என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த 89 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நேற்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். அங்கு கோபூஜை, கஜபூஜை செய்து வழிபாடு மேற்கொண்டார்.

    பின்னர் மன்னம்பந்தல் வழியாக தருமபுர ஆதீனத்தை வந்தடைந்தார். அப்போது மன்னம்பந்தல் பகுதியில் கவர்னர் செல்லும் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கமிட்டு கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கும், மசோதாக்களுக்கும் கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதை கண்டித்தும், கவர்னரை திரும்பச் செல்ல வலியுறுத்தியும் கருப்புக்கொடி ஏந்தி முழக்கமிட்டனர். அப்போது கவர்னர் பார்வையில் போராட்டக்காரர்கள் இருப்பதை மறைக்கும் வகையில் காவல்துறை வாகனத்தை கொண்டு போலீசார் மறைத்தனர்.

    அப்போது போராட்டக்காரர்கள் கருப்புக் கொடியை சாலையில் எரிந்தும், வாகனங்கள் மீதும் கருப்பு கொடிகளை வீசி எரிந்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து தருமபுர ஆதீனத்தை வந்தடைந்த தமிழக கவர்னருக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில் அக்கட்சியினர் தேசியகொடியை ஏந்தி வரவேற்பளித்தனர்.

    தருமபுர ஆதீனத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

    கவர்னர் வருகையை முன்னிட்டு திருச்சி சரக ஐ.ஜி. மேற்பார்வையில் 2 வஜ்ரா வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி தலைமையில் 1,850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    முன்னதாக கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த 89 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

    இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், செம்பை ஒன்றிய செயலாளர் மார்க்ஸ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், திராவிடர் விடுதலை கழக மாவட்ட தலைவர் மகாலிங்கம், மாவட்ட செயலாளர் மகேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல பொறுப்பாளர் வேலு குபேந்திரன், ஒன்றிய செயலாளர் மோகன்குமார், தமிழ்மண் தன்னுரிமை இயக்க நெறியாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 89 பேர் மீது சட்டவிரோதமாக கூட்டம் சேருதல், அதிகாரிகளின் உத்தரவை மீறி போராட்டம் நடத்தியது, முறையற்ற தடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் (143, 188, 341, 427, 511 ஆகிய பிரிவுகள்) மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    மன்னம்பந்தல் தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு இருந்த போராட்டக்காரர்கள் அனைவரையும் போலீசார் இரவு விடுதலை செய்தனர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டத்தில் பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டை கடைத்தெருவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. 

    கூட்டத்திற்கு திருமருகல் ஒன்றிய விவசாய சங்க செயலாளர் தங்கையன் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய சங்க செயலாளர் பாபுஜி முன்னிலை வகித்து கோரிக்கைகளை விளக்கி கூட்டத்தில்

    பேசினார். கூட்டத்தில் பயிர் காப்பீட்டு தொகை உடனடியாக வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும், 2021-22 பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக

    வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர். இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், கட்சியின் ஒன்றிய பொருளாளர் சந்திரசேகர், இளைஞர்

    பெருமன்ற ஒன்றிய செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
    திட்டச்சேரியில் நாம் தமிழர் கட்சி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட மரைக்கான்சாவடியில் நாம் தமிழர் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

    கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் தலைமை தாங்கினார்.
     
    மாவட்ட தலைவர் அறிவொளி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் கட்டமைப்புகளை மாற்றியமைத்து புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும், நிதி கட்டமைப்பை மேம்படுத்தி

    கட்சியின் வளர்ச்சியடைய வைக்க வேண்டும், தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய கட்சியை ஒவ்வொரு நிர்வா-கிகளும் அயராது பாடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு

    தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
     
    இதில் தொகுதி செயலாளர் ஆதித்தன், தொகுதி தலைவர் ராஜேஷ், தொகுதி பொருளாளர் நாகராஜன், தொகுதி இணை செயலா-ளர்கள் வேல்ராஜ், மணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் கிளை நிர்வாகி முத்துக்குமார் நன்றி கூறினார்.
    திருக்குவளை அருகே மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த தொழுதூர் பழையங்குடியில் அமைந்-துள்ள நல்ல மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது.

    திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து பால் காவடி, அலகு, மயில், செடில், தேர், ரத காவடி உள்ளிட்ட 500-க்கும் மேற்-பட்ட காவடிகள் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
     
    பல்வேறு கிராமங்களில் இருந்து காவடிகளை எடுத்து வந்த பக்தர்கள் நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பேண்டு வாத்தியங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க அரங்கேறிய காவடி

    ஆட்டத்தில் இளைஞர்களும் நடனமாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து பால் அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    தரங்கம்பாடி அருகே தொடர் மழையால் அழுகி, முளைக்க தொடங்கிய உளுந்து பயிருக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தரங்கம்பாடி:

    டெல்டா மாவட்டங்களில் காவிரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் உளுந்து பயிர் அறுவடை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில், தரங்கம்பாடி தாலுக்கா கிள்ளியூர் ஊராட்சியில் சுமார் 200 ஏக்கரில் மானாவாரி ஊடுபயிரான உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நடைபெற்று வருகிறது, வெப்பச்சலனம் காரணமாக கடந்த வாரம் 4 நாட்கள் பெய்த கோடை மழையினால் அறுவடை செய்த உளுந்து பயிர்களை விவசாயிகள் வயலிலேயே குவித்து தார்படுதா போட்டு மூடி வைத்தனர்.

    ஆனால் இந்த உளுந்து பயிரானது தொடர் மழையால் அழுகியும், முளைக்கவும் தொடங்கியுள்ளது. கடந்த சம்பா அறுவடையின்போது மழையால் அறுவடை பாதிக்கப்பட்டதாலும், தற்போது உளுந்து பயிர் அறுவடையிலும் மழையில் நனைந்து அழுகியதாலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

    அரசு வேளாண்துறை அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மழையில் நனைந்து வீணாகிய எஞ்சிய உளுந்து பயிரை காயவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
    மழையால் உளுந்து பயிர்கள் நாசமடைந்ததால் இழப்பீடு வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு 20-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
    நாகப்பட்டினம்:

    நாகையில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. 

    கூட்டத்துக்கு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொது செயலாளரும், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில தலைவருமான தனபால் தலைமை தாங்கினார். 

    கூட்டத்தில் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய அரசின் உதவிகள், போராட்டம் நடத்துவது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.  

    பின்னர் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் தனபால் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். 

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாகை மாவட்டத்தில் பருவம்தவறி 59 சதவீதம் கூடுதலாக மழை பெய்ததால் உளுந்து பயிர்கள் அனைத்துமே அழிந்து போய்விட்டது. தமிழக அரசு விவசாயிகளைப் பாதுகாப்போம் என்று சொன்னதுபோல், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். 

    மேலும் விவசாயிகளுக்கு உளுந்து பயிர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். 

    காப்பீட்டு நிறுவனம் விளைச்சலே இல்லாதபோது குறைந்த பட்ச விளைச்சலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறோம். 

    இது குறித்து வேளாண்துறை உரிய வகையில் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில், விளைச்சலை மதிப்பீடு செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தியும், விவசாய சங்கங்களின் கூட்ட இயக்கம் சார்பில் வருகிற 20-ந் தேதி காலை 11 மணியளவில் நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    வேதாரண்யம் பகுதியில் விவசாயியின் தோட்டத்தில் அமைக்கப்பட்ட கிணறு திடீரென உள்வாங்கியதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா செம்போடை வடகாடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது தோட்டத்தில் உள்ள மா மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச கிணறு ஒன்றை வெட்டினார். நேற்று முன்தினம் இரவு வரை அந்த கிணற்றை பயன்படுத்தியவர் அதிகாலையில் எழுந்து பார்த்த போது கிணற்றைக் காணவில்லை.

    இதுகுறித்து விவசாயி கந்தசாமி கூறுகையில், மா மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சவும் ஊடுபயிராக கடலை சாகுபடிக்கும் தண்ணீர் தேவைப்பட்டது. இதற்காக நான்காண்டு-களுக்கு முன்பு இந்த இடத்தில் கிணறு ஒன்றை வெட்டினேன்.
     
    கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிலரை அழைத்து வந்து கிணறு அமைத்தேன். 50 ஆயிரம் செங்கற்கள் இதற்கு தேவைப்பட்டது. 20 அடி சுற்றளவும் 22 அடி ஆழமும் கொண்ட இந்த கிணற்றிற்கு அந்த கிணற்றை அமைக்க இரண்டரை லட்ச ரூபாய் செலவு செய்தேன்.
     
    தண்ணீரும் நன்றாக ஊறியது.அதனை வைத்து சிறப்பாக விவசாயம் செய்து வந்தேன். ஆனால் நேற்று காலை பார்த்தபோது கிணறு பூமிக்குள் உள்வாங்கியிருந்தது.

    காரணம் என்னவென்று தெரியவில்லை. மண்ணும் சரிந்துவிட்டது. கிணறு எங்கே போனது என்று தெரியவில்லை. அதற்கு முதல் நாள் இப்பகுதியில் இடி விழுந்து சில வீடுகளில் எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் சேதமடைந்தன. 

    இடி விழுந்தது தான் கிணறு காணாமல் போனதற்கு காரணமா அல்லது நில நடுக்கமா? வேறு காரணங்களா என்பது தெரியவில்லை. இதுகுறித்து வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளேன் என்றார்.
    எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்ரா பவுர்ணமி பாலாபிஷேகம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் பிரசித்தி பெற்றசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்ரா பவுர்ணமி பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் இந்தாண்டு சித்ரா பவுர்ணமி பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 7ம் தேதி துவங்கியது.விழாவின் முக்கிய விழாவான சித்திரா பவுர்ணமியையொட்டி பல்வேறு மாவட்டங்-களிலிருந்து பக்தர்கள் ரத காவடி, பால் காவடி எடுத்து நடைபயணமாக வந்து நேர்த்தி கடனை செலுத்தினர். பக்தர்கள் கொண்டுவந்த பால் மூலமாக இடைவிடாத பால் அபிஷேகம் நடை-பெற்று வருகிறது.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலால் சித்ரா பௌர்ணமி திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில் இந்தாண்டு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

    பாதுகாப்பு பணியில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையில் சுமார் 250 போலீசார் மற்றும் 100 ஊர்க்காவல் படையினர் என பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டது. 

    பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களில் இருந்து சுமார் 25&க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
    வலிவலத்தில் 40 வருடங்களுக்குப் பிறகு கமலநாத சுவாமி கோவிலில் தெப்போற்சவம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அடுத்துள்ள வலிவலத்தில் பிரசித்தி பெற்ற மனத்துணைநாதர் உடனுறை மாழையொண்கண்ணி அம்பிகை, இருதய கமல நாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. 

    இக்கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை திருவிழா கடந்த 7&ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு சோமஸ்கந்தர் மற்றும் அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளினார். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் 3 முறை வலம் வந்தனர். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    வேளாங்கண்ணி ராஜகிரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் பழமை வாய்ந்த ஸ்ரீரஜதகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாள் மணக்கோலத்தில் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்வினை தொடர்ந்து, சிவாச்சார்யார்கள் கொண்டு சிறப்புயாக பூஜை நடைபெற்றது. பின்னர் மாலை மாற்றும் வைபவமும் காப்புக்கட்டு வைபவமும் நடைபெற்றது.

    தொடர்ந்து மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. பின்னர் திருமாங்கல்ய தாரணம் எனப்படும், மாங்கல்யம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்பாளுக்கு திருமாங்கல்யம் சாத்தப்பட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    திருமருகலில் வேலை கிடைக்காத விரக்தியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் கீழத் தெருவை சேர்ந்தவர் சிவசண்முகம் மகன் மகேஸ்வரன் (வயது 35).இவர் முதுநிலை மருந்தாளுநர் படித்துள்ளார்.படித்து முடித்து இதுவரை வேலை கிடைக்காததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளதாக தெரிகிறது.

    இந்த நிலையில் கடந்த 14-ஆம் தேதி மகேஸ்வரனின் பெற்றோர் ஆண்டிபந்தலில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் மகேஸ்வரன் வீட்டிலிருந்த களைக்கொல்லி பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். 

    இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மகேஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடி திருமருகலில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.

    மீண்டும் 15-ம் தேதி காலையில் மகேஸ்வரனுக்கு வயிற்றுவலி அதிகமாகி உள்ளது. இதனால் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்-பட்டுள்ளார்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திட்டச்சேரி போலீசார் மகேஸ்வரனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி உள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    வேளாங்கண்ணியில் பார்வை தெரியாத கடை உரிமையாளரை ஏமாற்றி செல்போன் திருடிய 2 வாலிபர்களை சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி முச்சந்தி பகுதியில் பூவைத்தேடியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். பார்வை சரியாக தெரியாத ஐயப்பன் பெண் பணியாளர் ஒருவரை வேலைக்கு வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் ஐயப்பன் கண் பார்வை இழந்தவர் என்பதை நன்கு தெரிந்திருந்த 2 வாலிபர்கள் கடையில் புகுந்து செல்போன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டனர். செல்போன் வாங்குவது போல கடைக்குள் புகுந்த அவர்கள் பொருட்களின் விலையை கேட்டு ஐயப்பனின் கவனத்தை திசை திருப்பி செல்போன்களை திருடி உள்ளனர்.
     
    கடையில் வேலை பார்க்கும் பெண் ஊழியர் கீழே குனிந்தபடி எழுதி கொண்டிருக்க, 2 வாலிபர்களும் செல்-போன்களை திருடி சென்றுள்ளனர்.

    இந்த காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும், பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×