என் மலர்
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் அகர ஒரத்தூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு குறுவை மற்றும் சம்பா அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் சன்ன ரகம் மற்றும் மோட்டா ரக 6 ஆயிரம் நெல் மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேலைபார்க்கும் காவலாளி நேற்று இரவு விடுப்பு எடுத்து விட்டு சென்று விட்டார். இதனை அறிந்த மர்ம நபர்கள் 2 லாரியில் நள்ளிரவில் அங்கு வந்தனர். பின்னர் கொள்முதல் நிலையத்தின் பூட்டை உடைத்து அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரம் மூட்டைகளில் 125 மூட்டைகளை திருடி லாரியில் ஏற்றிகொண்டு தப்பி சென்றனர். இன்று காலை நெல் கொள்முதல் நிலைய பூட்டு உடைக்கப்பட்டதை கண்ட அப்பகுதி மக்கள் பருவகால உதவியாளர் பாக்யராஜ்க்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து பாக்யராஜ் வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து நெல் மூட்டைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை வனத்துறையினர் கடந்த 2020-ம் ஆண்டு அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் தடைசெய்யப்பட்ட பொருளான 1060 கிலோ கடல் அட்டை கடத்தல் காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை நாகை மகாலட்சுமி நகரில் உள்ள வன உயிரின பாதுகாவலர் அலுவலகத்தில் பாதுகாப்பாக 12 பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நீதிமன்ற நடவடிக்கைக்காக மீண்டும் கடல் அட்டை இருப்பு குறித்து வனசரகர் அனந்தீஸ்வரன் சோதனை செய்தார். அப்போது 1060 கிலோ கடல் அட்டையில் 400 கிலோ கடல் அட்டை மாயமானது தெரியவந்தது.
இது குறித்து வனசரகர் அனந்தீஸ்வரர் வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே வனச்சரக அலுவலகத்தில் பணியாற்றிய நாகை காடம்பாடி பகுதியை சேர்ந்த தற்காலிக ஊழியர் கோவிந்தராஜ் திடீரென தலைமறைவாகி உள்ளார். இதனால் போலீசாருக்கு கோவிந்தராஜ் மீது சந்தேகம் வலுத்துள்ளது.
அவரை பிடித்து விசாரித்தால் இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது பற்றிய பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என்பதால் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் தலைமறைவான கோவிந்தராஜை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே அகஸ்தியன் பள்ளியில் அமைந்துள்ள பக்தர்குளம் மாரியம்மன் கோவிலின் 55-ம் ஆண்டு கோடைத் தீர்த்த திருவிழா நடைப்பெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சார்ந்த 300 -க்கும்
மேற்பட்ட பெண்கள் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் இருந்து உலக நன்மை வேண்டி பால் குடம் எடுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக நடந்து சென்று 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்தர்குளம்
மாரியம்மன் கோவிலை அடைந்தனர். பின்பு அம்மனுகு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை நிறைவேற்றும்
விதமாக தகுதியான நபர்களுக்கு தள்ளுபடி வழங்கிட வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிட்டு 1.11.2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
நாகை மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் - 59, நகர கூட்டுறவு கடன் சங்கங்கள்-2, வேதாரண்யம் உப்பு உற்பத்திளார்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள்- 1, வேதாரண்யம்
வேளாண் உற்பத்திளார்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள்-1, வேதாரண்யம் ஊரகவளர்ச்சிவங்கி -1,கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் - 9 என மாவட்டத்தில் உள்ள மொத்த 73 கூட்டுறவு
நிறுவனங்களில் கடன் பெற்ற 18,412 நபர்களுக்கு கடன் தொகை ரூ.5371.27 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டு பயனாளிகளுக்கு நகைக்-கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்-டுள்ளது.
நாகை மாவட்டம் திருமருகல் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் விக்ரம் வளவன் (வயது 21), அதே பகுதியை சேர்ந்த உலகநாதன் மகன் ஐயப்பன் (20), தெட்சணாமூர்த்தி
மகன் தர்மா (20), அருணாச்சலம் மகன் அருண்குமார் (20). அகிய 4 பேரும் மது அருந்தி போதையில் திரும ருகல் சந்தைப்பேட்டை கடைத்தெருவில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் சட்டை
எடுக்க சென்றுள்ளனர். அங்கு போதையில் கடை ஊழியர்களிடம் 4 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கடைக்-காரர் கடையிலிருந்து வெளியே அனுப்பி உள்ளார். அப்போது
அருகில் கடை வைத்துள்ள திருமருகல் முருகன் கோயில் தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மகன் குருமூர்த்தி (33), பில்லாளி தெற்கு தெரு வடிவேலு மகன் சந்திரபோஸ் (28) ஆகிய இருவரும் அவர்களை
சமாதானப்படுத்தி உள்ளனர். அப்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியதில் கட்டை, சேர் உள்ளிட்ட பொருட்களால் தாக்கிக் கொண்டனர்.
இதில் காயமடைந்த சந்திரபோஸ், குருமூர்த்தி, அருண்குமார் ஆகிய 3 பேரும் நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ-மனையில் அனுமதிக்கப்பட்-டுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்ரம் வளவன், ஐயப்பன், தர்மா உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்து 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






