என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    குத்தாலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கொக்கூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 55). நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் தேரழுந்தூரில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு அன்று இரவு 8 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம், வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார்.

    அப்போது அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டது தெரிய வந்தது.

    இதுகுறித்து பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    குடும்ப பிரச்சினையால் ஏற்பட்ட தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மணல்மேடு:

    மணல்மேடு அருகே ஐவாநல்லூர் மன்மதன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வமுத்துக்குமரன் (வயது 42). ஓட்டல் தொழிலாளி. இவருடைய மனைவி நித்யா (29). வாய் பேசமுடியாதவர். இந்தநிலையில் கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் மன உளைச்சல் அடைந்த நித்யா நேற்று வீட்டின் மாடியில் உத்திரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மணல்மேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் மயிலாடுதுறை உதவி கலெக்டர் மகாராணி விசாரணை மேற்கொண்டு உள்ளார்.
    நிவர் புயல் கரையை கடந்ததால், 4 நாட்களுக்கு பிறகு நாகை மாவட்டத்தில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற பைபர் படகு மீனவர்களுக்கு குறைந்த அளவே மீன்கள் சிக்கியதால் கவலை அடைந்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    வங்க கடலில் உருவான நிவர் புயல் காரணமாக நாகை, காரைக்கால், கடலூர், ராமேஸ்வரம், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகள் பாதிக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    புயல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து கடல் சீற்றமாக இருந்ததால் நாகை மாவட்டத்தில் 54 மீனவ கிராமங்களில் 1,200 விசைப்படகுகள் மற்றும் 7 ஆயிரம் பைபர் படகுகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடந்த 23-ந்தேதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் தங்களது படகுகளை பாதுகாப்பான பகுதியில் நிறுத்தி இருந்தனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

    நிவர் புயல் கடந்த 25-ந்தேதி புதுச்சேரியில் கரையை கடந்தது. இதனால் நாகை துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த 8-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டது.

    இந்த நிலையில் 4 நாட்களுக்கு பிறகு நாகை மாவட்டத்தில் இருந்து பைபர் படகு மீனவர்கள் மட்டும் நேற்று காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் 3 நாட்டிக்கல் மைல் தூரத்தில் சென்று மீன் பிடிக்க அறிவுறுத்தப்பட்டனர். பைபர் படகுகள் மாலையில் திரும்பி கரைக்கு வர வேண்டும் என்ற அறிவுறுத்தலின் பேரில் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    மீண்டும் மற்றொரு புயல் உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மீன்வளத்துறை சார்பில் விசைப்படகு மற்றும் ஆழ்கடல் தொழில் செய்யும் மீனவர்களுக்கு மீன்பிடிக்க செல்ல இன்னும் அனுமதி வழங்கவில்லை. இதனால் விசைப்படகு மீனவர்கள் தங்கள் படைகளை பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    மீன்வளத்துறை அறிவுறுத்தலின் படி மாலையில் பைபர் படகு மீனவர்கள் கரை திரும்பினர். 4 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு குறைந்த அளவு மீன்கள் கிடைத்துள்ளது. இதனால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.
    வேளாங்கண்ணி அருகே முன்விரோதத்தில் கணவன்-மனைவிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணி:

    வேளாங்கண்ணி அருகே நிர்த்தன மங்கலம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ரமணிராஜன் (வயது 58). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வீரப்பன் மகன் தமிழ்குமரன் என்பவருக்கும் இடையே வேலி தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழ்குமரன் வேலி ஓரத்தில் இரண்டு தென்னை மரங்கள் உள்ளன. இந்த தென்னை மரங்கள் ரமணிராஜன் வீட்டின் கூரை மீது சாய்ந்த நிலையில் இருந்ததால் புயல் எச்சரிக்கை காரணமாக அந்த மரங்களை வெட்டுமாறு அவர், தமிழ்குமரனிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த தமிழ்குமரன் மற்றும் அவரது மனைவி சித்ரா ஆகிய இருவரும் சேர்ந்து ரமணிராஜன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோரை அரிவாளால் வெட்டியும், கட்டையால் தாக்கினர். இதில் ரமணிராஜன், சாந்தி ஆகியோர் காயம் அடைந்தனர். அதேபோல ரமணிராஜன் தாக்கியதில் தமிழ்குமரனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த 3 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    வேதாரண்யம் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் வடகாடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 75). இவருடைய மனைவி மல்லிகா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவருக்கு திருமணமாகி விட்டது. இதனால் கணேசன், மனைவி மல்லிகாவுடன் வசித்து வந்தார். பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்த கணேசன் மனமுடைந்து சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். 

    இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாய்மேடு அருகே மின்சாரம் தாக்கி காவலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாய்மேடு:

    நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த அண்ணாப்பேட்டை ஊராட்சி திருக்குவளை கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் சுப்பிரமணியன் (வயது47). இவர் திருவாரூர் மாவட்டம் இடும்பாவனத்தில் உள்ள தனியார் வங்கியில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் உள்ள மின்மோட்டாரை பழுது நீக்கும் பணியில் சுப்பிரமணியன் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது மெயின் சுவிட்சை ஆப் செய்யாததால் சுப்பிரமணியனை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சுப்பிரமணியனுக்கு மகேஸ்வரி (35) என்ற மனைவியும், கிஷோர் (16) என்ற மகனும், சங்கமித்ரா (14) என்ற மகளும் உள்ளனர்.

    நாகை புதிய பஸ் நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி தேசிய பேரிடர் மீட்பு குழு சார்பில் நடந்தது.
    நாகப்பட்டினம்:

    அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் 40 பேர் கொண்ட குழுவினர் நிவர் புயல் பாதுகாப்பு பணிக்காக நாகைக்கு வந்தனர். புயல் கரையை கடந்தாலும் வானிலை ஆய்வு மையம் அடுத்த புயல் உருவாகும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நாகையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்கியுள்ளனர். 

    இந்தநிலையில் இந்த குழுவினர் நேற்று நாகை புதிய பஸ் நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த மாரிக்கனி தலைமை தாங்கினார். 

    இதில் பஸ் பயணிகள், கண்டக்டர்கள், டிரைவர்கள் ஆகியோரிடம் கொரோனா வைரஸ் பரவும் விதம், அதை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், முககவசம் அணிவதன் முக்கியத்துவம், சானிடைசர் பயன்படுத்தும் வழிமுறைகள் ஆகியவற்றை எடுத்து கூறினர். மேலும் குழுவினர் முககவசம் அணியாமல் வந்த பயணிகளுக்கு முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிவர் புயலால் நாகை மாவட்டத்தில் 450 மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளதாக.மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது :-

    வங்கக்கடலில் உருவான நிவர் புயல் கடந்த 25-ந் தேதி இரவு புதுச்சேரியில் கரையை கடந்தது. புயல் முன்எச்சரிக்கைக்காக நாகை மாவட்டத்தில் 9 பல்நோக்கு நிவாரண மையங்கள், 22 புயல் பாதுகாப்பு மையங்கள் உள்பட 221 பொது மற்றும் தனியார் கட்டிடங்களில் 59 ஆயிரத்து 171 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். நாகை மாவட்டத்தில் நிவர் புயலில் 137 குடிசை வீடுகள் பகுதி சேதமும், 6 குடிசை வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்தன. 7 ஓட்டு வீடுகள் பகுதி சேதம் அடைந்தன. 4 மாடுகள், 12 கன்றுகள் மற்றும் 22 ஆடுகள் உயிரிழந்துள்ளன. சேதமடைந்த வீடுகளுக்கும் உயிரிழந்த கால்நடைகளுக்கும் அரசு விதிகளின்படி உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் புயலில் 450 மின்கம்பங்கள், 58 மின் மாற்றிகள் சேதம் அடைந்தன. அதில் 398 மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. 26 மின் மாற்றிகள் சரி செய்யப்பட்டுள்ளன. மீதிஉள்ள மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை விரைவில் சரி செய்திட துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    பொதுமக்களை மழைக்கால நோய்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் 87 மருத்துவ முகாம்களும், 67 நடமாடும் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டன. அதில் 6, 238 பேர் சிகிச்சை பெற்று பயன் அடைந்தனர். மேலும் 42 நடமாடும் கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அதில் 1,500 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தலைஞாயிறு அருகே டாஸ்மாக் கடையில் கண்காணிப்பு கேமராவை உடைத்து விட்டு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
    வாய்மேடு:

    நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் அருந்தவம்புலத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் ராஜகோபால் என்பவர் மேற்பார்வையாளராகவும், பிச்சைக்கண்ணு, முருகதாஸ், செந்தில்குமார் ஆகியோர் விற்பனையாளர்களாக உள்ளனர். இவர்கள் விற்பனை முடிந்துநேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். இரவு காவலாளி ராஜேந்திரன் என்பவரும் புயல் காரணமாக வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலையில் காவலாளி ராஜேந்திரன் டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளார். அப்போது டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    இதுகுறித்து டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கும், தலைஞாயிறு போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது டாஸ்மாக் கடையில் 3 அட்டை பெட்டியில் இருந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களும், கடையில் இருந்த இன்வெட்டரையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    மேலும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவையும் மர்ம நபர்கள் உடைத்து விட்டு கைவரிசை காட்டி உள்ளனர். சம்பவ இடத்துக்கு நாகையில் இருந்து கொண்டு வரப்பட்ட போலீஸ் மோப்ப நாய் துளிப் திருட்டு போன கடையை சுற்றி வந்து நின்று கொண்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. திருட்டு போன மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையில் திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    தலைஞாயிறு அருகே டாஸ்மாக் கடையில் கண்காணிப்பு கேமராவை உடைத்து விட்டு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
    வாய்மேடு:

    நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் அருந்தவம்புலத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் ராஜகோபால் என்பவர் மேற்பார்வையாளராகவும், பிச்சைக்கண்ணு, முருகதாஸ், செந்தில்குமார் ஆகியோர் விற்பனையாளர்களாக உள்ளனர். இவர்கள் விற்பனை முடிந்துநேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். இரவு காவலாளி ராஜேந்திரன் என்பவரும் புயல் காரணமாக வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலையில் காவலாளி ராஜேந்திரன் டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளார். அப்போது டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    இதுகுறித்து டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கும், தலைஞாயிறு போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது டாஸ்மாக் கடையில் 3 அட்டை பெட்டியில் இருந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களும், கடையில் இருந்த இன்வெட்டரையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    மேலும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவையும் மர்ம நபர்கள் உடைத்து விட்டு கைவரிசை காட்டி உள்ளனர். சம்பவ இடத்துக்கு நாகையில் இருந்து கொண்டு வரப்பட்ட போலீஸ் மோப்ப நாய் துளிப் திருட்டு போன கடையை சுற்றி வந்து நின்று கொண்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. திருட்டு போன மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையில் திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    கீழ்வேளூரில் மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் அருகே வல்லமங்களம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது55). இவர் கீழ்வேளூரில் கோழி இறைச்சி கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று தனது மொபட்டில் வீட்டில் இருந்து மளிகை பொருட்கள் வாங்குவதற்காக ஓடம்போக்கி ஆற்று பாலம் அருகே வந்த போது எதிரே நீலப்பாடி பகுதியை சேர்ந்த அபினேஷ் என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள், ஜெயபால் ஓட்டி வந்த மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஜெயபாலை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயபால் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடமாடும் நியாய விலைக்கடையை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கினர்.
    திட்டச்சேரி:

    திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்குட்பட்ட கொட்டாரக்குடி ஊராட்சி பெரியகண்ணமங்கலம், பெருஞ்சாத்தங்குடி ஆகிய கிராமங்களுக்கு நடமாடும் நியாய விலைக்கடை தொடக்க நிகழ்ச்சி நடந்தது. பெருஞ்சாத்தங்குடியில் நடந்த நிகழ்ச்சிக்கு கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆசைமணி, திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.ராதாகிருட்டிணன் ஆகியோர் தலைமை தாங்கி நடமாடும் நியாய விலைக்கடையை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கினர். 

    இதில் நரிமணம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் எம்.பக்கிரிசாமி, திருப்பயத்தங்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் முத்துக்குமார், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் ஆறுமுக.பாண்டியன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் இயக்குனர்கள் கார்த்திக், சாமிநாதன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
    ×