என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகூர் ஆண்டவர் தர்கா நிர்வாகம் பரம்பரை டிரஸ்டிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
    X
    நாகூர் ஆண்டவர் தர்கா நிர்வாகம் பரம்பரை டிரஸ்டிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நாகூர் ஆண்டவர் தர்கா நிர்வாகம் பரம்பரை டிரஸ்டிகளிடம் ஒப்படைப்பு

    நாகூர் ஆண்டவர் தர்கா நிர்வாகம் பரம்பரை டிரஸ்டிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    நாகப்பட்டினம்:

    உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் பரம்பரை டிரஸ்டிகளில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அவரது உறவினர்கள் வாரிசு உரிமை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். 

    இதனையடுத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நாகூர் தர்கா இடைக்கால நிர்வா-கிகம் மூலம் நிர்வாகம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இடைக்கால நிர்வாகிகள் மீது நிதி முறைகேடு

    குற்றச்சாட்டு எழுந்ததால் நாகூர் தர்கா பொறுப்புகளை தமிழ்நாடு வக்பு வாரியத்திடம் ஒப்ப-டைக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

    இதற்கு எதிராக நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நிலைகள் கடந்த 6.4.2022 மீண்டும் நாகூர் பரம்பரை டிரஸ்டிகளியிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்ற உத்தரவிட்டது.
     
    இதைத்-தொடர்ந்து தமிழக வக்பு வாரிய முதன்மை செயல் அதிகாரி வசீர் அஹ்மத் நாகூர் தர்கா டிரஸ்டிகளிடம் தர்கா நிர்வாகத்தை முறைப்--படி ஒப்படைத்தார். இதனை வரவேற்கும் வகையில்

    இஸ்லாமியர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
    Next Story
    ×