்தில் சாலை விபத்தில் இறந்த பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் 200 ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டன.