என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • குமரக்குன்று ஸ்ரீ முருக பெருமானின் ரத உற்சவ அலங்கரிக்கப்பட்ட தேர் பவனியை பக்தர்களால் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விழா குழுவினர் சார்பில் காலை முதல் மாலை வரை சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மாதம் பதிகமலாபுரம் ஆற்றங்கரை யில் குமரக்குன்று ஸ்ரீ முருகபெருமானின் 66-ம் ஆண்டு ஆடிக் கிருத்திகை தேர் திருவிழா சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் மிக சிறப்பாக நடைபெற்றது.

    இத்தேர் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் மாதம்பதி, கமலாபுரம், ஒட்டப்பட்டி கவுண்டனூர், புளி யாண்டப்பட்டி, மேட்டுக் கொட்டாய் (கோணிக்கால்) உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புஷ்பக் காவடி, பால் காவடி, பன்னீர் காவடி, ஆறுப்படை காவடி, பன்னிரெண்டு படைக் காவடி, அத்துடன் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், தேர் இழுத்தும், புஷ்பரதம், முத்தரம், பவளரதம், கரம் எடுத்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் உடல் முழுவதும் எழுமிச்சை பழம் கோர்த்தும் பக்தி பரவசத்துடன் குமர குன்று ஸ்ரீ முருகபெருமானுக்கு தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வழிப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து மூன்று பக்தர் தங்களது மார்பு மீது மஞ்சள் இடித்தும், அதேப்போல் ஸ்ரீ முருக பெருமான் ஆற்றங்கரையில் உள்ள தெப்ப தேர் விடுதலும், விமான செடல் மூலம் பக்தர் ஒருவர் தனது முதுகில் இரும்பு கொக்கியால் கோர்த்து தொங்கியவாறு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை காட்டுதல், பூ மாலையிடுதல், குழந்தைகளை தூக்கி கொண்டு ஆசிர்வாதம் வழங்குதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

    குமரக்குன்று ஸ்ரீ முருக பெருமானின் ரதஉற்சவ அலங்கரிக்கப்பட்ட தேர் பவனியை பக்தர்களால் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இவ்விழாவில் மத்தூரில் உள்ள பெங்களுரு-திருவண்ணாமலை தேசிய நெடுச்சாலையில் செயல்பட்டு வரும் குரு மார்டன் வேபிரிட்ஜின் உரிமையாளர்களான அரிமா திருப்பதி, அரிமா பிரேமசுதா தம்பதியினர் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர்.

    திருவிழாவிற்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா குழுவினர் சார்பில் காலை முதல் மாலை வரை சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை மாதம்பதி கமலாபுரம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக பால்குடம் சுமந்து சென்று, சாமிக்கு பாலாபிஷேக சிறப்பு பூஜையும் நடைபெற்றன.
    • இதே போல் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் முருக பெருமானின் வேட மணிந்து நடனமாடி பக்தர்களை மகிழ்வித்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள சின்ன ஆலேரஹள்ளி பகுதியில் ஸ்ரீ குழந்தை வடிவேல் முருகன் ஆலயத்தின் 53-ம் ஆண்டு ஆடி கிருத்திகை தேர் திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது.

    முன்னதாக கடந்த 4-ம் தேதி ஊர் பொதுமக்கள் சார்பில் கொடியேற்றுதல் மற்றும் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு கங்கனம் கட்டுதலுடன் இடும்பன் சாமிக்கு முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இதனை தொடர்ந்து 8-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சாமிக்கு கங்கை பூஜையுடன் காவடிகள் அலங்கரித்தல் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் பூஜைகள் நடைபெற்றன.

    அதனையடுத்து பிற்பகல் 2 மணியளவில் விரதம் இருந்த பக்தர்கள் முருக பெருமானின் கோவிலில் பூசாரியின் மூலம் அலகு குத்துதல், முதுகில் தேர் இழுத்தல், உடல் முழுவதும் எழுமிச்சை பழம் கோர்த்தல், பால் காவடி எடுத்தல், பன்னீர் காவடி எடுத்தல், புஷ்ப காவடி எடுத்தல், கரகம் எடுத்தல் உள்ளிட்டவைககளுடன் சின்ன ஆலேரஹள்ளி பகுதியில் இருந்து ஊர்வ லமாக சென்று கோவிலை வலம் வந்து நேர்த்தி கடனை செலுத்தினர்.

    இதனையடுத்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக பால்குடம் சுமந்து சென்று, சாமிக்கு பாலாபிஷேக சிறப்பு பூஜையும் நடைபெற்றன.

    இதே போல் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் முருக பெருமானின் வேட மணிந்து நடனமாடி பக்தர்களை மகிழ்வித்தனர்.

    இத்தேர் திருவிழாவிற்கு சுற்று வட்ட பகுதிகளை சேர்ந்த 7-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா பாஸ்கர், ஊர் கவுண்டர்கள் முத்து, ராஜா, பழனி, கண்ணன், செந்தில் மந்திரி கவுண்டர், ராஜா உள்ளிட்டோர் செய்திரு ந்தனர்.

    இதனை தொடர்ந்து விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை சிறப்பு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    • மாங்கனி மலை ஸ்ரீவே ல்முருகன் பூப்பல்லக்கில் அலங்கரி க்கப்பட்ட தேரில் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அரு ள்பாலித்தார்.
    • விழாவின் முக்கிய நாளான ஆடிக்கிருத்திகை இன்று முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் காலை முதலே தொடங்கியது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் சந்தூர் கிராமத்தில் மாங்கனி மலை மீது ஸ்ரீ வேல்முருகன் வள்ளி தெய்வசேனா கோவில் அமைந்துள்ளது.

    இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்கிருத்திகை விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டில் 54-ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தநிலையில் நேற்று இரவு 7 மணியளவில் மாங்கனி மலை ஸ்ரீவே ல்முருகன் பூப்பல்லக்கில் அலங்கரி க்கப்பட்ட தேரில் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அரு ள்பாலித்தார்.

    அப்போது மாக்கி ரெட்டிகொட்டாய் சரவணா குழுவினரால் சிலம்பாட்டம், காவடி ஆட்டம் மற்றும் கிருஷ்ணன் பாண்டுரங்கன் குழுவினரால் நையாண்டி மேளம், பம்பை வைத்தியம், கரகாட்டம் உள்ளிட்டவை நடந்தது.

    விழாவின் முக்கிய நாளான ஆடிக்கிருத்திகை இன்று முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் காலை முதலே தொடங்கியது. ஸ்ரீ வேல்முருகன் வள்ளி தெய்வசேனா சமேத சிறப்பு அலங்காரத்தில் பக்த ர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

    இதே போல், காலை 7 மணியளவில் சந்தூர் மாரியம்மன் கோயில் அருகே ஸ்ரீ வீரபத்திரசுவாமி பக்தர்களின் சேவ ஆட்ட நிகழ்ச்சியும், பக்தர்களின் தலைமீது தேங்காய் உடைத்தல், காளை மாட்டின் தலைமீதும் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    காலை 11 மணியளவில் பக்தர்கள் சலக்கு போட்டு கொண்டும், பால்காவடி, புஷ்பகாவடி, மயில் காவடி, சிலம்பாட்டம் கரகாட்ட த்துடன் ஊர்வலமாக முருகன் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவில் அருகே பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் உள்ளிட்டவை வழங்க பட்டன. போச்சம்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மதுக்குடிக்கும் பழக்கம் இருப்பதால், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார்.
    • கோவிந்தசாமி போதையில் மரவள்ளி கிழங்கில் விஷம் கலந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே ஆனரங்கன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது46). இவருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருப்பதால், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார்.

    இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி கோவிந்தசாமி போதையில் மரவள்ளி கிழங்கில் விஷம் கலந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தார். உடனேஅவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கோவிந்தசாமி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து சிங்காரப் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்தசாமி என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவரது மகன் தீபக் நாராயணன் (வயது19). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரியவந்தது. இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி தீபக் நாராயணன் தங்கி இருந்த அறையில் திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து தீபக் நாராயணன் என்ன காரணத்திற்காக தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெண் தற்கொலை

    இதேபோன்று, ஓசூர் அருகே நாகொண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கவுரம்மா (63). இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பலன் அளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த கவுரம்மா நேற்று முன்தினம் திடீரென்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை அரசகுப்பம் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (23). இவருக்கு அடிக்கடி வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனகைளில் சிகிச்சை பெற்று வந்தும் பலன் அளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த சுரேஷ் நேற்று முன்தினம் திடீரென்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தி.மு.க.சார்பில், வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக்கூட்டம், நேற்று நடைபெற்றது.
    • இக்கட்டத்திற்கு மேற்கு பகுதி செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான ஆனந்தய்யா தலைமை தாங்கினார்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகர மேற்கு பகுதி தி.மு.க.சார்பில், வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக்கூட்டம், நேற்று நடைபெற்றது.

    ஓசூர்-பாகலூர் சாலையில், என்.ஜி.ஓ. காலனியில் உள்ள தனியார் ஓட்டல் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கட்டத்திற்கு மேற்கு பகுதி செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான ஆனந்தய்யா தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக மாநகர தி.மு.க. செயலாளரும், மாநகராட்சி மேயருமான எஸ்.ஏ.சத்யா கலந்து கொண்டு கட்சியினருக்கு ஆலோசனைகள் வழங்கி, சிறப்புரையாற்றினார்.

    மேலும் இதில், துணை செயலாளர் ரவிகுமார், கருணாநிதி, மாமன்ற உறுப்பினர்கள் மாதேஸ் வரன், சென்னீரப்பா, மற்றும் மேற்கு பகுதி நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.

    • உடனே விபத்தில் சிக்கிய 2 பேரை பத்திரமாக மீட்டனர்.
    • அங்கு சிகிச்சை பலனின்றி டிரைவர் கோபால் உயிரிழந்தார்.

    சூளகிரி,  

    உடுமலைபேட்டையில் இருந்து ஓசூர் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை கோபால் என்பவர் ஓட்டி வந்தார். உடன் மணி என்பவர் இருந்தார்.

    இந்த நிலையில் இந்த கண்டெய்னர் லாரி இன்றுகாலை கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே அலகுபாவி என்கிற பகுதியில் வந்த போது முன்னால் சென்ற லாரி மீது கண்டெய்னர் லாரி மோதியது. இதில் லாரியின் முன்பகுதி உருக்குலைந்தது. லாரியின் இருந்த 2 ேபரும் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.

    இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே விபத்தில் சிக்கிய 2 பேரை பத்திரமாக மீட்டனர். பின்னர் படுகாயம் அடைந்த அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி டிரைவர் கோபால் உயிரிழந்தார்.

    இந்த விபத்தால் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ் சாலையில் 4 மணி ேநரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கருணாநிதி உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில் குமார் தலைமை வகித்தார்.

    காவேரிப்பட்டிணம்,  

    கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப் பட்டினம் ஒன்றியம் காவேரிப்பட்டினம் பேருந்து நிலையத்தில் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில் குமார் தலைமையில் கருணாநிதி உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் கவுன்சிலர் கள் பிரமுகர்கள், பொது மக்கள் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    • அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும், இந்திய தேசியக்கொடி விற்பனை தொடங்கி உள்ளது.
    • இணையதளத்தை பயன்படுத்தி தபால்காரர் மூலமாக தங்களின் வீட்டிற்கே வந்து பட்டுவாடா செய்யும் படி முன்பதிவும் செய்துகொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திரத்தின அமுதப்பெரு விழாவினை முன்னிட்டு நமது பாரத பிரதமர் நரேந்திரமோடி, அனைத்து இல்லங்களிலும் தேசியக்கொடியை ஏற்றி கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய தேசியக் கொடி அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில், கிருஷ்ணகிரி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும், இந்திய தேசியக்கொடி விற்பனை தொடங்கி உள்ளது. இதன் விலை ரூ.25 மட்டுமே ஆகும். இணையதளத்தை பயன்படுத்தி தபால்காரர் மூலமாக தங்களின் வீட்டிற்கே வந்து பட்டுவாடா செய்யும் படி முன்பதிவும் செய்துகொள்ளலாம்.

    எனவே, பொதுமக்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களில் ரூ.25 மட்டுமே செலுத்தி, தேசியக்கொடியை பெற்றுக்கொண்டு, தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு கொடுத்து சுதந்திரதின அமுதப்பெரு விழாவினை இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முனியப்பன் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி முனியப்பனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
    • சுமார் 2000-க்கும் மேற்பட்ட கோழிகள் 500-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செய்தனர்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள மகா முனியப்பன் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி முனியப்பனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    ஊத்தங்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்கள் அதிகாலை முதலே தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் விதமாக கோழி, சேவல்கள், ஆடுகள் போன்றவற்றை பலியிட்டு பிரார்த்தனை செய்தனர்.

    சுமார் 2000-க்கும் மேற்பட்ட கோழிகள் 500-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செய்தனர். மேலும் 5 நாட்களுக்கு மாலை நேரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    மேலும் பெண்கள் தாங்கள் அணிந்து வரும் தங்க ஆபரணங்களை பாதுகாக்கும் விதமாக தொடர்ச்சியாக ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை காவல்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர்.

    • அத்திமுகத்தில் உள்ள அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், முதலாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    • பால கிருஷ்ணன் மற்றும் கூத்தரசன், கல்லூரி ஆசிரியர்கள், மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே அத்திமுகத்தில் உள்ள அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், முதலாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு, அதியமான் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் டாக்டர் பானுமதி மற்றும் அதியமான் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிர்வாக அறங்காவலர் டாக்டர் லாஸ்யா ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன் வரவேற்றார்.

    இந்நிகழ்ச்சியில், டாடா பவர் கம்பெனியின் மூத்த ஆலோசகர் ஜெகநாதன் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் முனைவர் பாலசுப்பிரமணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்தி பேசினர்.

    இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு பதக்கங் களும், உதவித்தொகையும் வழங்கப்பட்டது. மேலும் இந்த விழாவில், கல்லூரி மேலாளர் குப்புசாமி, நிர்வாக அலுவலர் விஜயேந்தரன், அதியமான் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அறங்காவலர்கள் சுரேஷ் பாபு, பால கிருஷ்ணன் மற்றும் கூத்தரசன், கல்லூரி ஆசிரியர்கள், மற்றும் மாண,வ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    • சுஜாதா அண்ணா நகரில் உள்ள ஒரு குளத்தில் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே தேர்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சுஜாதா (வயது37). சற்று மனநலம் பாதிக்கப்பட்டு காணபட்ட இவர் கடந்த 5-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை. இதனால் பதறிப்போன முருகேசன், தனது மனைவியை காணவில்லை என்று பல்வேறு இடங்களில் தேடிபார்த்தார். அப்போது சுஜாதா அண்ணா நகரில் உள்ள ஒரு குளத்தில் பிணமாக கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து முருகேசன் பேரிகை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருளர் காலனியில் 14 வீடுகளில் 60 பேர் வசித்து வருகின்றோம். இங்குள்ள 15 மாணவ, மாணவியருக்கு சாதிச்சான்றுகள் இல்லை.
    • சாதிச்சான்று கேட்டு பல முறை மனு அளித்தும் இதுவரை வழங்கவில்லை. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே ஒப்பதவாடி பக்கமுள்ள கிருஷ்ணாநகர் இருளர் காலனியைச் சேர்ந்த இருளர் இன மக்கள் நேற்று பள்ளி, மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் சாதிச்சான்று கேட்டு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் காலனியில் 50 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு 50 மாணவ, மாணவிகள் 6 முதல் 10-ம் வகுப்பு வரை கல்வி படிக்கிறார்கள். இதில் 17 பேருக்கு சாதிச்சான்றுகள் இல்லை.

    கடந்த 2020-ம் ஆண்டு முதல் சாதிச்சான்று கேட்டு கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி சாதிச்சான்று வழங்க வேண்டும்.

    அதே போல், கிருஷ்ண கிரி மாவட்டம், பர்கூர் தாலுகா மல்லப்பாடி, குள்ளங்குட்டை கிரிக வட்டம் இருளர் காலனியில் வசிக்கும் பொதுமக்கள், சாதிச்சான்று மற்றும் அடிப்படை வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    அதில், கிரிக வட்டம் இருளர் காலனியில் 14 வீடுகளில் 60 பேர் வசித்து வருகின்றோம். இங்குள்ள 15 மாணவ, மாணவியருக்கு சாதிச்சான்றுகள் இல்லை. சாதிச்சான்று கேட்டு பல முறை மனு அளித்தும் இதுவரை வழங்கவில்லை. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கிறது.

    எனவே மாணவர்களின் நலன் கருதி சாதிச்சான்று வழங்க வேண்டும். அதே போல் எங்கள் காலனியில், குடிநீர் பற்றாக்குறை உள்ளது. சாலை வசதி இல்லை. சாக்கடைக் கால்வாய் வசதியும் இல்லை. எனவே அடிப்படை வசதிகளையும் செய்துதர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    ×