என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    X
    அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

    வேதாரண்யத்தில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் நகர பொருளாளர் மீனாட்சிசுந்தரம் மாவட்ட துணைத்தலைவர்கள் உலகநாதன், ராஜமாணிக்கம் மாவட்ட இணைச் செயலாளர்கள் வேதரத்தினம், வெங்கடாசலம் சத்துணவு அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் மதிவாணன், கிராம உதவியாளர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், ஒய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்ட தலைவர் நடராஜன், வட்டச்செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப் படாத சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம ஊழியர்கள் வனத்துறை காவலர்கள் மற்றும் ஊராட்சி எழுத்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் 7800 வழங்க வேண்டும் மற்றும் பணியாளர்களை காப்பீட்டு திட்டத்தில் இணைத்து மருத்துவ வசதிகள் அளிக்கப்பட வேண்டும். 

    புதிய ஒய்வுதிட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றிட வேண்டும்.

    மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற்று 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காப்பீட்டு நிலவை தொகை வழங்காமல் உள்ளது சிகிச்சைக்கான பெற்று நிலுவை தொகை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
    Next Story
    ×