என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திறக்கப்படாமல் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை.
    X
    திறக்கப்படாமல் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை.

    திறக்கப்படாத நிலையில் புதிதாக கட்டப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை

    திட்டச்சேரி பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையை திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை - நன்னிலம்மெயின் சாலையில் திட்டச்சேரி பஸ் நிலையம் அமைந்துள்ளது.

    இந்த பஸ் நிலையத்திற்கு திட்டச்சேரி, குத்தாலம், நரிமணம், கோபுராஜபுரம், பனங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொது-மக்கள் பல்வேறு தேவைக-ளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் இந்த சாலை வழியே நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால், திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம், நன்னிலம்,வேலூர், மதுரை, சென்னை வரை செல்லும் பஸ்கள்

    இயக்கப்படுகிறது. இந்த நிலையில் பஸ் நிலையம் சுற்றி தாழ்வாக இருப்பதால் உயரப்படுத்தும் பணிகள் கடந்த ஆண்டு நடைபெற்றது.

    பணியின்போது பஸ் நிலையம் பின்புறம் இருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறை இடிக்கப்பட்டு மாற்று இடத்தில் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.

    இந்த கழிவறையில் சுமார் 6 மாதங்களுக்கு மேலாக மூடியைத் கிடைக்கிறது. இதனால் திட்டச்சேரி பஸ் நிலையம், வங்கிகள், கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள்

    கழிவறை இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்-படவில்லை என மாற்றுத்திறனாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு கழிப்பறையை திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×