என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்ரா பவுர்ணமி பாலாபிஷேகம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் பிரசித்தி பெற்றசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்ரா பவுர்ணமி பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் இந்தாண்டு சித்ரா பவுர்ணமி பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 7ம் தேதி துவங்கியது.விழாவின் முக்கிய விழாவான சித்திரா பவுர்ணமியையொட்டி பல்வேறு மாவட்டங்-களிலிருந்து பக்தர்கள் ரத காவடி, பால் காவடி எடுத்து நடைபயணமாக வந்து நேர்த்தி கடனை செலுத்தினர். பக்தர்கள் கொண்டுவந்த பால் மூலமாக இடைவிடாத பால் அபிஷேகம் நடை-பெற்று வருகிறது.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலால் சித்ரா பௌர்ணமி திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில் இந்தாண்டு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

    பாதுகாப்பு பணியில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையில் சுமார் 250 போலீசார் மற்றும் 100 ஊர்க்காவல் படையினர் என பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டது. 

    பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களில் இருந்து சுமார் 25&க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
    வலிவலத்தில் 40 வருடங்களுக்குப் பிறகு கமலநாத சுவாமி கோவிலில் தெப்போற்சவம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அடுத்துள்ள வலிவலத்தில் பிரசித்தி பெற்ற மனத்துணைநாதர் உடனுறை மாழையொண்கண்ணி அம்பிகை, இருதய கமல நாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. 

    இக்கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை திருவிழா கடந்த 7&ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு சோமஸ்கந்தர் மற்றும் அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளினார். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் 3 முறை வலம் வந்தனர். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    வேளாங்கண்ணி ராஜகிரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் பழமை வாய்ந்த ஸ்ரீரஜதகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாள் மணக்கோலத்தில் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்வினை தொடர்ந்து, சிவாச்சார்யார்கள் கொண்டு சிறப்புயாக பூஜை நடைபெற்றது. பின்னர் மாலை மாற்றும் வைபவமும் காப்புக்கட்டு வைபவமும் நடைபெற்றது.

    தொடர்ந்து மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. பின்னர் திருமாங்கல்ய தாரணம் எனப்படும், மாங்கல்யம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்பாளுக்கு திருமாங்கல்யம் சாத்தப்பட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    திருமருகலில் வேலை கிடைக்காத விரக்தியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் கீழத் தெருவை சேர்ந்தவர் சிவசண்முகம் மகன் மகேஸ்வரன் (வயது 35).இவர் முதுநிலை மருந்தாளுநர் படித்துள்ளார்.படித்து முடித்து இதுவரை வேலை கிடைக்காததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளதாக தெரிகிறது.

    இந்த நிலையில் கடந்த 14-ஆம் தேதி மகேஸ்வரனின் பெற்றோர் ஆண்டிபந்தலில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் மகேஸ்வரன் வீட்டிலிருந்த களைக்கொல்லி பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். 

    இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மகேஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடி திருமருகலில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.

    மீண்டும் 15-ம் தேதி காலையில் மகேஸ்வரனுக்கு வயிற்றுவலி அதிகமாகி உள்ளது. இதனால் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்-பட்டுள்ளார்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திட்டச்சேரி போலீசார் மகேஸ்வரனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி உள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    வேளாங்கண்ணியில் பார்வை தெரியாத கடை உரிமையாளரை ஏமாற்றி செல்போன் திருடிய 2 வாலிபர்களை சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி முச்சந்தி பகுதியில் பூவைத்தேடியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். பார்வை சரியாக தெரியாத ஐயப்பன் பெண் பணியாளர் ஒருவரை வேலைக்கு வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் ஐயப்பன் கண் பார்வை இழந்தவர் என்பதை நன்கு தெரிந்திருந்த 2 வாலிபர்கள் கடையில் புகுந்து செல்போன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டனர். செல்போன் வாங்குவது போல கடைக்குள் புகுந்த அவர்கள் பொருட்களின் விலையை கேட்டு ஐயப்பனின் கவனத்தை திசை திருப்பி செல்போன்களை திருடி உள்ளனர்.
     
    கடையில் வேலை பார்க்கும் பெண் ஊழியர் கீழே குனிந்தபடி எழுதி கொண்டிருக்க, 2 வாலிபர்களும் செல்-போன்களை திருடி சென்றுள்ளனர்.

    இந்த காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும், பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கீழையூரை சேர்ந்த நாகராஜன் (65) மற்றும் வெளிப்பாளையத்தை சேர்ந்த டேவிட் என்கிற டேவிட் ஜான்சன் ஆகிய இருவர் மீது பல்வேறு சாராய வழக்குகள் உள்ளது. 

    இதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர்.பரிந்துரையின்படி கலெக்டர் அருண் தம்புராஜ் 2 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    நாகை மாவட்டத்தில் மத்தி மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது.
    நாகப்பட்டினம்

    தமிழக கடலோர பகுதிகளில் அதிகளவு கிடைக்கும்  மத்தி மீன், கேரள மாநிலத்-திற்கு பெரும் அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகதேவைப்படும்

    புரதச்சத்து நிறைந்த மத்தி மீனை விரும்பி சாப்பி-டுபவர்கள் அதிகம். மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய நிலையில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் பைபர் படகு மீனவர்களின் வலைகளில் அதிக

    அளவிலான மத்தி மீன்கள் பிடிபட்டுள்ளது. நாகை, நாகூர், சாமந்தான் பேட்டை, செருதூர், கல்லாறு, உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு மீனவ கிராமங்-களில் இருந்து மீன் பிடிக்க சென்ற பைபர் படகு

    மீனவர்களுக்கு மத்தி மீன் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், மீன்களின் வரத்து அதிகமாக இருந்தாலும், மீன்களின் விலை கடுமை-யாக குறைந்துள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தில் இருந்து அதிக அளவு மத்தி மீன்கள் ஏற்றுமதி செய்யப்படும் கேரளாவிலும் மத்தி மீன்க--ளின் வரத்து அதிகமானதால்  தமிழகத்தில் விலை சரிந்துள்ளதாக தெரிவித்துள்ள மீனவர்கள்

    கிலோ ரூ.100 ரூபாய் முதல் 130 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த மத்தி மீன்களின் விலை தற்போது ஒரு கிலோ வெறும் ரூ.35 முதல் 45 வரை மட்டுமே விலை போவதாக கூறினார்கள்.

    5 மாதங்களுக்கு பிறகு நாகை மாவட்டத்தில் பல்வேறு மீனவ கிராமங்களில் பிடித்து வரப்பட்ட மத்தி மீன்கள் ஐஸ் வைத்து கேரளா மாநிலத்திற்கு ஏற்-றுமதி செய்யப்படும் பணிகள் தீவிரமாக

    நடைபெற்று வருகிறது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வால், கடும் நெருக்கடியில் சூழ்ந்து இருப்பதாக  தெரிவித்துள்ள மீனவர்கள், மத்தி மீன்களின் விலை குறைவால்

    எரிபொருள், ஐஸ், ஆட்கள் கூலி உள்ளிட்ட செலவு செய்த தொகை கூட மிஞ்சவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

    வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளி கூட்டு திருப்பலி நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்-தலப் பேராலயத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட உயிர் நீத்த தினமான புனித

    வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நடைபெற்றது.தொடர்ந்து கலை அரங்கத்தில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் இறை-வார்த்தை வழிபாடு, சிறப்பு கூட்டுத்

    திருப்பலிநிறைவேற்றப்பட்டது.சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் சொரூபத்தை பேராலய அதிபர் இருதய-ராஜ் மற்றும் பங்கு தந்தைகள்முத்தமிட்டனர்.

    இயேசுவின் சொரூபத்தை பக்தர்கள் மத்தியில் கொண்டு செல்லும் போது பக்தர்கள் முத்தமிட்டு வழிபட்டனர்.

    கொரோனா அச்சம் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்கள் இயேசுவின் சொரூபத்திற்கு பக்தர்கள் முத்தமிட பேராலயம் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. வரும் ஞாயிற்றுகிழமை அதிகாலை

    இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் நாளில் சிறப்பு மன்றாட்டு, நற்கருணை வழிபாடுகள் நடைபெற உள்ளன.

    பசுமை துறைமுகம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என நாகையில் அமைச்சர் எ.வ. வேலு பேட்டியளித்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் அடுத்த ஒரத்தூரில் புதிய தொடங்கப்-பட்ட அரசு மருத்துவக் கல்லூரியை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

    மருத்துவ கல்லூரியில் அடிப்படை கட்டமைப்புகள், வகுபபறைகள், ஆய்வுக் கூடங்களை ஆய்வு செய்த அவர், மாணவர்களுக்கு தேவை-யான உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை

    விரைந்து முடிக்க அதிகாரி-களுக்கு உத்தரவிட்டார்.

    அதனைத் தொடர்ந்து அமைச்சர் வேலு நிருபர்களிடம் பேசுகையில்:-

    தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் முழுமையாக மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்து அடிப்படை கட்டமைப்புகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக

    தெரிவித்த அவர், தமிழகம் சாலைப் பாதுகாப்பில் முன்னோடி மாநிலமாக இருப்பதால் கடந்த ஓராண்டில் 15 சதவீதம் சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாக

    பெருமிதம் தெரிவித்தார். மேலும் கடந்த ஆட்சிக் காலத்தில் 110 விதியின் கீழ் 360 கோடி ரூபாயில் நாகப்பட்டினத்தில் பசுமை துறைமுகம் அமைக்கப்படும் என கூறி இதுவரை செயல்படுத்தாது

    குறித்த கேள்விக்கு. கடந்த ஆட்சியில் அறிவித்து கிடப்பில் போடப்பட்ட நாகப்பட்டினம் பசுமைதுறைமுகம் அமைப்பது அல்லது விரிவுபடுத்துதல் குறித்து முறையாக ஆய்வு செய்து அதனை

    நடைமுறைப்படுத்துவதற்கான நடவ-டிக்கை எடுக்கப்படுமென கூறினார்.

    மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் மகாபலிபுரம்- புதுச்சேரி இடையே 4 வழிச்சாலை திட்டம் ரத்து என்ற செய்தி தவறானது எனவும், சாலை அமைக்கத் தேவையான இடங்களை கையகப்படுத்தி

    தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு டெண்டர் பணிகளும்நிறைவு பெற்று பணிகள் தொடங்க உள்ள நிலையில் இதுபோன்ற செய்தி தவறானது என தெரிவித்தார்.

    செல்வராஜ் எம்.பி, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், எம்.எல்.ஏ.க்கள் முகம்மது ஷாநவாஸ், நாகை மாலி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    நாகை அருகே ஆதலையூர் கிராமத்தில் ஆற்றங்கரையில் உள்ள வீடுகளை காலி செய்ய மறுத்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
    நாகப்பட்டினம்,:

    நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் வசிக்கும் மக்களை நீதிமன்ற உத்தர-வுப்படி காலி செய்யும் பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

    அதன்படி நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதலையூர் கிராமத்தில் முடிகொண்டான் ஆற்றங்கரை அருகே வசிக்கும் 250 வீடுகளை 21 நாட்களில் காலி செய்ய பாசன பிரிவு உதவி பொறியாளர் 

    உத்தரவிட்டு நோட்டீஸ் ஒட்டியுள்ளார். 

    இந்த நிலையில் மாற்று இடம் வழங்க வேண்டியும், வீடுகளை காலி செய்ய கால அவகாசம் வழங்க கோரியும் கிராம மக்கள் ஆதலையூர் பகுதியில் திடீர் போராட்-டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது, ஆற்றங்க-ரையில் வசிக்கும் பட்டா இருக்கும் நபர்களுக்கு நோட்டீஸ் வழங்காததை கண்டித்தும், மாற்று இடம் வழங்கி வீடுகள் கட்டித்தர வலியுறுத்தியும் கிராம மக்கள் கோஷங்களை எழுப்பினர்.

    100 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் தங்களை காலி செய்ய அரசு அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாகவும், பல லட்சம் ரூபாய் செலவிட்டு கட்டிய கான்கிரீட் வீடுகளை விட்டு எப்படி செல்வது என்றும் 

    கிராம மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். 

    குடிநீர் வரி, சொத்து வரி, மின்சார கட்டணம் என அனைத்தும் செலுத்தி வருவதாக வேதனை தெரிவித்துள்ள கிராம மக்கள், வீடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்கி மாற்று இடத்தில் வீடுகளை கட்டித்தர தமிழக 

    அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

    நாகையில் வீடுகளை காலி செய்ய அரசு அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
    நாகூர் ஆண்டவர் தர்கா நிர்வாகம் பரம்பரை டிரஸ்டிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    நாகப்பட்டினம்:

    உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் பரம்பரை டிரஸ்டிகளில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அவரது உறவினர்கள் வாரிசு உரிமை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். 

    இதனையடுத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நாகூர் தர்கா இடைக்கால நிர்வா-கிகம் மூலம் நிர்வாகம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இடைக்கால நிர்வாகிகள் மீது நிதி முறைகேடு

    குற்றச்சாட்டு எழுந்ததால் நாகூர் தர்கா பொறுப்புகளை தமிழ்நாடு வக்பு வாரியத்திடம் ஒப்ப-டைக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

    இதற்கு எதிராக நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நிலைகள் கடந்த 6.4.2022 மீண்டும் நாகூர் பரம்பரை டிரஸ்டிகளியிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்ற உத்தரவிட்டது.
     
    இதைத்-தொடர்ந்து தமிழக வக்பு வாரிய முதன்மை செயல் அதிகாரி வசீர் அஹ்மத் நாகூர் தர்கா டிரஸ்டிகளிடம் தர்கா நிர்வாகத்தை முறைப்--படி ஒப்படைத்தார். இதனை வரவேற்கும் வகையில்

    இஸ்லாமியர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
    திருமருகலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    நாகப்பட்டினம்:

    நீர்நிலைப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை அகற்ற கோரிய உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருமருகல் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    இதற்கு ஒன்றிய செயலாளர் பாபுஜி தலைமை தாங்கினார். இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் மாசிலாமணி, இளைஞர்

    மன்ற ஒன்றிய செயலாளர் ரமேஷ், கட்சியின் ஒன்றிய பொரு-ளாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    ×