என் மலர்
உள்ளூர் செய்திகள்

குண்டும் குழியுமாக காணப்படும் சாலை.
குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
வேதாரண்யம் அருகே சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா உம்பளச்சேரி- கரியாப்பட்டினம் வரை செல்லும் சாலை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.
இச்சாலை வழியே உம்ப-ளச்சேரி, வாட்டாகுடி, மகராஜபுரம், தூளாசபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கரியா-பட்டினம், வேதாரணியம் செல்ல இந்த சாலையை தான் பொதுமக்கள்
பயன்படுத்தி வருகின்றனர். தினந்தோறும் இந்த சாலையில் நூற்றுக்கணக்கான வாக-னங்கள் சென்று வருகின்றன.தற்போது இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
மழை காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்-களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிப்படுகின்றனர்.
இரவு நேரங்களில் வாகனங்-களில் செல்பவர்கள் எங்கு பள்ளம் உள்ளது என தெரியாமல் கீழே விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். இதனால் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






