என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்றப்பிரிவில் இருந்து பெயர் நீக்கப்பட்ட சான்றிதழை  டி.எஸ்.பி முருகவேல் ஒருவருக்கு வழங்கினார்.
    X
    குற்றப்பிரிவில் இருந்து பெயர் நீக்கப்பட்ட சான்றிதழை டி.எஸ்.பி முருகவேல் ஒருவருக்கு வழங்கினார்.

    போலீஸ் நிலையங்களில் குற்ற பதிவேட்டில் இருந்து 12 பேர் நீக்கம்

    வேதாரண்யம் பகுதி போலீஸ் நிலையங்களில் குற்ற பதிவேட்டில் இருந்து 12 பேர் நீக்கம் செய்யப்பட்டு டி.ஸ்.பி. சான்றிதழை வழங்கினார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா, வேட்டைக்காரனிருப்பு மற்றும் தலைஞாயிறு போலீஸ் நிலையங்களில் கடந்த கஜாபுயலின் போது ஏற்பட்ட பல்வேறு பிரச்சினையில் 12 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

     பின்னர் 12 பேர் மீதும் காவல் நிலைய குற்றப்பட்டியலில் சேர்க்கப்பட்டனர். பின்பு இவர்களின் நன்னடத்தையின் காரணமாக குற்றப் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வேட்டைக்காரன் இருப்பு போலீஸ் நிலை-யத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு டி.எஸ்.பி முருகவேல் தலைமை வகித்தார். கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கடந்த கஜா புயலின் போது தலைஞாயிறு மற்றும் வேட்டைகாரனிருப்பு போலீஸ் நிலையங்களில் போடப்பட்ட பல்வேறு வழக்குகளில் இருந்து 12 பேர் விடுவிக்கப்பட்டு குற்றப்பின்னணி பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டு அதற்கான சான்றிதழ்களை டி.எஸ்.பி. முருகவேல் வழங்கினார். 

    பின்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் தொழில் தொடங்குவது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூலம் மாவட்ட கலெக்டரிடம் இருந்து நிதி பெற்று தருவது. மற்றும் போலீசாருக்கு உறுதுணையாக இருந்து பொது மக்களுக்கு சேவையாற்றிட அறிவுரை கூறப்பட்டது.

    நிகழ்ச்சியில் வேட்டைக்காரனிருப்பு சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி தமிழ்மணி, தலைஞாயிறு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×