என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகையில் 24 படகு உரிமையாளர்களுக்கு 1 கோடியே 13 லட்சத்தில் நிவாரண உதவியை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் வழங்கினார்.
    நாகப்பட்டினம்:

    நாகையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு பழுதான படகுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தமிழக மீன் வளர்ச்சிக் கழக தலைவரும், தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான கவுதமன் தலைமையிலும் கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதா-கிருஷ்ணன் பங்கேற்று மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

    நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 22 விசைப்படகுகளுக்கு தலா ரூ.5 லட்சம், 2 கண்ணாடி இலை படகுகளுக்கு தலா ரூ.1.50 லட்சம் என 24 படகு உரிமையாளர்களுக்கு மொத்தம் ஒரு கோடியே 13 லட்சம் ரூபாய் நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில்

    மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தொலை நோக்கு திட்டங்கள் வரும் 13-ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் அறிவிக்க உள்ளார். ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்தி வரும் புதுச்சேரி மாநில மீனவர்கள் பிரச்சினைக்கு புதுச்சேரி முதலமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு எட்டப்படும் என கூறினார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு தாட்கோ தலைவர் மதிவாணன், நாகை.மாலி எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி, மீன்வளத்துறை இணை இயக்குநர், மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜெயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    கீழையூர் அருகே குடும்ப தகராறில் மீனவர் தற்கொலை செய்து கொண்டார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் செருதூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). மீனவர். இவருக்கும், இவரது மனைவிக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    தகவலறிந்த கீழையூர் போலீசார் சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    வேதாரண்யம் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி முதலியார்தோப்பை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). இவரது மனைவி ராதிகா (32). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராதிகா வீட்டில் தூக்குப்போட்டார். 

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ராதிகா இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இது பற்றிய புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா வழக்கு பதிவு செய்து எதற்காக ராதிகா தற்கொலை செய்தார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம் பகுதி போலீஸ் நிலையங்களில் குற்ற பதிவேட்டில் இருந்து 12 பேர் நீக்கம் செய்யப்பட்டு டி.ஸ்.பி. சான்றிதழை வழங்கினார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா, வேட்டைக்காரனிருப்பு மற்றும் தலைஞாயிறு போலீஸ் நிலையங்களில் கடந்த கஜாபுயலின் போது ஏற்பட்ட பல்வேறு பிரச்சினையில் 12 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

     பின்னர் 12 பேர் மீதும் காவல் நிலைய குற்றப்பட்டியலில் சேர்க்கப்பட்டனர். பின்பு இவர்களின் நன்னடத்தையின் காரணமாக குற்றப் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வேட்டைக்காரன் இருப்பு போலீஸ் நிலை-யத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு டி.எஸ்.பி முருகவேல் தலைமை வகித்தார். கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கடந்த கஜா புயலின் போது தலைஞாயிறு மற்றும் வேட்டைகாரனிருப்பு போலீஸ் நிலையங்களில் போடப்பட்ட பல்வேறு வழக்குகளில் இருந்து 12 பேர் விடுவிக்கப்பட்டு குற்றப்பின்னணி பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டு அதற்கான சான்றிதழ்களை டி.எஸ்.பி. முருகவேல் வழங்கினார். 

    பின்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் தொழில் தொடங்குவது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூலம் மாவட்ட கலெக்டரிடம் இருந்து நிதி பெற்று தருவது. மற்றும் போலீசாருக்கு உறுதுணையாக இருந்து பொது மக்களுக்கு சேவையாற்றிட அறிவுரை கூறப்பட்டது.

    நிகழ்ச்சியில் வேட்டைக்காரனிருப்பு சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி தமிழ்மணி, தலைஞாயிறு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
    எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட் டம், எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்-துள்ளது.

    இக்கோவிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் நிகழாண்டு சித்ரா பவுர்ணமி பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. முன்னதாக கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வேல் மற்றும் மயில் உள்-ளிட்ட உருவங்கள் பொறிக்கப்பட்ட கொடியானது மேளதாளத்துடன் வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 15 ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.தினம்-தோறும் காலை மற்றும் இரவில் பல்வேறு வானத்தில் முருகன் வீதி உலா காட்சி நடைபெறும்.

    முக்கிய நாளான சித்ரா பவுர்ணமி தினமான 16ம் தேதி பல்வேறு மாவட்டங்-களிலிருந்து பக்தர்கள் ரத காவடி, பால் காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவர்.

    மேலும் அன்றைய தினம் முழுவதும் இடைவிடாத பால் அபிஷேகம் நடை-பெறும்.கொரோனா பரவல்  காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
    திட்டச்சேரி-நாகூர் சாலையில் கொட்டப்படும் குப்பையால் அவ்வழியே செல்லும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    திட்டச்சேரியிலிருந்து நாகை செல்லும் சாலை வழியாக திட்டச்சேரி, திருமருகல், ஏனங்குடி, திருப்புகலூர், புத்தகரம், திருக்கண்ணபுரம், மருங்கூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அன்றாடம் இந்த சாலை வழியே நாகூர், நாகப்பட்டினம், திருவாரூர், வேளாங்கண்ணி, காரை-க்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    மேலும் நாகையில் உள்ள பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர். இந்த நிலையில் பனங்குடி பிராவ-டையான் ஆற்றுப்பாலம் அருகில் சாலை-யோரம் திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேமிக்கப்படும் குப்பைகள் முழுவதும் கொட்டப்படுகிறது.

    இதனால் சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் குப்பையை கடந்து செல்லும் பொழுது மூக்கை மூடி கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது.

    மேலும் கொட்டப்படும் குப்பை, கழிவுகளால் துர்-நாற்றம் வீசுகிறது.இதனால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    மேலும் குப்பைகளை அடிக்கடி எரித்து விடுவதால் அப்பகுதியில் புகை மூட்டமாக காணப்படுகிறது.இதனால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. புகையில் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகிறது.

    இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்-படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நாகை மாவட்டம் எரவாஞ்சேரியில் கட்டுமான பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.
    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தினையும், அதனைத்தொடர்ந்து பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளையும் கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது ஊராட்சி பகுதியில் அனைவருக்கும் வீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும், பணிகளை துவங்காமல் இருக்கும் பயனாளிகளை உடனடியாக துவங்க வைக்கவும் அறிவுறுத்தினார்.

    மேலும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், ஊராட்சி பகுதிகளில் குடிநீர் மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்தி 100 நாள் வேலையை உடனே தொடங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    ஆய்வின்-போது எரவாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிதேவி பாலதண்டாயுதம், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், ஊராட்சி செயலாளர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
    வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான கஞ்சா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை யில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 25 லட்சம் மதிப்புள்ள ஒன்பது மூட்டையில்

    இருந்த 270 கிலோ கஞ்சா மினிவேனுடன் பறிமுதல் செய்யபட்டது.

    வேதாரண்யம் கடலோர காவல் குழும  டி.எஸ்.பி குமார் ,இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆறுகாட்டுத்துறைக்கு ஒரு வேனில் கீற்று ஏற்றி கொண்டு  வேகமாக செனறு ஆறுகாட்டுத்துறை கடற்கரையில் நின்றுகொண்டிருந்தது.

    சந்தேகம் அடைந்த போலீசார் விடமால் தூரத்தி சென்று சோதனையிட்டதில்  கீற்றுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த 9 சாக்கு மூட்டைகளில் 270 கஞ்சா இருந்தது  தெரிய வந்தது.

    மறைத்து வைத்து இருந்த கஞ்சா மூட்டைகளையும் கடத்த-லுக்கு பயன்படுத்திய மினி-வேனையும் அதன் ஓட்டுனர் சுரேசையும் கைது செய்து வேதாரண்யம் கடலோர காவல் நிலையம்

    கொண்டு வந்து விசாரணை செய்தனர். போலீஸ் விசாரணையில் கைப்பற்ற கஞ்சாவின் மதிப்பு சுமார் 25 லட்சம் எனவும் ஆறுகாட்டுத்துறை யிலிருந்து படகு

    மூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும் டிரைவர் சுரேசிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில்  கஞ்சா கடத்தலில் ஆறு-காட்டுத்-துறையை சேர்ந்த பாரதிதாசன் இலங்கை நாட்டை சேர்ந்த காந்த-ரூபன் ஈடுபட்டு

    இருந்தது தெரிய வந்தது உடன் போலீசார் ஆறுகாட்டுத்துறைக்கு சென்று பாரதிதாசன் மற்றும் அவரது வீட்டில் ஈரோடு அகதிகள் முகாமில் இருந்து வந்துதங்கி இருந்த இலங்கையை

    சேர்ந்த காந்தரூபன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
    கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் பள்ளியில் அங்கன்வாடி பணியாளர்களின் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வே ளூர் அஞ்சுவட்டத் தம்மன் உயர்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.

    குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பவானி தலைமையில் நடை பெற்ற விழாவில் அங்கன் வாடி பணியாளர்கள் கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, போன்ற பாரம்பரிய சிறுதானியங்களில் செய்த இனிப்பு வகைகள், கார வகைகள், பிரியாணி, கூழ் போன்ற அனைத்து விதமான உணவு பண்டங் களைசமை த்து மாணவிகளுக்கு வழங்கினர்.

    மேலும் சிறுதானிய உணவுகளின் சத்து மற்றும் நன்மைகளை மாணவிக ளுக்கு எடுத்துரைத்தனர். மேலும் காய்கறிகளைக் கொண்டு விலங்குகள், சிலைகள், பூக்களை வடிவ மைத்து காட்சி படுத்திருந் தனர். 

    குழந்தை வளர்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப் பாளர் பூர்ணியா, வட்டார திட்ட உதவியாளர் அருண் குமார், அஞ்சுவட்டத்தம்மன் மகளிர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மீனாட் சி, மேற்பார்வையாளர்கள் ஜெயலெட்சுமி, பிரேமநாயகி, வேதராண்யம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சௌமியா மற்றும் கீழ்வே ளூர் ஒன்றிய அனைத்து கிராம அங்கன் வாடி பணியாளர்கள், அஞ்சுவட் டத்தம்மன் மகளிர் அரசு உயர் நிலைப்பள்ளி ஆசிரி யைகள், மாணவிகள் கலந் துக் கொண்டனர்.
    சங்கமங்கலம் சடைச்சி முத்து காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் சிக்கல் அடுத்துள்ள சங்கமங்கலத்தில் சடைச்சிமுத்து காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கும்பாபி-ஷேகம் விழா கணபதிஹோ-மத்துடன் துவங்கியது. அதனைத்-தொடர்ந்து நான்கு கால யாக சாலை பூஜைக-ளுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. 

    இதையடுத்து ராமநாத சிவாச்சாரியார் தலை-மையில் மேளதா-ளங்கள் முழங்க, கடம் புறப்பாடுநடை-பெற்றது. இனைத் தொடர்ந்து சிவாச்சா-ரியார்கள்  வேத மந்திரங்கள் முழங்க கலசத்--தில் புனித நீர் ஊற்றப்--பட்டு கும்பாபிஷேகம் நடை-பெற்-றது. அப்போது புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. 

    அதனை-தொடர்ந்து சடைச்சிமுத்து காளியம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று மன-முருகி வழிபட்டனர்.
    வேதாரண்யத்தில் மாடு முட்டியதில் தபால்காரர் உயிரிழந்தார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகரில் வசித்து வருபவர் மாறன் (வயது 52). இவர் வேதாரண்--யம் அருகேயுள்ள நெய்--விளக்கு கிராமத்தில் தபால்-கா---ரராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார்.

     இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர் ஆடு, மாடு, எருமை, காளை முதலிய கால்நடைகளை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 5&ம் தேதி மதியம் பணி முடிந்து மேய்ச்சலுக்கு கட்டி வைத்த மாட்டை மெயின்ரோட்டில் ஓட்டி கொண்டு வந்து கொண்டிருந்தார். 

    அப்போது எதிர்பாராதவிதமாக மாடு மாறனை முட்டி கீழே தள்ளி--யது. இதில் பலத்த காயம-டைந்த அவரை அக்கம்பக்கத்-தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். 

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாறன் ஏற்க-னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புகாரின் பேரில் வேதா-ரண்-யம் போலீஸ் இன்ஸ்-பெக்டர் சுப்ரியா, சப்& இன்ஸ்பெக்டர் தேவசேனா-திபதி ஆகியோர் வழக்குப்-பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்பாபிஷேக தினத்தையொட்டி அன்னப்பசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம்& நாகை சாலையில் அமைந்துள்ள பூர்ண, புஷ்கலம்பா சமேத அன்னப்பசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற தினத்தை முன்னிட்டு புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள், மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடைபெற்றது.

    பின்னர் புனித நீர் -அடங்கிய குடங்கள் ஊர்-வலமாக எடுத்துச் செல்லப்--பட்டு சிறப்பு அபிஷேக ஆரா-தனைகள் நடை-பெற்றது. பின்னர் சுவாமி வண்ண மலர்களால் அலங்-கரிக்------கப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. பக்தர்-க-ளுக்கு மங்கல பொருட்-களும், அன்னதா-னமும் வழங்கப்பட்டது. 

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை சென்னை மடிபாக்கம் குருமூர்த்தி குடும்பத்தினர் மற்றும் கிழக்கு தாம்பரம் லெட்சுமி-நாராயணன் குடும்பத்தினர் செய்தி-ருந்தனர்.

    ×