என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
மண் பரிசோதனை கூடம் அமைக்கப்படும்
மயிலாடுதுறையில் புதிய மண் பரிசோதனை கூடம் அமைக்க உத்தரவிட்ட முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
தரங்கம்பாடி:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண்மைக்கென்று தனி பட்ஜெட்டை செயல்படுத்தி வேளாணில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 2-ம் முறையாக வேளாண் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
காவிரி டெல்டா மாவட்டங்களில் 4964 கி.மீ நீளமுள்ள கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளுக்கு ரூ. 80 கோடி நிதி ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூ. 5157 கோடி நிதி ஒதுக்கீடு, குறிப்பாக மயிலாடுதுறையில் புதிய மண் பரிசோதனைக் கூடம் அமைப்பதன் மூலம் விவசாயிகளின் வாழ்வில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து மயிலாடுதுறை மாவட்ட கோடங்குடி விவசாயி கவிஞர் திருவரசமூர்த்தி கூறும்போது, எனக்கு 74 வயதாகிறது. நான் 20 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்து வருகிறேன். அதில் மா, பாக்கு, தேக்கு, ஆரஞ்சு, நெற்பயிர்கள் போன்றவை சாகுபடி செய்த வருகின்றேன்.
ஒருங்கிணைந்த பண்ணையம் நான் வைத்துள்ளேன். மண் பரிசோதனைக்கூடம் மயிலாடுதுறையில் அமைக்கப்படும் என அறிவித்தமைக்கு மனமார்ந்த நன்றி. இது எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். மண் பரிசோதனை செய்ய இதுவரை நாங்கள் 70 கி.மீ தொலைவில் உள்ள சிக்கலுக்கும் 20 கி.மீ தொலைவில் உள்ள ஆடுதுறைக்கும் அலைந்து கொண்டிருந்தோம். மயிலாடுதுறைக்கே மண் பரிசோதனை கூடம் தந்தது எங்கள் வாழ்நாளில் முதலமைச்சரை மறக்க மாட்டோம் என்றார்.
இதேப்போல் சங்கரன்பந்தலை சேர்ந்த விவசாயி குருகோபி கணேசன், தேரிடிந்தர் ராஜசேகரன் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
Next Story






