என் மலர்
செய்திகள்

நாகை மாவட்டத்தில் 1510 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்- 5 பேர் கைது
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் மது குற்றங்களை தடுக்கும் பொருட்டு எஸ்.பி. ஓம் பிரகாஷ் மீனா. உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
ரகசிய தகவலின் படி கீழ்வேளூர் காவல் சரகம் சிக்கல் குற்றம் புறிந்தானிருப்பு பகுதியிலுள்ள ஐயர் தனபால் என்பவரது வயலில் உள்ள வைக்கோல் போரில் விஷ சாராயம் 1400 லிட்டர் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இதனை பதுக்கி வைத்திருந்த சஞ்சய் மற்றும் அவரது நண்பர்களான குமரேசன், ஐயர் தனபாலன், பேட்டை ரகு என்கிற ரகு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் துணை காவல் ஆய்வாளர் கார்த்திக் என்பவரது தலைமையில் வாகன சோதனை மேற்கொண்டபோது அவ்வழியே வந்த இருசக்கர வாகனங்களை சோதனை செய்தனர்.
அப்போது சங்கமங்கலம் பகுதியை சேர்ந்த சிவா (வயது 20). என்பவரது வாகனத்தில் 110 லிட்டர் வீதம் 600 பாக்கெட்டுகள் சாராயம் கைப்பற்றப்பட்டன. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளி சிவாவை கைது செய்தனர்.






