என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Church Staff Welfare Board"

    • தேவாலய ஊழியர் நல வாரியத்தில் சேர விண்ணப்பங்களை சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
    • மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    கிறிஸ்தவ தேவாலயங்களில் வேலை பார்க்கும் உபதேசியார், மற்றும் ஊழியர்களுக்கான நல வாரியம் அமைக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. எனவே இந்த நல வாரியத்தில் உறுப்பினராக சேர விரும்புவோர், அதற்கான விண்ணப்ப படிவங்களை மதுரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மதுரை மாவட்ட எல்லைக்குட்பட்ட ரோமன் கத்தோலிக் திருச்சபை, பேராயர்கள், ஆயர்கள், புராட்டஸ்டாண்ட் திருச்சபை, ஆயர்கள், பெண்டகோஸ்டல் சர்ச் போன்ற அங்கீகாரம் உடைய திருச்சபைகளில் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கலாம்.

    திருச்சபைகளின் பரிந்துரை அடிப்படையில், உறுப்பினர்க ளுக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்கப்படும். இந்த வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படும். அதாவது 10-ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் படிப்பு, தொழிற்கல்வி பட்டப்படிப்பு வரை கல்வி உதவித்தொகை, விபத்தில் மரணம் அடைந்தால் ஒரு லட்சம் ரூபாய், விபத்தில் ஊனம் ஏற்பட்டால் ரூ 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை நிவாரணம், இயற்கை மரணத்துக்கு ரூ.20 ஆயிரம், ஈமச்சடங்குக்கு ரூ.5 ஆயிரம், ஆண்களுக்கு ரூ.3 ஆயிரம், பெண்களுக்கு ரூ.5 ஆயிரம், திருமண உதவித்தொகை, ரூ.6 ஆயிரம், மகப்பேறு உதவித்தொகை, கருச்சிதைவு- கருக்கலைப்புக்கு ரூ.3 ஆயிரம், கண் கண்ணாடிக்கு ரூ.500, மாதந்தோறும் ரூ.1,000 முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும். இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×