என் மலர்
நீங்கள் தேடியது "வரி வசூல் மையம்"
- அனைத்து வரி இனங்களும் செலுத்த புதிதாக வரி வசூல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் வரியினங்களை செலுத்த புதிய வரி வசூல் மையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல பொதுமக்கள் நலனுக்காக புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பிச்சம்பாளையம் புதூர் மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் அனைத்து வரி இனங்களும் செலுத்த புதிதாக வரி வசூல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வரியினங்களை செலுத்த புதிய வரி வசூல் மையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
- மதுரை மாநகராட்சியில் வரி வசூல் மையங்கள் 4 நாட்கள் செயல்படாது.
- மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு மதுரை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மதுரை
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் சொத்து வரி, குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை பராமரிப்பு கட்டணம் ஆகிய வரி வருவாய் இனங்கள் மூலமும், வரியில்லாத வருவாய் இனங்கள் மூலமும் மாநகராட்சியில் பல்வேறு அடிப்படைவசதிகளும், பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநரகம் மூலம் 2024-25-ம் ஆண்டிற்கான மென்பொருளில் (Urban Tree Information System UTIS) புதிய பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற இருப்பதால் இன்று (31-ந் தேதி) இரவு 10 மணி முதல் வருகிற 4-ந் தேதி வரை 4 நாட்களுக்கு மாநகராட்சியில் செயல்படும் வரி வசூல் மையங்கள் மற்றும் ஆன்லைன் சேவைகள் செயல்படாது.
பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பராமரிப்புக் கட்டணம் உள்ளிட்ட இதர வரிகளை வருகிற 5-ந் தேதி முதல் மாநகராட்சி வரிவசூல் மையங்களில் செலுத்தி தொடர்ந்து மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு மதுரை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.






