என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரை மாநகராட்சியில் வரி வசூல் மையங்கள் 4 நாட்கள் செயல்படாது.
    • மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு மதுரை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் சொத்து வரி, குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை பராமரிப்பு கட்டணம் ஆகிய வரி வருவாய் இனங்கள் மூலமும், வரியில்லாத வருவாய் இனங்கள் மூலமும் மாநகராட்சியில் பல்வேறு அடிப்படைவசதிகளும், பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநரகம் மூலம் 2024-25-ம் ஆண்டிற்கான மென்பொருளில் (Urban Tree Information System UTIS) புதிய பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற இருப்பதால் இன்று (31-ந் தேதி) இரவு 10 மணி முதல் வருகிற 4-ந் தேதி வரை 4 நாட்களுக்கு மாநகராட்சியில் செயல்படும் வரி வசூல் மையங்கள் மற்றும் ஆன்லைன் சேவைகள் செயல்படாது.

    பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பராமரிப்புக் கட்டணம் உள்ளிட்ட இதர வரிகளை வருகிற 5-ந் தேதி முதல் மாநகராட்சி வரிவசூல் மையங்களில் செலுத்தி தொடர்ந்து மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு மதுரை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    • தி.மு.க. தகவல் தொழில் நுட்ப உறுப்பினர்களுக்கு நேர்காணல் நடந்தது.
    • மாற்று கட்சியினர் கண்ணிய மில்லாமல் நம்மை விமர்சனம் செய்வார்கள்.

    திருமங்கலம்

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணிக்கு புதிய நிர்வாகிகளுக்கான நேர்கா ணல் திருமங்கலத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் மணிமாறன் நேர்காணல் நடத்தினார். இதில் திருமங்கலம் சட்ட மன்ற தொகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாவட்ட செயலாளர் மணிமாறன் பேசுகையில், தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி கட்சியில் முக்கிய அணியாக உள்ளது. இந்த பிரிவு தொடங்கப்பட்டது திருமங்கலத்தில் தான். மாற்று கட்சியினர் கண்ணிய மில்லாமல் நம்மை விமர்சனம் செய்வார்கள். ஆனால் நாம் பதிலுக்கு கண்ணியத்துடன் விமர்சிக்க வேண்டும். அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் என்றார்.

    இதில் தகவல் தொழில் நுட்ப மாவட்ட அமைப்பா ளர் ஜெயசந்திரன், துணை அமைப்பாளர்கள் பாலகாமு, கார்த்தி, சூரியா, மகளிர் துணை அமைப்பாளர் தவமணி மற்றும் தி.மு.க. தெற்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி, மதன்குமார், ஆலம்பட்டி சண்முகம், தங்கபாண்டி, வழக்கறிஞரணி அமைப் பாளர் தங்கேஸ்வரன், நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன்அதியமான், பலர் கலந்து கொண்டனர்.

    • ஓட்டை-உடைசல் பஸ்களை இயக்குவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
    • தூங்கா நகரம் என்று வர்ணிக்கப்படும் மதுரை மாநகருக்கு 24 மணி நேரமும் பயணிகள் வந்து செல்கின்றனர்.

    மதுரை

    மதுரை மாநகரம் சென்னைக்கு அடுத்து முக்கிய நகரமாக விளங்குகிறது. இங்கு தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். மதுரை பகுதியில் செயல்பட்டு வரும். தொழில் நிறுவனங் களில் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    தூங்கா நகரம் என்று வர்ணிக்கப்படும் மதுரை மாநகருக்கு 24 மணி நேரமும் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் அரசு பஸ்கள் போதுமான அளவில் வில்லை. மதுரை மாவட்டத்தில் இயக்கப்படும் பஸ்களில் பெரும்பாலான பஸ்கள் ஓட்டை, உடைசல் பஸ்களாகவே உள்ளன. அவைகளில் கம்பிகள் உடைந்து நீட்டிக்கொண்டு பயணிகளை பயமுறுத்துகின்றன.

    சில பஸ்களில் இருக்கைகள் அமர முடியாத அளவில் கிழிந்து சரிந்து சேதமாக காட்சியளிக் கின்றன. சில டவுன் பஸ்கள் தள்ளாடியபடியே செல்கின்றன. மழை காலங்களில் பல பஸ்களின் மேற்கூரை சேதமாகி பஸ்சுக்குள் தண்ணீர் ஒழுகுகிறது. அப்போது பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். சில பஸ்களில் குடை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. இதற்கிடையே தற்போதுபெண்களுக்கு கட்டணமில்லா பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்த பஸ்களில் பல போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால் அதில் பயணம் செய்யும் போது சர்க்கஸ் வாகனங்களில் செல்வது போல் உள்ளது.

    மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் செல்ல போதிய பஸ்கள் இல்லாததால் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்கின்றனர். இதனால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. மாணவ, மாணவிகள் பஸ் நிறுத்தம் வரும்போது டிரைவர்கள் பெயரளவுக்கு நிறுத்திவிட்டு அவர்கள் ஏறுவதற்குள் பஸ்களை எடுத்துச்செல்கின்றனர். இதேநிலை மகளிர் கட்டணமில்லா பஸ்களிலும் உள்ளது.

    எனவே பயணிகளின் நலன் கருதி மதுரை மாவட்டத்திற்கு தேவையான அளவு கூடுதல் பஸ்களை இயக்கவேண்டும். புதிதாக வாங்கப்படும் பஸ்களை அதிகமாக மதுரைக்கு வழங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மகேசுவரி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • காமராஜர் பல்கலைக்கழக விடுதியில் இருந்து மாணவி கீழே விழுந்து இறந்த சம்பவம் மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    தேனி மாவட்டம் குப்ப நாயக்கன்பட்டியை சேர்ந்த முருகன் மகள் மகேசுவரி (வயது 25). இவர் மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.எட் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கினார்.

    விடுதியில் உள்ள 2-வது தளத்தில் உள்ள அறையில் இருந்த மகேசுவரி நேற்று இரவு நீண்ட நேரம் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் நள்ளிரவில் 2-வது தளத்தில் இருந்து கீழே விழுந்ததில் மகேசுவரி படுகாயமடைந்தார்.

    விடுதியில் இருந்த சக மாணவிகள் இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சிறிதுநேரத்தில் அங்கு வந்த ஆம்புலன்சு மூலம் மகேசுவரி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மகேசுவரி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேசுவரி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காமராஜர் பல்கலைக்கழக விடுதியில் இருந்து மாணவி கீழே விழுந்து இறந்த சம்பவம் மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • அம்மா பெயரில் உள்ள மின் இணைப்பை பெயர் மாற்றம் செய்ய முத்துகணேசன் விக்கிரமங்கலத்தில் செயல்பட்டு வரும் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றார்.
    • இளநிலை மின் பொறியாளராக பணியாற்றும் குணசேகரன் ரூ. 3 ஆயிரம் கொடுத்தால் தான் பெயர் மாற்றம் செய்து தர முடியும் என்று கூறியுள்ளார்.

    சோழவந்தான்:

    மதுரை சோழவந்தானை அடுத்த காடுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகணேசன். இவர் தன்னுடைய அம்மா பெயரில் உள்ள மின் இணைப்பை பெயர் மாற்றம் செய்ய விக்கிரமங்கலத்தில் செயல்பட்டு வரும் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றார்.

    அப்போது அங்கு இளநிலை மின் பொறியாளராக பணியாற்றும் குணசேகரன் ரூ. 3 ஆயிரம் கொடுத்தால் தான் பெயர் மாற்றம் செய்து தர முடியும் என்று கூறியுள்ளார்.

    இதுபற்றி முத்துகணேசன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு இன்று காலை விக்கிரமங்கலம் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று குணசேகரனிடம் ரூ.2,500 லஞ்சம் கொடுத்துள்ளார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி. சத்தியசீலன், இன்ஸ்பெக்டர் பாரதிபிரியா ஆகியோர் கையும் களவுமாக குணசேகரனை பிடித்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் விக்கிரமங்கலம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தேவிபட்டினம் கடலில் மூழ்கி பலியான 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மதுரை

    மதுரை தெற்கு தொகுதியைச் சேர்ந்த நாகராஜ் மனைவி இருளாயி (வயது 55), இருளாண்டி மனைவி மணிமேகலை (50), முருகன் (33) ஆகியோர் கோவில் வழிபாட்டுக்காக ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு மூழ்கியது. இதில் 3 பேரும் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கோவில் வழிபாட்டுக்கு சென்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் கடலில் மூழ்கி இறந்த சம்பவம் வேதனை தருகிறது. அவர்களது குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கடலில் மூழ்கி உயிரிழந்த இருளாயி, மணிமேகலை, முத்துமணி ஆகியோரது குடும்பங்களுக்கு முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மேலூர் அருகே குடிசை வீட்டில் தீயில் கருகி ரூ. 1 லட்சம் பொருட்கள் சேதமானது.
    • குப்பைக்கு தீ வைத்ததால் இந்த விபரீத சம்பவம் நடந்தது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பெருமாள்பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது37), கூலித்தொழி லாளி. இவரது வீட்டருகே சிலர் குப்பைகளை குவித்து வைத்து தீ வைத்தனர்.

    அப்போது காற்று பலமாக வீசியதால் தீ அருகில் உள்ள ஜெயராஜின் குடிசை வீட்டுக்கு பரவியது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென எரிய தொடங்கியது. இதுகுறித்து உடனடியாக மேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அதன் பேரில் மேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னாண்டி தலைமை யில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 1மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இருந்தபோதிலும் தீ விபத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1லட்சத்து 10ஆயிரம் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகிவிட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    • 10 ஆண்டுகளாக காத்திருக்கும் தகுதித்தேர்வு நிபந்தனை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
    • தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்ற பொதுச்செயலாளர் சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பெற்று வந்த சலுகை, உரிமைகள் கடந்த ஆட்சி காலத்தில் பறிக்கப்பட்டன. இந்தநிலையில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார். எனவே ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.

    இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு தொடர்பாக எங்களுடன் கலந்துபேசி குழு அமைக்க வேண்டும். எங்களின் முக்கிய கோரிக்கைகளான ஊக்க ஊதிய உயர்வு, சரண் விடுப்பு, முடக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு, புதிய ஓய்வூதியம் ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பை நடப்பு கூட்டத்தொடரில் வெளியிட வேண்டும்.

    கடந்த ஆட்சியில் ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த குழப்பமான பல்வேறு அறிவிப்புகளால் பாதிக்கப்பட்டு உள்ள 1500 ஆசிரியர்களுக்கு தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

    காலி பணியிடங்களை நிரப்புதல், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை முன்கூட்டியே வருகிற மே மாதத்தில் நடத்த வேண்டும். மருத்துவர்களுக்கு உள்ளது போல ஆசிரியர்களுக்கும் பணிப்பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மேலூர் அருகே வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
    • 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் 402-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள வண்ணாம்பாறை பட்டியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மேலூர், கொட்டாம்பட்டி வட்டாரங்கள் இணைந்து நடத்திய வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அங்குள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் காளிதாசன் முகாமை தொடங்கி வைத்து தேர்வு பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் மாவட்ட செயல் அலுவலர் ஜெயபிரகாஷ் கலந்து கொண்டார். மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் சின்னத்துரை வரவேற்புரை ஆற்றினார். இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் 402-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் கலந்து கொண்டனர். மேலூர் வட்டார இயக்க மேலாளர் ராமு நன்றி கூறினார். மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி வட்டார ஒருங்கிணைப் பாளர்கள் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும் சமுதாய பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை

    தல்லாகுளம் போலீசார் ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகே ரோந்து சென்றனர். இளையோர் விடுதி அருகே மோட்டார் சைக்கிளில் 3பேர் பதுங்கி இருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். இதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மீதமுள்ள இருவரையும் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 1.150 கிலோ கஞ்சா, ரூ.31 ஆயிரத்து 200, மோட்டார் சைக்கிள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    விசாரணையில் மேற்கண்ட இருவரும் வலையப்பட்டி தவமுருகன் மகன் கார்த்திகேயன் என்ற கவுதம் கார்த்திக் (22), ஆத்திகுளம் ஏஞ்சல்நகர் ராஜா தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் பாரி ஆனந்தன் (22) என்பது தெரியவந்தது. 2பேரையும் கைது செய்த போலீசார், தப்பி ஓடிய ஆனையூர் சாந்தி நகரை சேர்ந்த ஜாக்ஆலிவரை தேடி வருகின்றனர்.

    கரிமேடு போலீசார் காளவாசல் பகுதியில் ரோந்து சென்றனர். ராஜீவ் காந்தி தெருவில் கஞ்சா விற்பது தெரியவந்தது. அங்கு பாண்டி என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். பாத்ரூம் அருகே 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதையடுத்து நேதாஜிரோடு கிளாஸ்கார தெருவை சேர்ந்த ஜானகிராமன்(57) என்பவரை கைது செய்த போலீசார், தப்பியோடிய சிவகுமார் மனைவி ஆனந்தியை தேடி வருகின்றனர்.

    • எஸ்.என்.கல்லூரியில் கல்லூரி தின விழா நடந்தது.
    • சுயநிதிப்பிரிவு இயக்குநர் ஜெயக்கொடி நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை சரசுவதி நாரா யணன் கல்லூரியின் 57வது கல்லூரி தினவிழா கல்லூரி செயலர் நாரா யணன் தலைமையில் நடை பெற்றது. துணை முதல்வர் மோதிலால் வரவேற்று பேசினார்.

    முதல்வர் கண்ணன் தொடக்கவுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழக, கல்லூரி வளர்ச்சிக்குழு டீன் கண்ணதாசன் பேசுகை யில், மாணவர்கள் தனித்திற மைைய வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    இன்றைய சூழ்நிலையில் பல்கலைக்கழகம் அளிக்கும் பட்டங்களும், மதிப்பெண் பட்டியலும் ஒரு சிறந்த வேலை வாய்ப்பை உரு வாக்க முடியாது என்று கூறினார்.

    பல்வேறு துறைகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நினைவு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது. சுயநிதிப்பிரிவு இயக்குநர் ஜெயக்கொடி நன்றி கூறி னார்.

    • தேவாலய ஊழியர் நல வாரியத்தில் சேர விண்ணப்பங்களை சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
    • மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    கிறிஸ்தவ தேவாலயங்களில் வேலை பார்க்கும் உபதேசியார், மற்றும் ஊழியர்களுக்கான நல வாரியம் அமைக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. எனவே இந்த நல வாரியத்தில் உறுப்பினராக சேர விரும்புவோர், அதற்கான விண்ணப்ப படிவங்களை மதுரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மதுரை மாவட்ட எல்லைக்குட்பட்ட ரோமன் கத்தோலிக் திருச்சபை, பேராயர்கள், ஆயர்கள், புராட்டஸ்டாண்ட் திருச்சபை, ஆயர்கள், பெண்டகோஸ்டல் சர்ச் போன்ற அங்கீகாரம் உடைய திருச்சபைகளில் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கலாம்.

    திருச்சபைகளின் பரிந்துரை அடிப்படையில், உறுப்பினர்க ளுக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்கப்படும். இந்த வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படும். அதாவது 10-ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் படிப்பு, தொழிற்கல்வி பட்டப்படிப்பு வரை கல்வி உதவித்தொகை, விபத்தில் மரணம் அடைந்தால் ஒரு லட்சம் ரூபாய், விபத்தில் ஊனம் ஏற்பட்டால் ரூ 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை நிவாரணம், இயற்கை மரணத்துக்கு ரூ.20 ஆயிரம், ஈமச்சடங்குக்கு ரூ.5 ஆயிரம், ஆண்களுக்கு ரூ.3 ஆயிரம், பெண்களுக்கு ரூ.5 ஆயிரம், திருமண உதவித்தொகை, ரூ.6 ஆயிரம், மகப்பேறு உதவித்தொகை, கருச்சிதைவு- கருக்கலைப்புக்கு ரூ.3 ஆயிரம், கண் கண்ணாடிக்கு ரூ.500, மாதந்தோறும் ரூ.1,000 முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும். இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×