என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.
  X
  பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.

  பள்ளிகளின் தரநிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சீர்காழி ஒன்றியத்தில் பள்ளிகளின் தரநிலை குறித்து அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
  சீர்காழி:

  சீர்காழி ஒன்றியத்தில் சுமார் 20 பள்ளிகளை கடந்த இரண்டு நாட்களாக கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, கொள்ளிடம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி, ஆசிரியர் பயிற்றுநர் ஐசக்ஞானராஜ் ஆகியோர் பள்ளியின் தரநிலை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

  இந்நிலையில் கன்னியாக்குடி உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது ஆசிரியர்களின் வருகை, பள்ளியின் இருப்பு பதிவேடு, ஆய்வக பதிவேடு, விலையில்லா பொருட்கள், பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள மானியங்கள், மாணவர் களின் கற்றல் திறன், கட்டிடத்தின் உறுதி தன்மை, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.

  மேலும் மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப் பட்டது. ஆய்வின்போது தலைமை ஆசிரியர் பாலாஜி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
  Next Story
  ×