என் மலர்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே தொழிலாளியை அடித்துக் கொலை செய்த வழக்கில் 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோவில் அருகே கிள்ளியூர் கிராமம், ராமன் கோட்டம் காலனி தெருவைச் சேர்ந்தவர் சித்திரன் (வயது 70). இவருடைய மகன் பிரகாஷ். திருக்கடையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மகன் பள்ளிக்கு செல்லாததை கண்டித்துள்ளார்.
ஆனால் அதே தெருவை சேர்ந்த பிச்சைகண்ணு (60), பாலமுருகன் (35), காளியம்மாள் (32), பிரியா (30), ஜெயலட்சுமி, ஆகியோர் தங்களை திட்டுவதாக நினைத்து சித்திரனை தாக்கியதில் அவர் இறந்தார்.
தகவலறிந்த செம்பனார்கோவில் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் சென்று இறந்த சித்திரன் உடலை கைபற்றி மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து 5 நபர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

சீர்காழி ஒன்றியத்தில் பள்ளிகளின் தரநிலை குறித்து அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
சீர்காழி:
சீர்காழி ஒன்றியத்தில் சுமார் 20 பள்ளிகளை கடந்த இரண்டு நாட்களாக கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, கொள்ளிடம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி, ஆசிரியர் பயிற்றுநர் ஐசக்ஞானராஜ் ஆகியோர் பள்ளியின் தரநிலை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாக்குடி உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது ஆசிரியர்களின் வருகை, பள்ளியின் இருப்பு பதிவேடு, ஆய்வக பதிவேடு, விலையில்லா பொருட்கள், பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள மானியங்கள், மாணவர் களின் கற்றல் திறன், கட்டிடத்தின் உறுதி தன்மை, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப் பட்டது. ஆய்வின்போது தலைமை ஆசிரியர் பாலாஜி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

கொள்ளிடம் ஒன்றியத்தில் மருத்துவர்கள், செவிலியர்களின்றி இரவு நேரங்களில் பூட்டி கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.
சீர்காழி:
இரவு நேர அவசர சிகிச்சைக்கு வந்த நோயாளிகளை சார்ந்த வர்கள் இவ்வாறு மருத்துவமனை பூட்டப்பட்டு கிடப்பதால் ஆத்திரத்தில் சேதப்படுத்தி சென்றி ருக்கலாம் என கூறப்படுகிறது. ஆகையால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்கள், செவிலியர் களை நியமிக்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சீர்காழி வட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் குன்னம், நல்லூர், திருமுல்லைவாசல் உள்ளிட்ட 9 இடங்களில் அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்கள் செயல்பட்டுவருகிறது.
24 மணி நேரம் செயல்படக்கூடிய இந்த சுகாதார நிலையங்களில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், கர்ப்பிணிகள், வயோதிகர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆரம்ப சுகாதாரநிலையங்களில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பற்றாக்குறையால் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
24மணிநேரமும் இயங்கவேண்டிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர், செவிலியர் இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டு கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில்
திடீர் காய்ச்சல், விஷ பூச்சிகடி போன்ற அவசர சிகிச்சைப்பெற வரும் கிராமமக்கள் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் பூட்டப்பட்டு கிடப்பதால் பல கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சீர்காழி அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இரவில் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பூட்டப்பட்டிருக்கும் சுகாதார நிலையங்களால் அலைகழிக்கப்பட்டு அவதி யடைகின்றனர். இந்நிலையில் சீர்காழி அருகேயுள்ள எடமணல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திருமுல்லைவாசல் அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் ஆகியவற்றை நேற்று இரவு மர்ம நபர்கள் அங்கிருந்த இருக்கைகள், ஸ்டெக்சர், அறிவிப்பு பலகை ஆகியவற்றை சேதப்படுத்தி சென்றுள்ளனர்.
குத்தாலம் அருகே ஸ்ரீகண்டபுரம் மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஸ்ரீகண்டபுரம் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 18-ம் தேதி பூச்சொரிதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி பக்தர்கள் அலகு காவடி, சக்தி கரகம் எடுத்து ஊர்வலமாக புறப்பட்டு கோயிலை வந்தடைந்தனர். கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாவிளக்கு தீபமிட்டு வழிபாடு செய்தனர்.
வாணவேடிக்கை நிகழ்ச்சி பொதுமக்களை உற்சாகப்படுத்தியது. நிகழ்ச்சியை கிராம நாட்டாண்மைகள் மற்றும் கிராமவாசிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

சீர்காழி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் வணிகவியல் கருத்தரங்கம் நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் உயராய்வுத்துறை மற்றும் வணிகவியல் மேலாண்மைத்துறை சார்பாக வணிகம் மற்றும் வணிக நிலைத்தன்மையில் வளர்ந்து வரும் போக்குகள் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம் அண்மையில் நடந்தது.
கல்லூரி செயலர் கே.வி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். இயக்குனர்கள் மருத்துவர் முத்துக்குமார், அனிதாஇராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சுகந்தி வரவேற்றார்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசியரும், பல்கலைகழக மாணிய குழுவின் ஆராய்ச்சி விருது பெற்றவருமான முனைவர் ராமு சிறப்புவிருந்தினராக பங்கேற்று கருத்துரை வழங்கினார்.
அப்போது வணிகத்தில் வளர்ந்துவரும் மாற்றங்கள் குறித்தும் அதை எதிர்கொள்ளும் யுக்திகள் குறித்து விளக்கினார். இதில் விவேகானந்தா மகளிர் கல்லூரி, மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி, பொறையார் கல்லூரி, தருமபுரம் ஆதீனம் கல்லூரி, தரங்கம்பாடி அன்னை தெரசா கல்லூரி மாணவிகள் பங்கேற்று 30க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
ஆய்வு கட்டுரைகளை ராமு ஆய்வு செய்து, மாணவிகளை ஊக்குவி, ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய புத்தகத்தை விழாவில் வெளியிட்டார். நிறைவில் பேராசிரியை புனிதவதி நன்றி கூறினார்.

சீர்காழியில் விடுதலை போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரின் 91-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
சீர்காழி:
விடுதலை போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரின் 91ஆம் ஆண்டு நினைவு தின வீரவணக்க அஞ்சலி நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து சீர்காழி அரசு மருத்துவமனையில் ரத்ததானம் வழங்குதலும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மயிலாடுதுறை மாவட்ட குழு சார்பில் மாவட்ட தலைவர் ஆர்.மூவேந்தன் தலைமையில் நடந்தது.
சீர்காழியில் புதிய பேருந்து நிலையம் அருகில் பகத்சிங் படத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் அ.சீனிவாசன். மாவட்ட குழு உறுப்பினர்.
வழக்கறிஞர். எஸ்.சுந்தரைய்யா, நிர்வாக குழு எஸ்.ஜெயசக்திவேல், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் மா.பிரபாகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர்இளைஞர் பெருமன்றம் சீர்காழி ஒன்றிய தலைவர் இதயநிலவன், மாவட்ட துணை செயலாளர் கோபிநாத், பேரூராட்சி நகர செயலாளர் ரமேஷ் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர்.

சீர்காழி ஒன்றியத்தில் பள்ளிகள் தரநிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் சுமார் 40 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சீர்காழி ஒன்றியத்தில் சுமார் 20 பள்ளிகளை கடந்த இரண்டு நாட்களாக கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, கொள்ளிடம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி, ஆசிரியர் பயிற்றுநர் ஐசக்ஞானராஜ் ஆகியோர் பள்ளியின் தரநிலை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆய்வில் ஆசிரியர்களின் வருகை பள்ளியின் இருப்பு பதிவேடு ஆய்வக பதிவேடு விலையில்லா பொருட்கள் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள மானியங்கள் மாணவர்களின் கற்றல் திறன் கட்டிடத்தின் உறுதி தன்மை கழிப்பிட வசதி குடிநீர் வசதி ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கபட்டது.
மயிலாடுதுறையில் அமைய உள்ள மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு சிலை அமைக்க இடம் ஆய்வு செய்யப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள தமிழிசை மூவர் மணிமண்டபம், தரங்கம்பாடி தாலுகா தில்லையாடி கிராமத்தில் அமைந்துள்ள தியாகி தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபம் ஆகியவற்றை செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்து அதன் பராமரிப்பு விவரங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து மயிலாடு துறை நகராட்சிக்குட்பட்ட வரதாச்சாரியார் பூங்காவில்¢ பெண் சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், தேவதாசி ஒழிப்பு இயக்க மற்றும் திராவிட இயக்கத்தின் அரசியல்¢ முன்னோடி ,
மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு முதலமைச்சர் உத்தரவுப்படி தமிழக சட்டமன்றத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மானிய கோரிக்கையின் போது செய்தித்துறை அமைச்சர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட வரதாச்சாரியார் பூங்காவில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ¢ நினைவு வெண்கல சிலை அமைக்க இடம் தேர்வு செய்வது குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அஸ்வின் குமார் ,
பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
25 ஆண்டுகளுக்கு பிறகு இன்று திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகம். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.
தேவாரப்பாடல் பெற்றதும், மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இக்கோவில் சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் மற்றும் 60, 70, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சிறப்பு ஹோமங்கள் நடத்தி சுவாமி அமிர்த கடேஸ்வரர் மற்றும் அபிராமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வந்தன. பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை முன்னிட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கடந்த 23-ம் தேதி முதல்கால யாகசாலை பூஜை தொடங்கி தினமும் இரண்டுகால யாகாசாலை பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை 5 மணியளவில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் 72 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8-வது யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. 8-வது கால பூஜைகள் நடைபெற்றது. பின்னர் புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடைபெற்றன.
பின்னர் சிவ ஆகமங்கள் முறைப்படி சிவஸ்ரீ எம்.கே.கணேசகுருக்கள் தலைமையில் 120 வேத விற்பன்னர்கள், 27 திருமுறை ஓதுவார்கள் திருமுறை பாராயணம், அபிராமி அந்தாதி பாராயணம், மிரித்திங்கா ஜெபம் ஆகியவை நடைபெற்றது. பூர்ணாஹீதியுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டு வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க மேள தாளங்களுடன் வாணவேடிக்கையுடன் கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்து கோபுர விமானத்தில் வந்தடைந்தது.
இதையடுத்து காலை 10.45 மணியளவில் கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்கும், அம்பாளுக்கும் கடத்தில் உள்ள புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அப்போது கருடன் வட்டமிட புனித நீரால் கோபுர கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை முன்னிட்டு 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
25 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அமிர்தகடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாம்...திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான சிபாரிசு கடிதங்கள் நாளை ரத்து

மயிலாடுதுறையில் புதிய மண் பரிசோதனை கூடம் அமைக்க உத்தரவிட்ட முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
தரங்கம்பாடி:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண்மைக்கென்று தனி பட்ஜெட்டை செயல்படுத்தி வேளாணில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 2-ம் முறையாக வேளாண் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
காவிரி டெல்டா மாவட்டங்களில் 4964 கி.மீ நீளமுள்ள கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளுக்கு ரூ. 80 கோடி நிதி ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூ. 5157 கோடி நிதி ஒதுக்கீடு, குறிப்பாக மயிலாடுதுறையில் புதிய மண் பரிசோதனைக் கூடம் அமைப்பதன் மூலம் விவசாயிகளின் வாழ்வில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து மயிலாடுதுறை மாவட்ட கோடங்குடி விவசாயி கவிஞர் திருவரசமூர்த்தி கூறும்போது, எனக்கு 74 வயதாகிறது. நான் 20 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்து வருகிறேன். அதில் மா, பாக்கு, தேக்கு, ஆரஞ்சு, நெற்பயிர்கள் போன்றவை சாகுபடி செய்த வருகின்றேன்.
ஒருங்கிணைந்த பண்ணையம் நான் வைத்துள்ளேன். மண் பரிசோதனைக்கூடம் மயிலாடுதுறையில் அமைக்கப்படும் என அறிவித்தமைக்கு மனமார்ந்த நன்றி. இது எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். மண் பரிசோதனை செய்ய இதுவரை நாங்கள் 70 கி.மீ தொலைவில் உள்ள சிக்கலுக்கும் 20 கி.மீ தொலைவில் உள்ள ஆடுதுறைக்கும் அலைந்து கொண்டிருந்தோம். மயிலாடுதுறைக்கே மண் பரிசோதனை கூடம் தந்தது எங்கள் வாழ்நாளில் முதலமைச்சரை மறக்க மாட்டோம் என்றார்.
இதேப்போல் சங்கரன்பந்தலை சேர்ந்த விவசாயி குருகோபி கணேசன், தேரிடிந்தர் ராஜசேகரன் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
பள்ளிவாசல்களுக்கு ரமலான் நோன்பு கஞ்சிக்கான அரிசி வினியோகத்திற்கு சுன்னத் ஜமாஅத் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளனர்.
சீர்காழி:
ரமலான் நோன்பு வருகிற 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாக உள்ளது. இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் பகல் முழுவதும் உண்ணாமல் குடிக்காமல் பதிநான்கு மணிநேரம் நோன்பு எனும் விரதத்தை முப்பது தினங்கள் கடைபிடித்து வருகின்றனர்.
நோன்பு விரதத்தை முடிக்கும் நேரமான இப்தார் நோன்பு திறக்க தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் பச்சரியில் தயாரிக்கப்படும் கஞ்சியை ஏழை பணக்காரர்கள் பாகுபாடுகள் இல்லாமல் அனைவரும் முக்கிய உணவாக அருந்துவார்கள்.
இதன் அடிப்படையில் தமிக அரசு ஆண்டுதோறும் இஸ்லாமியர்களுக்கு தேவையான கஞ்சிக்கான அரிசியை பள்ளிவாசல் ஜமாஅத்துகளுக்கு, அப்பகுதியில் வசிக்கும் ஜமாஅத் மக்கள் தொகைக்கு ஏற்ப வினியோகித்து வருகிறது.
இவ்வாண்டும் 6ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை தமிழக அரசின் சார்பாக வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தவிட்டுள்ளார்கள். கடந்த ஆண்டை விட கூடுதலாக ஒதுக்கீடுகள்செய்து உரிய நேரத்தில் விரைவாக கிடைத்திட வழி வகை செய்து ஆணைபிரப்பித்துள்ள தமிழக முதல்வருக்கும், உரிய ஆவணங்களை சமர்பித்து உடன் பெற்று செல்ல அறிவுறுத்தியுள்ள மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவுக்கும், சீர்காழி வட்டார சுன்னத் வல் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக நன்றியை தெரிவித்து அதன் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது யூசுப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வைத்தீஸ்வரன்கோயிலில் இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி தலைவர் சாமி தரிசனம் செய்தார்.
சீர்காழி:
வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. இங்கு அனைத்து இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி தலைவர் மணிந்தர்ஜீத் பிட்டா குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக சித்தாமிர்த தீர்த்தக்குளத்தில் புனிதநீர் தெளித்துக் கொண்டு, கற்பகவினாயகர், வைத்தியநாதர்சுவாமி, தையல்நாயகிஅம்மன், செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன் ஆகிய சுவாமி சன்னதியில் வழிபாடு செய்தார். கோயில் கட்டளை விசாரனை திருநாவுக்கரசுதம்பிரான் சுவாமிகள் எம்.எஸ்.பிட்டாவை வரவேற்றார்.
எம்.எஸ்.பிட்டாவிற்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக் தலைமையில் வைத்தீஸ்வரன்கோயில் போலீசார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கோயில் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
பக்தர்களை ஆய்வு செய்து உள்ளே அனுப்பினர். தொடர்ந்து அவர் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர்சுவாமி கோயிலுக்கு புறப்பட்டு சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கும் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.