என் மலர்
நாகப்பட்டினம்
திட்டச்சேரி அருகே பாகொந்தை கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 28).
இவருக்கும் நாகை பெரியார் நகரை சேர்ந்த கிருஷ்ணவேணி (24)என்பவருக்கும் இடையே கடந்த 20 நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
சம்பவத்தன்று கிருஷ்ணவேணி வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தும் கிருஷ்ணவேணியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து உதயகுமார் திட்டச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணவேணியை தேடி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை சேர்ந்த கிராமின் கோட்டா என்ற மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் பணிபுரிபவர் வேதாரண்யம் பகுதி வெள்ளப்பள்ளம், அவரிக்காடு கிராமங்களில் கொடுத்த கடன் வசூல் செய்துகொண்டு திரும்பினார்.
குரவப்புலம் வெள்ள கேட் அருகே பறக்கும் படையினர் வாகனத்தை சோதனையிட்டு அவர் வைத்திருந்த ரூ.64 ஆயிரத்து 355-ஐ பறிமுதல் செய்து வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் மது குற்றங்களை தடுக்கும் பொருட்டு எஸ்.பி. ஓம் பிரகாஷ் மீனா. உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
ரகசிய தகவலின் படி கீழ்வேளூர் காவல் சரகம் சிக்கல் குற்றம் புறிந்தானிருப்பு பகுதியிலுள்ள ஐயர் தனபால் என்பவரது வயலில் உள்ள வைக்கோல் போரில் விஷ சாராயம் 1400 லிட்டர் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இதனை பதுக்கி வைத்திருந்த சஞ்சய் மற்றும் அவரது நண்பர்களான குமரேசன், ஐயர் தனபாலன், பேட்டை ரகு என்கிற ரகு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் துணை காவல் ஆய்வாளர் கார்த்திக் என்பவரது தலைமையில் வாகன சோதனை மேற்கொண்டபோது அவ்வழியே வந்த இருசக்கர வாகனங்களை சோதனை செய்தனர்.
அப்போது சங்கமங்கலம் பகுதியை சேர்ந்த சிவா (வயது 20). என்பவரது வாகனத்தில் 110 லிட்டர் வீதம் 600 பாக்கெட்டுகள் சாராயம் கைப்பற்றப்பட்டன. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளி சிவாவை கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் மஞ்சுளா சந்திரமோகன், கீழ்வேளூர் தொகுதி வேட்பாளர் நீதி மோகன், வேதாரண்யம் தொகுதி வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து நாகை அவுரி திடலில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தேர்தல் பிரசாரம் செய்தார்.
லஞ்சம் லாவண்யம் இல்லாத ஆட்சியை உருவாக்குவோம். வெளிப்படையாக நிர்வாகத்தை மேற்கொள்வோம். அனைவருக்கும் வேலை வாய்ப்பு செய்து தரப்படும். தேர்தலுக்காக எடப்பாடி பழனிச்சாமி பொய் வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார். இட ஒதிக்கீடு பிரச்சனையில் பொய் கூறி வருகிறார். ஒவ்வொரு சமுதாயத்தையும் எடப்பாடி ஏமாற்றி வருகிறார். அதேபோல் தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது. அவர்களும் பொய் வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர்.
நாகூர் வெட்டாறு தடுப்பணையை அமைத்து நாகை மாவட்டங்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கப்படும். பனங்குடி பெரிய ஏரியை தூர் வாரி மழை நீரை சுத்திகரித்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்களின் மீன்கள் கெடாமல் இருக்க மீன் குளிரூட்டும் கிடங்கு அமைக்கப்படும். நாகூர் தர்கா யாத்திரிகர்களுக்கு குறைந்த கட்டணத்தில் அரசு தங்கும் விடுதி ஏற்படுத்தி தரப்படும். நாகையில் கருவாடு ஊற தளம் அமைக்கப்படும். மீனவர்களின் கடன்களை ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.






