என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் அருண் தம்புராஜ்.
    X
    கலெக்டர் அருண் தம்புராஜ்.

    18412 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி கலெக்டர் தகவல்

    நாகை மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவ-னங்களில் கடன் பெற்ற 18412 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக கலெக்டர் அருண்தம்புராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை நிறைவேற்றும்

    விதமாக தகுதியான நபர்களுக்கு தள்ளுபடி வழங்கிட வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிட்டு 1.11.2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

    நாகை மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் - 59, நகர கூட்டுறவு கடன் சங்கங்கள்-2, வேதாரண்யம் உப்பு உற்பத்திளார்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள்- 1, வேதாரண்யம்

    வேளாண் உற்பத்திளார்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள்-1, வேதாரண்யம் ஊரகவளர்ச்சிவங்கி -1,கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் - 9 என மாவட்டத்தில் உள்ள மொத்த 73 கூட்டுறவு

    நிறுவனங்களில் கடன் பெற்ற 18,412 நபர்களுக்கு கடன் தொகை ரூ.5371.27 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டு பயனாளிகளுக்கு நகைக்-கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்-டுள்ளது.
    Next Story
    ×