என் மலர்
உள்ளூர் செய்திகள்

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வேதாரண்யத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயில் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு ஒன்றிய தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் 38ஆண்டுகளாக பணியாற்றும் ஊழியர்க--ளுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன்
ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மாவட்ட செயலாளர் வேல்கண்ணன்,
சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் தமிழரசி, மாவட்ட இணைச்செயலாளர் செல்வராணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தமிழ்செல்வி, ஒன்றிய பொருளாளர்
உஷா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






