என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
விடுதலை போராட்ட வீரர்களின் 91-ம் ஆண்டு நினைவு தினம்
சீர்காழியில் விடுதலை போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரின் 91-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
சீர்காழி:
விடுதலை போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரின் 91ஆம் ஆண்டு நினைவு தின வீரவணக்க அஞ்சலி நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து சீர்காழி அரசு மருத்துவமனையில் ரத்ததானம் வழங்குதலும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மயிலாடுதுறை மாவட்ட குழு சார்பில் மாவட்ட தலைவர் ஆர்.மூவேந்தன் தலைமையில் நடந்தது.
சீர்காழியில் புதிய பேருந்து நிலையம் அருகில் பகத்சிங் படத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் அ.சீனிவாசன். மாவட்ட குழு உறுப்பினர்.
வழக்கறிஞர். எஸ்.சுந்தரைய்யா, நிர்வாக குழு எஸ்.ஜெயசக்திவேல், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் மா.பிரபாகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர்இளைஞர் பெருமன்றம் சீர்காழி ஒன்றிய தலைவர் இதயநிலவன், மாவட்ட துணை செயலாளர் கோபிநாத், பேரூராட்சி நகர செயலாளர் ரமேஷ் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர்.

Next Story