என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகூர் இப்தார் நோன்பு திறப்பு நடைபெற்றது.
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சி
நாகூரில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர்.
நாகப்பட்டினம்:
ரமலான் நோன்பு தொடங்கியதை அடுத்து இஸ்லாமியர்கள் பசித்திருந்து நோன்பு இருந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை அடுத்த நாகூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர்.
நோன்பின் மாண்பு குறித்து இஸ்லாமியர்களின் சொற்பொழிவுகளை கேட்ட மாற்று மதத்தினர் அவர்களோடு சேர்ந்து நோன்பு திறந்தனர். நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் நாகை நகர்மன்ற துணை தலைவர் செந்தில்குமார் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் பங்கேற்றனர்.
Next Story






