search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாய சங்கங்கள் போராட்டம்
    X

    விவசாய சங்கத்தினர் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விவசாய சங்கங்கள் போராட்டம்

    • ரூ.1000 நிவாரணம் என்பது உயர்ந்து வரும் விலைவாசிகளுக்கு ஏற்ப சரியான தொகையில்லை.
    • விவசாய நிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 35 ஆயிரம் வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட த்தில் கடந்த 10-ம் மற்றும் 11ம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒரு லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. பல்லாயிரம் குடியிருப்புகள் தண்ணீரில் தத்தளித்தது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி, இரண்டு தாலுகாவுக்கு மட்டும் தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் நிவாரணம் வழங்க வேண்டும் வெறும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்பது உயர்ந்து வரும் விலைவாசிகளுக்கு ஏற்ப சரியான தொகையில்லை. நிவாரணத்தை வீடுகளுக்கு பத்தாயிரம் ரூபாயாகவும் விவசாய நிலங்களுக்கு ஹெக்டேருக்கு 35 ஆயிரம் ரூபாயாகவும் வழங்க வேண்டும்.

    என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம், டெல்டா விவசா யிகள் பாசனதாரர் சங்கம், வீரசோழன் விவசா யிகள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், உள்ளிட்ட விவசாயிகள் சங்கங்கள், விவசாயிகள் பங்கேற்று மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுப ட்டனர்.

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்அலுவலகத்தின் எதிரே கண்டன கோஷங்க ளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் விவசாயிகள் ஊர்வலமாக மனு அளிக்க சென்றனர்.

    மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர், தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலாஜி விவசாயிகளிடம் மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலில் வைத்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    Next Story
    ×