என் மலர்
நீங்கள் தேடியது "Eligibility criteria"
- 10 ஆண்டுகளாக காத்திருக்கும் தகுதித்தேர்வு நிபந்தனை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
- தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மதுரை
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்ற பொதுச்செயலாளர் சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பெற்று வந்த சலுகை, உரிமைகள் கடந்த ஆட்சி காலத்தில் பறிக்கப்பட்டன. இந்தநிலையில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார். எனவே ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.
இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு தொடர்பாக எங்களுடன் கலந்துபேசி குழு அமைக்க வேண்டும். எங்களின் முக்கிய கோரிக்கைகளான ஊக்க ஊதிய உயர்வு, சரண் விடுப்பு, முடக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு, புதிய ஓய்வூதியம் ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பை நடப்பு கூட்டத்தொடரில் வெளியிட வேண்டும்.
கடந்த ஆட்சியில் ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த குழப்பமான பல்வேறு அறிவிப்புகளால் பாதிக்கப்பட்டு உள்ள 1500 ஆசிரியர்களுக்கு தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
காலி பணியிடங்களை நிரப்புதல், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை முன்கூட்டியே வருகிற மே மாதத்தில் நடத்த வேண்டும். மருத்துவர்களுக்கு உள்ளது போல ஆசிரியர்களுக்கும் பணிப்பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






