என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • சம்பவத்தன்று வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் மாடகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 63). இவர் சம்பவத்தன்று வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் சுரேஷ் பாரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்தபோது திடீரென்று வண்டி கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
    • வண்டியை ஓட்டி சென்ற மனோகர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பட்டாளம்மான் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மனோகர் என்கிற மனோஜ் (வயது36).

    இவர் சம்பவத் தன்று தனது மோட்டார் சைக்கிளில் அஞ்செட்டி-தேன்கனிக் கோட்டை சாலையில் சென்றார். அப்போது அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த அஜீத் (36) என்பவரும் சென்றார்.

    இருவரும் மேடம்மத்திகிரி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தபோது திடீரென்று வண்டி கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வண்டியை ஓட்டி சென்ற மனோகர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    காயமடைந்த அஜீத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக் கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    இதோபோன்று கிருஷ்ண கிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சந்திரப்பட்டியைச் சேர்ந்தவர் தரணி (30). இவர் கடந்த 5-ந் தேதி ஆனங்கூர்-கல்லாவி ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது, திடீரென்று வண்டியின் கட்டுப்பாட்டை இழந்து சரிந்து விழுந்தது. இதில் வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்த தரணி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த தரணி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கல்லாவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்பாராத விதமாக திம்மாபுரம் சர்வீஸ் சாலையில் நின்றிருந்த லாரி மீது கணேசன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியது.
    • தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே கணேசன் பலியானார்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டிணம் ஒட்டி உள்ள தேசிய நெடுஞ் சாலையில் திம்மாபுரம் அருகே ஏராளமான மீன் கடைகள் உள்ளன. இந்த நெடுஞ் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் சென்று வருகின்றன. இந்நிலையில் சாலையில் கடந்து போகும் லாரிகள் இங்கு உள்ள மீன் கடைகள் மற்றும் ஓட்டல் கடைகள் முன்பு தங்கள் லாரிகளை நிறுத்திவிட்டு கிருஷ்ணகிரி அணையில் இருந்து வரும் கால்வாயில் குளித்துவிட்டு அங்கிருக்கும் ஒட்டல் கடைகள், மீன் கடைகளில் சாப்பிட்டு செல்வது வழக்கம்.

    இதனால் நெடுஞ் சாலையை ஆக்கிரமித்து லாரிகளை நிறுத்திவிட்டு அங்குள்ள மீன் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் சாப்பிடுகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 7.15 மணி அளவில் கிருஷ்ணகிரியில் இருந்து காவேரிப்பட்டணம் வரும் சர்வீஸ் சாலையில் ஒரு லாரி நின்றிருந்தது. அப்போது காவேரிப்பட்டினம் அடுத்த பென்னேஸ்வரமடம் அருகே உள்ள கொட்டாவுரை சேர்ந்த கணேசன் (32) என்பவர் இச்சாலையில் வரும்போது எதிர்பாராத விதமாக திம்மாபுரம் சர்வீஸ் சாலையில் நின்றிருந்த லாரி மீது இவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியது.

    இதனால் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே கணேசன் பலியானார். இது குறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். இது குறித்து காவேரிப்பட்டணம் காவல் துறையினர் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அப்பகுதி மக்கள் கூறுகையில் இங்கு ஏராளமான மீன் கடைகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை என்பதால் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் சாலைகளை ஆக்கிரமித்து லாரிகளை நிறுத்தி ஓட்டல் கடைகளில் சாப்பிடுகின்றனர்.

    மேலும் இங்கு தாராளமாக குடிப்பதற்கு மதுபானங்கள் கிடைக்கின்றன. இதனால் அப்பகுதியில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து லாரிகள் நிறுத்துவதால் தினமும் சிறுசிறு விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. சில நேரங்களில் விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழக்கின்றனர்.

    பலமுறை நாங்களும் இங்கு லாரிகளை நிறுத்தக் கூடாது என்று பல அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் யாரும் இதுவரை கண்டு கொள்வதில்லை. யாராவது உயிரிழந்தால் இங்கு உள்ள ஓட்டல் கடைகளை சில மணி நேரங்களுக்கு மட்டும் மூடுகின்றனர். பின்பு தங்கள் வியாபாரத்தை அவர்கள் தொடங்குகின்றனர்.

    எனவே உடனடியாக இப்பகுதியில் உள்ள மீன் கடைகள், ஓட்டல் கடைகள் அருகே தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமித்து நிறுத்தும் லாரிகளை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

    • சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 287 மனுக்களை வழங்கினார்கள்.
    • மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் வீட்டு மனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 287 மனுக்களை வழங்கினார்கள்.

    மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பன்னீர்செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பத்மலதா, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ரமேஷ்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பெண்ணேஸ்வரடம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் பவுன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெண்ணேஸ்வரடம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    எனவே காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காவேரிப்பட்டணம் நகரம், தளிஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுளூர், சந்தாபுரம், நரிமேடு, எர்ரஅள்ளி, போத்தாபுரம், பையூர், தேவர்முக்குளம், பெரியண்ணன் கொட்டாய், தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், வீட்டு வசதி வாரியம், பாளையம், மில்மேடு, இந்திரா நகர், குண்டலப்பட்டி, கத்தேரி, கருக்கன்சாவடி, மேல்மக்கான், தாலாமடுவு, பனகமுட்லு, தளியூர், மோரனஅள்ளி, தொட்டிப்பள்ளம், சாப்பர்த்தி, கொத்தலம், குண்டாங்காடு, போடரஅள்ளி, மகராஜகடை, நாரலப்பள்ளி, எம்.சி.பள்ளி, கே.கே.பள்ளி, வள்ளுவர்புரம், பெரிய கோட்டப்பள்ளி, சின்ன கோட்டப்பள்ளி, போத்திநாயனப்பள்ளி, கீழ் கரடிகுறி, பூசாரிப்பட்டி மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.33.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கப்பட உள்ளது.
    • களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமை வகித்து பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    மத்தூர், ஆக.8-

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம், களர்பதி ஊராட்சி அங்கம்பட்டி முதல் மேக்கலாம்பட்டி வரை 1350 மீட்டர் தூரம் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் இருந்து ரூ.33.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்க களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமை வகித்து பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி, களர்பதி ஊராட்சி மன்றத்துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி, அ.தி.மு.க ஒன்றிய

    அவைத் தலைவர் சென்னகிருஷ்ணன், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முக்கிய பிரமுகர்களான எல்.சி. முருகன், வேடி, பாலு, அ.தி.மு.க தகவல் தொழில் நுட்ப பிரிவு பூபதி, மனோஜ் (எ) அண்ணாமலை, ஊராட்சி செயலர் சரவணன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து ெகாண்டனர். 

    • ஆய்வு செய்துகொண்டிருந்தபோது பட்டாசு வெடித்து 3 அதிகாரிகள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • படுகாயம் அடைந்த அதிகாரிகள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பட்டாசு குடோனை அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றனர். ஆய்வு செய்துகொண்டிருந்தபோது பட்டாசு வெடித்து 3 அதிகாரிகள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    நிலவரி திட்ட டி.ஆர்.ஓ மற்றும் தாசில்தார், தேன்கனிக்கோட்டை தாசில்தார், குடோன் மேனேஜர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்த அதிகாரிகள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • மனமுடைந்த கார்த்திக் நேற்றுமுன்தினம் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • காவேரிப்பட்டணம் போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த சவுளூரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). கட்டிட மேஸ்திரி. இவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, தன் மாமாவின் மோட்டார் சைக்கிளை பூமாலை நகரை சேர்ந்த விஜயகுமார் (29) என்பவரிடம் அடமானம் வைத்து, ரூ.15 ஆயிரம் வாங்கியுள்ளார். ஆனால் கடன் தொகையை கட்டவில்லை. அதனால் விஜயகுமார் மற்றும் அவரது தரப்பை சேர்ந்தவர்கள் கார்த்திக்கை திட்டி அடித்துள்ளனர்.

    இதையடுத்து கார்த்திக் குடும்பத்தினர் விஜயகுமாரிடம், ரூ.10 ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு மீதம், 5 ஆயிரத்தை சிறிது நாளில் கட்டிவிடுகிறோம் என நேற்று முன்தினம் கூறியுள்ளனர். ஆனால் அதையும் கேட்காத விஜயகுமார் தரப்பினர் கார்த்திக் குடும்பத்தினரை மீண்டும் திட்டி அவமானப்படுத்தியுள்ளனர். இதில், மனமுடைந்த கார்த்திக் நேற்றுமுன்தினம் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த வழக்கை காவேரிப்பட்டணம் போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதனை கண்டித்து கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் மாதேஷ், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், சசிகுமார் மற்றும் கார்த்திக்கின் உறவினர்கள் நேற்று போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து இந்த வழக்கை தற்கொலைக்கு தூண்டிய வழக்காக மாற்றி போலீசார், விஜயகுமார், அவரது தந்தை ராமசாமி (55) மற்றும் அண்ணன் சிவக்குமார்(33) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆத்திரமடைந்த காவலாளியான 2 பேரும் சேர்ந்து பாலாஜியை கட்டையால் சரமாரியாக தாக்கினர்.
    • அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பாலாஜியை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் அருகே உள்ள சின்னஎலத்தகிரியைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் பாலாஜி (வயது23). இவர் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.

    அதே நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிஜாய்தர்கி (28), அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாமகுமார் ராஜ்பவன்சி (24) ஆகிய 2 பேரும் காவலாளியாக வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பாலாஜி வேலையை முடித்து விட்டு வீடு திரும்பி சென்றார். அப்போது அவரை பார்த்து வடமாநில தொழிலாளியான பிஜாய்தர்கியும், பாமகுமார் ராஜ்பவன்சியும் சேர்ந்து கேலி, கிண்டல் செய்தனர்.

    இதுகுறித்து அவர்களிடம் பாலாஜி தட்டிகேட்டதால் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த காவலாளியான 2 பேரும் சேர்ந்து பாலாஜியை கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த அவர் வலியால் அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பாலாஜியை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த சம்பவம் குறித்து பாலாஜி ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வடமாநில தொழிலாளிகள் 2 பேரை கைது செய்தனர்.

    • வனத்துறையினர் அவர்களை விரட்டி சென்றபோது மோட்டார் சைக்கிளில் தப்பிஓடிய 3 பேரும் சிறிது தூரத்தில் தவறி விழுந்தனர்.
    • வெங்கடேஷ் இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் கானட்டி முனியப்பன் கோவில் அருகில் வனக் காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களை வனத்துறையினர் நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் நிற்காமல் சென்றனர். அவர்களில் ஒருவர் நெற்றியில் டார்ச் லைட் மாட்டி இருந்தார். மற்ற 2 பேரில் ஒருவர் கையில் நாட்டுத் துப்பாக்கியும், மற்றொருவர் வாகனத்தை ஓட்டியபடியும் இருந்தார்.

    இதையடுத்து வனத்துறையினர் அவர்களை விரட்டி சென்றபோது மோட்டார் சைக்கிளில் தப்பிஓடிய 3 பேரும் சிறிது தூரத்தில் தவறி விழுந்தனர்.

    இந்நிலையில் தவறி விழுந்தவர்களில் ஒருவர் மட்டும் வனத்துறையினரிடம் பிடிபட்டார்.

    வனத்துறையினர் பிடித்த நேரத்தில் அந்த நபர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கிய அவருக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நாட்றாம்பாளையத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்தனர்.

    அவர்கள் பரிசோதித்த போது அவர் இறந்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கும், அஞ்செட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் அஞ்செட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் இறந்தவர் பெயர் வெங்கடேஷ் (வயது 48), கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா சேசுராஜபுரம் அருகே உள்ள அட்டப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், முயல் வேட்டைக்காக அங்கு வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து வனத்துறையினர் உடலை தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் வெங்கடேஷ் இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

    இந்நிலையில் வெங்கடேஷ் இறந்த தகவல் அறிந்து அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் அட்டப்பள்ளம் அருகே பூமரத்துகுழி என்னும் இடத்தில் திரண்டனர்.

    அவர்கள் அங்குள்ள வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடியை சூறையாடி தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறியதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் வெங்கடேஷின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள 2 பேரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, அட்டப்பள்ளம் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கடந்த மாதம் 18-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே பாலேகுளி பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது40). தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக குமார் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் எந்த பலனும் அளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த காணப்பட்ட அவர் கடந்த மாதம் 18-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குமார் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேண்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸை அங்கு நின்று கொண்டிருந்த சிறுவன் பிக்பாக்கெட் அடித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடமுயன்றான்.
    • சுதாரித்து கொண்ட பெரியசாமி அந்த சிறுவனை மடக்கி பிடித்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சாந்தியப்பன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. விவசாயி. இவர் நேற்று கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் ராயக்கோட்டை செல்லும் மேம்பாலம் அருகே உள்ள பேக்கரிகடையில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸை அங்கு நின்று கொண்டிருந்த சிறுவன் பிக்பாக்கெட் அடித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடமுயன்றான். உடனே சுதாரித்து கொண்ட பெரியசாமி அந்த சிறுவனை மடக்கி பிடித்தார்.

    இதைத்தொடர்ந்து பெரியசாமி அந்த சிறுவனை கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த சிறுவனிடம் போலீசார விசாரித்ததில் அரசமரத்துப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர். 

    ×