என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண் உள்பட 4 பேர் தற்கொலை
- மதுக்குடிக்கும் பழக்கம் இருப்பதால், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார்.
- கோவிந்தசாமி போதையில் மரவள்ளி கிழங்கில் விஷம் கலந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே ஆனரங்கன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது46). இவருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருப்பதால், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார்.
இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி கோவிந்தசாமி போதையில் மரவள்ளி கிழங்கில் விஷம் கலந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தார். உடனேஅவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கோவிந்தசாமி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சிங்காரப் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்தசாமி என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவரது மகன் தீபக் நாராயணன் (வயது19). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரியவந்தது. இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி தீபக் நாராயணன் தங்கி இருந்த அறையில் திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து தீபக் நாராயணன் என்ன காரணத்திற்காக தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் தற்கொலை
இதேபோன்று, ஓசூர் அருகே நாகொண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கவுரம்மா (63). இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பலன் அளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த கவுரம்மா நேற்று முன்தினம் திடீரென்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை அரசகுப்பம் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (23). இவருக்கு அடிக்கடி வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனகைளில் சிகிச்சை பெற்று வந்தும் பலன் அளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த சுரேஷ் நேற்று முன்தினம் திடீரென்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






