search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குப்பைகளை எரிப்பதால் புகை மூட்டமாக காணப்படும் பகுதி.
    X
    குப்பைகளை எரிப்பதால் புகை மூட்டமாக காணப்படும் பகுதி.

    சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் மக்கள் அவதி

    திட்டச்சேரி-நாகூர் சாலையில் கொட்டப்படும் குப்பையால் அவ்வழியே செல்லும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    திட்டச்சேரியிலிருந்து நாகை செல்லும் சாலை வழியாக திட்டச்சேரி, திருமருகல், ஏனங்குடி, திருப்புகலூர், புத்தகரம், திருக்கண்ணபுரம், மருங்கூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அன்றாடம் இந்த சாலை வழியே நாகூர், நாகப்பட்டினம், திருவாரூர், வேளாங்கண்ணி, காரை-க்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    மேலும் நாகையில் உள்ள பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர். இந்த நிலையில் பனங்குடி பிராவ-டையான் ஆற்றுப்பாலம் அருகில் சாலை-யோரம் திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேமிக்கப்படும் குப்பைகள் முழுவதும் கொட்டப்படுகிறது.

    இதனால் சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் குப்பையை கடந்து செல்லும் பொழுது மூக்கை மூடி கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது.

    மேலும் கொட்டப்படும் குப்பை, கழிவுகளால் துர்-நாற்றம் வீசுகிறது.இதனால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    மேலும் குப்பைகளை அடிக்கடி எரித்து விடுவதால் அப்பகுதியில் புகை மூட்டமாக காணப்படுகிறது.இதனால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. புகையில் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகிறது.

    இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்-படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×