என் மலர்
மயிலாடுதுறை
- பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு 100 சதவீதம் காப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றார்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த திருவாலி, நாராயணபுரம்,மங்கைமடம், புதுப்பட்டினம், வேட்டங்குடி ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேரில்பா ர்வையிட்டு பாதிப்பு குறித்து விசாயிகளிடம் கேட்டறிந்தார்.
எடமணல், வேட்டங்குடி, அகர வட்டாரம், புதுப் பட்டினம் ஆகிய பகுதிகளில் கனமழை பாதிப்பை பார்வையிட்டு புதுப்பட்டினத்தில் 300 குடும்பங்களுக்கு, அரிசி , சேலை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,சீர்காழி பகுதியில் பெய்த44 சென்டிமீ ட்டர் கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டது. தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவசர கால நிவாரணம் வழங்க வேண்டும்.
தொடர் மழையால் வீடுகள், மீனவர்கள், இரால் குட்டைகள் அழிவு ஏற்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரண தொகை வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு 100 சதவீதம் காப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட தொகுப்பு வீடுகளுக்கு பதிலாக புதிய தொகுப்பு வீடு கட்டி தர வேண்டும்.
நியாய விலை கடை மூலம் பொது மக்களுக்கு பருப்பு,சர்க்கரை,கோதுமை இலவசமாக பொருட்கள் வழங்க வேண்டும்.
பழையார் துறைமுகத்தில் 300 விசைப்படைகள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் முடங்கியு ள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றார்.
அப்போது மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார், மாவட்டத் தலைவர் சங்கர்,மாவட்ட இளைஞரணி தலைவர் வரதராஜன், மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- இத்திருப்பலியில் உலக அமைதிக்காகவும், சமத்துவம் சகோதரத்துவம் தழைத்தோங்கவும், கொரோனா நோய் தொற்று முற்றிலும் ஒழிந்திடவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது.
- தினமும் மாலையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மன்றாட்டு மாலை, திருப்பலிஉள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பங்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயிலாடு துறை மறைவட்ட அதிபர் பேரருட் தார்சிஸ் ராஜ் அடிகளார் தலைமையில் ஆலய வளாகத்தில் கொடி பவனி நடைபெற்றது. உதவி பங்குத்தந்தை மைக்கில் டைசன் அடிகளார் கொடி பவனியை வழிநடத்தினார்.
வேளாங்கண்ணி திருத்தல பேராலய அதிபர் பேரருட் இருதயராஜ் அடிகளார் கொடியை புனிதம் செய்து புனித சவேரியாரின் திருஉருவ கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, ஆலயத்தில் சிறப்புதிருப்பலி நடை பெற்றது. அறுவடை மிகுதி வேலையாட்களோ குறைவு என்ற இறைவார்த்தையை மையமாக வைத்து நடைபெற்ற முதல் நாள் திருவிழா திருப்பலியை புனித மரியாயின் மாசற்ற இருதய சபை கன்னியர்கள், புனித பவுல் தொடக்கப்பள்ளி, புனித பவுல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியினர், பங்கு மக்களோடு இணைந்து சிறப்பித்தனர்.
இத்திருப்பலியில் உலக அமைதிக்காகவும், சமத்துவம் சகோதரத்துவம் தழைத்தோங்கவும், கொரோனா நோய் தொற்று முற்றிலும் ஒழிந்திடவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது.
இதில் அருட்தந்தை யர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், வின்சென்ட் தே பவுல் சபையினர், இளையோர் இயக்கத்தினர், மரியாயின் சேனையினர், அன்பிய குழுவினர், பாடகற் குழுவினர், இறைமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கொடியேற்றத்துடன் தொடங்கிய புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற உள்ளது. இதில் தினமும் மாலையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மன்றாட்டு மாலை, திருப்பலிஉள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறுகி ன்றன.
வருகின்ற டிசம்பர் 2-ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியும், அதனைத் தொடர்ந்து திருத்தேர் பவனியும் நடைபெற உள்ளது.
டிசம்பர் 3ஆம் தேதி காலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறவு ள்ளது.
விழாவிற்கான ஏற்பா டுகளை மயிலாடுதுறை மறை வட்ட அதிபர் பங்குத்தந்தை பேரருட் தார்சிஸ் அடிகளார் தலைமையில் விழாக்கு ழுவினர் மற்றும்பங்கு மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
- பெண் குழந்தைகளுக்கான ஊக்க தொகை ஆகியவற்றை அளித்து வருகின்றது.
- துளசேந்திரபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் மாற்று திறனாளி தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டது.
சீர்காழி:
வட்டார வளமையம் கொள்ளிடம் ஒன்றியத்தின் சார்பாக உலக மாற்றுதிற னாளிகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இப்பேரணிக்கு வட்டார வளமைய மேற்பார்வை யாளர் ஞானபுகழேந்தி வரவேற்புரை ஆற்றினார். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல் தலைமையே ற்றார். பேரணியை ஒன்றிய துணைத்தலைவர் பானுசேகர் தொடங்கிவை த்தார்.
கொள்ளிடம்காவல் துணை ஆய்வாளர் கோவிந்த ராஜன் வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதி சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார வளமையமேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி பேசும் பொழுது மாற்றுதி றனாளி குழந்தைகளை சமூகத்தில் பாதுகாப்பு கொடுத்து அவர்களை சமமாக நடத்த வேண்டும், அவர்களிடம் பல திறமைகள் உள்ளது.
அதை வெளிபடுத்த அனைவரும் வாய்பளிக்க வேண்டும்.
மாற்று திறனாளி குழந்தைகளுக்கு தமிழக அரசு தேசிய அடையாள அட்டை, மாதாந்திர பராமரிப்பு தொகை இலவச பேருந்து பயணம் கல்வி உதவிதொகை உதவி உபகரணங்கள் பெண் குழந்தைகளுக்கான ஊக்க தொகை ஆகியவற்றை அளித்து வருகின்றது.
இவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பிசியோதெரபி பயிற்சி கொடுத்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
முன்னதாக துளசேந்திரபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் மாற்று திறனாளி தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டது.
இந்நிகழ்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஐசக் ஞானராஜ், பாக்கியலெட்சுமி, அபூர்வராணி, கவிதா, சிறப்பு ஆசிரியர்கள் பிரவினா, ரூபா, ராஜலெட்சுமி, கீதா, உமா, ஒருங்கிணைப்பாளர் சிவசங்கர் தணிக்கையா ளர்கள் ராஜீவ் காந்தி சிவனேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில் பிசியோதெரபி மலர் கண்ணன் நன்றி கூறினார்.
- ரூ.1000 நிவாரணம் என்பது உயர்ந்து வரும் விலைவாசிகளுக்கு ஏற்ப சரியான தொகையில்லை.
- விவசாய நிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 35 ஆயிரம் வழங்க வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட த்தில் கடந்த 10-ம் மற்றும் 11ம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒரு லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. பல்லாயிரம் குடியிருப்புகள் தண்ணீரில் தத்தளித்தது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி, இரண்டு தாலுகாவுக்கு மட்டும் தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் நிவாரணம் வழங்க வேண்டும் வெறும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்பது உயர்ந்து வரும் விலைவாசிகளுக்கு ஏற்ப சரியான தொகையில்லை. நிவாரணத்தை வீடுகளுக்கு பத்தாயிரம் ரூபாயாகவும் விவசாய நிலங்களுக்கு ஹெக்டேருக்கு 35 ஆயிரம் ரூபாயாகவும் வழங்க வேண்டும்.
என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம், டெல்டா விவசா யிகள் பாசனதாரர் சங்கம், வீரசோழன் விவசா யிகள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், உள்ளிட்ட விவசாயிகள் சங்கங்கள், விவசாயிகள் பங்கேற்று மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுப ட்டனர்.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்அலுவலகத்தின் எதிரே கண்டன கோஷங்க ளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் விவசாயிகள் ஊர்வலமாக மனு அளிக்க சென்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர், தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலாஜி விவசாயிகளிடம் மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலில் வைத்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
- தி.மு.க. ஒன்றரை ஆண்டு ஆட்சியில் மக்களிடம் வருத்தத்தை சந்தித்துள்ளது.
- எந்த ஊழலாக இருந்தாலும் கத்திரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்து தான் தீர வேண்டும்,
மயிலாடுதுறை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நட்சத்திர ரீதியாக தனது 59-வது வயது நிறைவடைந்து 60-வது வயது தொடங்குவதை முன்னிட்டு திருக்கடையூரில் உக்கிர ரத சாந்தி ஹோமங்கள் செய்து வழிபாடு செய்தார்.
தொடர்ந்து புகழ் பெற்ற தருமபுரம் ஆதீனத்தில் ஆதீன குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை குடும்பத்தினருடன் சந்தித்து ஆசி பெற்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் டி.டி.வி. தினகரன் கூறியதாவது:-
அ.தி.மு.க. கட்சி செயல்படாத நிலையில் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி செய்த தவறால் சின்னம் இல்லாமல் கட்சி இல்லாமல் தற்போது நீதிமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்.
அ.தி.மு.க. பற்றி பேசுவது தேவையற்றது, தேர்தல் சமயத்தில் பேசி கொள்ளலாம், சசிகலா வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அது பற்றி எனக்கு தெரியாது. டிசம்பர் மாத கடைசியில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். மத்தியில் பிரதம வேட்பாளர் யார் என்று சொல்லுகின்ற கூட்டணி அமைக்கப்படும்.
தி.மு.க. ஒன்றரை ஆண்டு ஆட்சியில் மக்களிடம் வருத்தத்தை சந்தித்துள்ளது. அதை சரி செய்து கொள்ளவில்லை என்றால் மோசமான நிலையை சந்திப்பார்கள்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தும் கூட்டணியில் அ.ம.மு.க. இருக்கும், மழை வெள்ள பாதிப்பால் நிவாரணம் கிடைக்காமல் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது தி.மு.க. விடியல் ஆட்சியின் அவலங்கள் மக்களை ஏமாற்றும் ஆட்சியாக தமிழக அரசு உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் 11 மருத்துவக்கல்லூரி கட்டியதில் ஊழல் இருப்பதற்கான முகாந்திரம் உள்ளதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் பல துறைகளில் முறைகேடு நடைபெற்றதால் தான் தி.மு.க.விற்கு மக்கள் வாய்ப்பளித்துள்ளனர்.
எந்த ஊழலாக இருந்தாலும் கத்திரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்து தான் தீர வேண்டும், மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் குறைந்தது ரூ. 3,000 வழங்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
அதற்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும், தி.மு.க. அமைச்சர்கள் மத்தியில் சண்டை உள்ளதாக செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆளுமை கேள்விக்குறியாக உள்ளதால்தான் அமைச்சர்களிடையே சண்டை ஏற்படுகிறது. இதுவும் திராவிட மாடல் ஆட்சிக்கு ஒரு உதாரணம் என்றார்.
- புனிதநீர் அடங்கிய சங்குகளில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளத்தாளத்துடன் கோவிலை வலம் வந்தது.
- வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்குகளைக் கொண்டு சங்காபிஷேகம் நடைபெற்றது.
யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய சங்குகளில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளத்தாளத்துடன் கோவில் உட்பிரகாரத்தில் சுற்றி வலம் வந்து. பின்னர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வண்ண வாசனை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் வீதி உலா புறப்பாடு காட்சி நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- 8 அணிகள் பங்கேற்று விளையாடினர்.
- திருவெண்காடு அணி வெற்றி பெற்று முதல்பரிசு ரூ.4 ஆயிரம் மற்றும் கேடயத்தை வென்றனர்.
சீர்காழி:
சீர்காழியில் போலிஸ் மற்றும் பொதுமக்கள் நட்புறவு கைப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது.
சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டுமைதாநத்தில் நடைபெற்ற இப்போட்டிக்கு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தலைமைவகித்தார். சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு.லாமெக், இன்ஸ்பெக்டர் மணிமாறன், விவேகானந்தா கல்விநிறுவனங்களின் தலைவர் கே.வி.இராதாகிருஷ்ணன், செயலர் அனிதாராதாகிருஷ்ணன், பப்ளிக் பள்ளி இயக்குனர் அலெக்சாண்டர், மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜோஸ்வாபிரபாகரசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டியை போலீஸ் சூப்பிரண்டு நிஷா தொடங்கிவைத்தார்.இதில் 8அணிகள் பங்கேற்று விளையாடினர்.மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அணியும், திருவெண்காடு யூத் கிளப் அணியும் இறுதிபோட்டியில் விளையாடினர்.இதில் 25க்கு23,25க்கு 18 என்ற நேர் செட் கணக்கில் திருவெண்காடு அணி வெற்றி பெற்று முதல்பரிசு ரூ.4ஆயிரம் மற்றும் கேடயத்தை வென்றனர். காவல்துறை அணி இரண்டாம் பரிசாக ரூ.3ஆயிரம் மற்றும் கேடயத்தை வென்றனர். வெற்றிபெற்ற அணிக்கு போலீஸ் சூப்பிரண்டு நிஷா கோப்பையை வழங்கினார்.
- சீர்காழி பகுதியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் 50 பேருக்கு நிவாரண உதவிகள்.
- ரூ.2ஆயிரம் மதிப்பிலான அரிசி, மளிகை, போர்வை ஆகியவற்றை வழங்கினார்.
சீர்காழி:
விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் 50-வது பொன்விழாவையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன் ஒருபகுதியாக சீர்காழி பகுதியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் 50 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.வி.ராதா–கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலர் அனிதா, குடசமாரிட்டன் கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள் பிரவின்வசந்த், அனுஷாபிரவின், அலெக்சாண்டர், ரீனிஷாஜேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து கே.வி.ராதாகிருஷ்ணன், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.2ஆயிரம் மதிப்பிலான அரிசி, மளிகை, போர்வை ஆகியவற்றை வழங்கினார்.
இதில் அரசு பள்ளி ஆசிரியர் கோவி.நடராஜன் பங்கேற்றார்.
முன்னதாக பள்ளி முதல்வர் ஜோஸ்வா–பிரபாகரசிங் வரவேற்றார். முடிவில் துணை முதல்வர் சரோஜா நன்றிக் கூறினார்.
- நூலகம் குறித்து பேச்சுபோட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
- வாசகர் வட்ட தலைவர் செம்மலர்.வீரசேனன் வரவேற்றார்.
சீர்காழி:
சீர்காழி கிளை நூலகம் மற்றும் நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய தேசிய நூலக வார நிறைவு விழா இரண்டாம் நிலை நூலகர் ஜெ.ஜோதி தலைமையில் நடைபெற்றது.
காழிகம்பன் வெங்கடேசபாரதி, ச.மு.இ.மெட்ரிக் பள்ளி நிர்வாக அலுவலர் எம்.தங்கவேலு, அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் சு.வீழிநாதன், ச.மு.இ.மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாசகர் வட்ட தலைவர் செம்மலர்.வீரசேனன் வரவேற்றார்.
தொடர்ந்து மாணவ-மாணவிகளின் நூலகம் குறித்து பேச்சுபோட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிறைவில் நூலக பணியாளர் க.ரகு நன்றிக்கூறினார்.
- மிக பிரசித்திபெற்ற இந்த ஆலயத்தில் நரசிம்மரை வழிபட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினால் கிரக தோஷங்கள், திருமண த்தடை நீங்கி, திருமணம் நடைபெறுவது நிச்சயம் என புராணவரலாறுகள் கூறுகின்றன.
- பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோயிலின் திருப்பணிகள் உபயதாரர்களால்நடை பெற்று முடிந்துமகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் பஞ்ச (ஜந்து) நரசிம்மர்கோயில்கள் அமைந்துள்ளனஇந்த கோயில்களில் இரண்டா வது ஸ்தலமாக விளங்கு வது மங்கைமடம் வீரநரசிம்மர்கோயில் ஆகும்.முன்னொரு காலத்தில் திருமங்கை ஆழ்வார் குமுதவல்லி நாச்சியாரை மணம்புரிய 1008 வைஷ்ணவ அடியார்களுக்கு ஒரு வருடகாலத்திற்கு அன்ன தானம் வழங்கியதாகவும், மேலும் திருமங்கைஆழ்வார் வீரநரசிம்மரை வணங்கியும், ஆராதித்து பல பாடல்கள் பாடியுள்ளார்.
மிக பிரசித்திபெற்ற இந்த ஆலயத்தில் நரசிம்மரை வழிபட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினால் கிரக தோஷங்கள், திருமண த்தடை நீங்கி, திருமணம் நடைபெறுவது நிச்சயம் என புராணவரலாறுகள் கூறுகின்றன.
பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோயிலின் திருப்பணிகள் உபயதாரர்களால்நடை பெற்று முடிந்துமகா கும்பாபிஷேகம் நடைபெ ற்றது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை காலை யாக சாலை பூஜைகள் தொடங்கின.
தொடர்ந்து விழா அன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து புனித நீர் அடங்கிய கடன்கள் மேல தாளங்களுடன் புறப்பட்டு கோவிலை வந்து மூல விமான கழகத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் பல்லாயிர க்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி முருகன், கோயில் பூஜகர் பாலாஜி பட்டாச்சாரியார், ஸ்தலத்தார் நாங்கூர் நாராயண அய்யங்கார் மற்றும் விழா குழுவினர் செய்தனர்.
- விவசாயத்தை காப்பாற்றுவதற்குத் தேவையான உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்திடமிருந்து யூரியா வரவழைக்கப்பட்டது.
- 74 லாரிகளில் ஏற்றி மயிலாடுதுறை நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட தனியார் உர விற்பனையாளர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்பொழுது சம்பா மற்றும் தாளடி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்குப் பருவமழையால் 87ஆயிரம் ஏக்கரில் விவசாயம் சேதம் அடைந்துள்ளது, மீதமுள்ள விவசாயத்தை காப்பாற்றுவதற்குத் தேவையான உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்திடமிருந்து யூரியா வரவழைக்கப்பட்டது.
1268டன் யூரியா சரக்கு ரயில் மூலம் மயிலாடுதுறை ரயில்நிலையத்திற்கு வந்தது, அவற்றை 74 லாரிகளில் ஏற்றி மயிலாடுதுறை நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட தனியார் உர விற்பனையாளர்களுக்கு அனுப்பி வைத்தனர். யூரியா வந்ததை மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் மற்றும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் முன்னிலையில் இறக்கப்பட்டது.
- பல இடங்களில் ஆய்வு செய்தபோது விவசாயம் முற்றிலும் அழிந்து போய் உள்ளது தண்ணீர் வடிந்தாலும் அந்த பயிர்களை இனி காப்பாற்ற முடியாது, கால்நடைகள், வீடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
- பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு ஏக்கருக்கு குறை ந்தபட்சம் ரூ 30000 வழங்க வேண்டும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கனமழையால் மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட குடியிருப்பு மற்றும் விளைநிலங்களை பார்வையிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மழையால் பாதிக்க ப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் கடந்த 14ஆம் தேதி நேரடியாக வந்து பார்வையிட்டு சென்றுள்ளார்அமைச்சர் மெய்யநாதன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து நிவாரண உதவிகளை மேற்கொண்டு வருகிறார்.
தொடர் மழையால் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 764 பேர் முகாம்களில் தங்கி உள்ளனர்.
இதுவே மிகப்பெரிய பாதிப்புக்கு அடையாளம் இரண்டு லட்சம் மக்கள் கையேந்துகிற நிலைமை ஏற்பட்டு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு அரசு நிவாரண உதவிகளை வழங்கி உள்ளது.
பல இடங்களில் ஆய்வு செய்தபோது விவசாயம் முற்றிலும் அழிந்து போய் உள்ளது தண்ணீர் வடிந்தாலும் அந்த பயிர்களை இனி காப்பாற்ற முடியாது, கால்நடைகள், வீடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் பாதிப்புக்கு ஏற்றவாறு நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார் முதல்வர் அறிவித்த ரூபாய் ஆயிரம போதாது கூடுதலாக நிவாரணம் அறிவிக்க வேண்டும்.
மயிலாடுதுறை மாவட்டத்தை இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு ஏக்கருக்கு குறை ந்தபட்சம் ரூ 30000 வழங்க வேண்டும். பெற்ற குழந்தை தாய்யை பறிகொடுத்தது போல் சம்பா சாகுபடிவிவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பயிரை பறிகொடுத்து தவித்து வருகின்றனர்.
மீண்டும் மூன்று நாட்களுக்கு அதிக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் மேலும் பாதிப்பு ஏற்படும் விவசாயிகள் ஒரு ஆண்டுகளுக்கான வருமானத்தை முற்றிலும் இழுந்துவிட்டனர்.
மேலும் விவசாயிகளின் மாடி வீடுகள், தொகுப்பு வீடுகளுக்கு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது தனை உயர்த்தி வங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
நாகை எம்பி செல்வ ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், நிர்வாகிகள் சிவராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






